வலைவாசல்:புவியியல்
புவியியல் என்பது புவி, அங்குள்ள நிலம், பல்வேறு அம்சங்கள், அதிலுள்ள உயிர் வகைகள் மற்றும் தோற்றப்பாடுகள் என்பவற்றை விளக்கும் ஒரு துறையாகும். இச்சொல்லை நேரடியாக மொழி பெயர்க்கும்போது அது புவியைப்பற்றி விளக்குவது அல்லது எழுதுவது என்பதைக் குறிக்கும். புவியியல் ஆய்வில் வரலாற்று ரீதியாக நான்கு மரபுகள் காணப்படுகின்றன. 1) இயற்கை மற்றும் மனிதத் தோற்றப்பாடுகள் தொடர்பிலான இடம்சார் பகுப்பாய்வு, இது பரம்பல் அடிப்படையிலான புவியியல் ஆய்வு. 2) நிலப்பரப்பு ஆய்வு, இது இடங்களும், நிலப்பகுதிகளும் தொடர்பானது. 3) மனிதனுக்கும், நிலத்துக்குமான தொடர்பு பற்றிய ஆய்வு. 4) புவி அறிவியல்கள் தொடர்பான ஆய்வு. ஆனால், தற்காலப் புவியியல், எல்லாவற்றையும் ஒருங்கே தழுவிய ஒரு துறை. இது புவியையும் அதிலுள்ள எல்லா மனித மற்றும் இயற்கைச் சிக்கல்களையும் புரிந்துகொள்ள முயல்கிறது. எங்கெங்கே பொருள்கள் இருக்கின்றன என்பதை மட்டுமன்றி, அவை எவ்வாறு மாறுகின்றன, எப்படித் தற்போதைய நிலையை அடைந்தன என்பவற்றை அறிவது தற்காலப் புவியியலின் நோக்கமாகும். மனிதனுக்கும், இயற்பு அறிவியலுக்கும் இடையே உள்ள தொடர்பாக அமைவதால், புவியியல் துறையானது, மானிடப் புவியியல், இயற்கைப் புவியியல் என இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. தொகு
சிறப்புக் கட்டுரை
கிளிமஞ்சாரோ மலை டான்சானியா நாட்டின் வடகிழக்குப் பகுதியில் அமைந்திருக்கும் மிக உயரமான எரிமலை வகையைச் சேர்ந்த மலை. இதுவே ஆப்பிரிக்காக் கண்டத்தில் உள்ள மலைகள் யாவற்றினும் மிக உயர்ந்த மலை. இதன் உயரம் கடல் மட்டத்திலிருந்து 5895 மீட்டர் (19,340 அடி) ஆகும். இம்மலையின் மிக உயரமான முகட்டுக்கு 'உகுரு' என்று பெயர். கிளிமஞ்சாரோ மலையில் கிபோ, மாவென்சி, இழ்சிரா ( Kibo, Mawensi, Shira) என மூன்று எரிமலை முகடுகள் உள்ளன. இம்மலை, பல உள்ளடுக்கு கொண்ட எரிமலை வகையைச் சேர்ந்த எரிமலை (பல்லுள்ளடுக்கு எரிமலை, stratovolcano). கிளிமஞ்சாரோ எந்தவொரு மலைத்தொடரையும் சாராத தனிமலை. இமயமலைத் தொடர்களில் உள்ள மலைகளை ஒப்பிடும் பொழுது கிளிமஞ்சாரோவின் உயரம் அதிகம் இல்லை. ஆனால் கிளிமஞ்சாரோதான் உலகில் உள்ள தனிமலைகள் யாவற்றினும் மிக உயரமான மலை ஆகும். இம்மலையில் மிக உயரமான முகட்டு உச்சியாகிய உகுரு கிபோ எரிமலையில் உள்ளது. கிபோ மலையின் உச்சியில் காணப்படும் எரிமலைக் குழி 2.4 கி.மீ (1.5 மைல்) விட்டம் உடையது. உகுரு முகடு ஆப்பிரிக்காவிலேயே உயரமான இடமாகையால், உலகின் ஏழு கொடுமுடிகள் (seven summits) என்று கருதப்படும் உயரான முகடுகளில் ஒன்றாகக் கருதப்படுகின்றது.
தொகு
சிறப்புப் படம்மட்டக்களப்பு வாவி இலங்கையின் மட்டக்களப்பில் மட்டக்களப்புப் பிரதேசத்தை ஊடறுத்து வடக்குத் தெற்காக அமைந்துள்ளது. சுமார் 30 மைல் நீளமானதும் 27,527 ஏக்கர் பரப்பளவினையும் கொண்ட இது இலங்கையின் மிகப் பெரிய வாவி என்று கருதப்படுகிறது. தெற்கு மேற்காகக் கடலுடன் கலக்கும் இவ்வாவி கடலிலிருந்து ஏறக்குறைய இருபது மைல் நீளம் வரை உவர்நீரையும் ஏனைய பகுதிகளில் நன்னீரையும் கொண்டுள்ளது. மட்டக்களப்பு வாவியின் கிழக்குப் பகுதிகள் சூரியன் எழுவதால் எழுவான்கரை என்றும் மேற்குப் பகுதியில் சூரியன் மறைவதால் படுவான்கரை என்றும் அழைக்கப்படுகின்றன. தொகு
செய்திகளில் புவியியல்
தொகு
புவியியலாளர்கள்
சர் ஹென்றி நிக்கலஸ் ரிட்லி என்பவர் மலாயாவில் ரப்பர் மரங்களை அறிமுகப்படுத்தியவர். மலாயாவின் பொருளாதாரப் போக்கை மாற்றி அமைத்த பிரித்தானியத் தாவரவியலாளர். இவர் சிங்கப்பூர் தாவரப் பூங்காவின் முதல் தாவரவியலாளர் மற்றும் முதல் புவியியலாளராகவும் பணியாற்றியவர். இவர் பேராக், கோலாகங்சாரில் நட்டுவைத்த முதல் ரப்பர் மரம் 135 ஆண்டுகளாக இன்றும் இருக்கிறது. 1877 இல் அறிவியலில் ஆக்ஸ்பர்ட் பல்கலைக்கழகத்தில் இருந்து சிறப்புப் பட்டம் பெற்றார். அதே ஆண்டு பிரேசில் நாட்டிற்குச் சென்று தாவர ஆய்வுகளை மேற்கொண்டார். 1888ஆம் ஆண்டு சிங்கப்பூரின் தாவரவியல் பூங்காவிற்கு இயக்குநராக அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு பணி புரியும் போது ரப்பர் மரங்களின் தாவரப் பயன்பாடுகள் மலாயா, சிங்கப்பூருக்கு பிரகாசமான எதிர்காலத்தைக் கொண்டு வரும் என்பதை உணர்ந்தார். ஆகவே, மலாயாத் தொடுவாய் நிலப்பகுதிகளில் ரப்பர் மரங்களை நட வேண்டும் என்று பிரசாரம் செய்தார்.
தொகு
உங்களுக்குத் தெரியுமா...
தொகு
இதே மாதத்தில்
தொகு
புவியியல் கண்டங்கள்
தொகு
பகுப்புகள்தொகு
நீங்களும் பங்களிக்கலாம்
தொகு
விக்கித்திட்டங்கள்
தொகு
தொடர்பான தலைப்புகள் |