தட்பவெப்பநிலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
வானிலை உடன் குழப்பிக் கொள்ளாதீர்கள்.
உலகம் தழுவிய வானிலை வகைப்பாடு

தட்பவெப்பநிலை (Climate) என்பது ஒரு குறிப்பிட்ட பகுதியில் நீண்டகால அடிப்படையிலான வெப்பநிலை, ஈரப்பதன், மழைவீழ்ச்சி, வளிமண்டலத் துகள் எண்ணிக்கை போன்ற பல காரணிகளை உள்ளடக்கியது ஆகும். இது வானிலை (weather) என்பதிலிருந்து வேறுபட்டது. வானிலை என்பது குறிப்பிட்ட நேரத்தின் நிலைமைகள் தொடர்பானது ஆகும். குறிப்பிட்ட இடமொன்றின் தட்பவெப்பநிலை அது இருக்கும் நில நேர்க்கோடு, நிலவகை, குத்துயரம், பனி மூடல், அருகிலுள்ள பெருங்கடல்களும் அவற்றில் நீரோட்டங்களும் போன்றவற்றினால் தாக்கத்துக்கு உள்ளாகிறது. வெப்பநிலை, மழைவீழ்ச்சி முதலிய சுட்டளவுகளைப் பயன்படுத்தி, தட்பவெப்பநிலையைக் குறிப்பிட்ட தட்பவெப்பநிலை வகைகளாக வகைப்படுத்த முடியும். மிகவும் பொதுவாகப் பயன்படுத்தப்படும் வகைப்பாட்டு முறை தொடக்கத்தில் விளாடிமிர் கோப்பென் என்பவரால் உருவாக்கப்பட்டது ஆகும். 1948 ஆம் ஆண்டிலிருந்து பயன்பாட்டிலிருக்கும் தோர்ண்த்வெயிட் முறை முன் கூறிய வெப்பநிலை மழை வீழ்ச்சி ஆகியவற்றுடன் ஆவியூட்டளவையும் சேர்த்துக் கொள்கிறது. இவ்வகைப்பாடு விலங்கினங்களின் பல்வகைமை பற்றியும், அவற்றின் மீதான தட்பவெப்பநிலை மாற்றங்களின் தாக்கம் பற்றியும் ஆய்வு செய்வதற்குப் பயன்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தட்பவெப்பநிலை&oldid=1437100" இருந்து மீள்விக்கப்பட்டது