வலைவாசல்:புவியியல்/சிறப்புப் படம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தொகு  

சிறப்புப் படம்

பயன்பாடு

சிறப்புப் பட துனைப் பக்கத்தின் வடிவமைப்பு வலைவாசல்:புவியியல்/சிறப்புப் படம்/வடிவமைப்பு.

சிறப்புப் படம்

வலைவாசல்:புவியியல்/சிறப்புப் படம்/1

சலர் தி தலர் உப்பளம்
படிம உதவி: Luca Galuzzi

சலர் தி தலர், அந்தீசு மலைத்தொடரின் சிலி பகுதியில் உள்ள உப்பளத் தொகுப்பு ஆகும். இதன் மொத்த பரப்பளவு 46 சதுர கிலோ மீட்டர்கள்.


வலைவாசல்:புவியியல்/சிறப்புப் படம்/2

கஞ்சன்சங்கா சிகரம்
படிம உதவி: Aaron Ostrovsky

கஞ்சன்சங்கா இமயமலைத்தொடரில் இந்தியாவிற்கும் நேபாளத்திற்கும் இடையில் அமைந்துள்ளது. இது நேபாளத்தின் இரண்டாவது உயரமான மலையும் இந்தியாவின் மிக உயரமான மலையும் ஆகும். கஞ்சன்சங்கா என்பது பனியின் ஐந்து புதையல்கள் என்ற பொருள்தரும். இதில் மொத்தம் சிகரங்கள் உள்ளன. அவற்றில் நான்கு மீ உயரத்திற்கு அதிகமானவை. 1852ஆம் ஆண்டு வரை உலகின் மிக உயரமான சிகரமாகக் கருதப்பட்டு வந்தது. பின்னர் நடந்த கணக்கெடுப்புகளில் எவரெஸ்ட்டே உயர்ந்தது என்று முடிவு செய்யப்பட்டது.


வலைவாசல்:புவியியல்/சிறப்புப் படம்/3

ஊலூரூக் குன்று
படிம உதவி: Thomas Schoch

இடத்திற்கேற்ப தன் நிறத்தை மாற்றிக் கொள்ளும் பச்சோந்தியைப் போல தட்ப வெப்ப நிலைக்கேற்ப தன் நிறத்தை மாற்றிக் கொள்ளும் குன்று ஊலூரூ. இதனால் இது பச்சோந்திக் குன்று எனவும் அழைக்கப்படுகிறது. இது ஆத்திரேலியாவின் வடக்கு மாநிலத்தில் உள்ளது. 338 மீட்டர் உயரமும் அடிப்பாகத்தில் 10 கி.மீ அகலமும் கொண்டது இக்குன்று. முட்டை வடிவம் கொண்ட இப்பாறையின் அடிவாரத்தில் உள்ள குகைகளில் மிகப் பழமையான சித்திரங்களும் செதுக்கப்பட்ட சில உருவங்களும் உள்ளன. உலகப் பாரம்பரியக் களங்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.


வலைவாசல்:புவியியல்/சிறப்புப் படம்/4

பொத்துவில் மண்மலை
படிம உதவி: தாரிக் அஸீஸ்

இலங்கையின் கிழக்கே பொத்துவில் நகரின் அழகுக்கு அழகு சேர்ப்பதாய் இயற்கையாய் அமைந்துள்ள மண்ணாலான மலை போன்ற அமைப்பு பொத்துவில் மண்மலை ஆகும். இது பொத்துவிலின் கிழக்கே அமைந்துள்ள கடற்கரையை அண்டிய பகுதியில் அமைந்துள்ளது. இந்தியப் பெருங்கடல் ஆழிப் பேரலையின் போது, இந்த மண்மலை ஒரு தடைச்சுவராக செயற்பட்டு அப்பிரதேசத்தில் சூழ வாழ்ந்த மக்களை பாதுகாத்தது.


வலைவாசல்:புவியியல்/சிறப்புப் படம்/5

ஐந்தருவி
படிம உதவி: Aronrusewelt

ஐந்தருவி குற்றாலத்தில் இருந்து சுமார் 5 கி.மீ., தூரத்தில் உள்ளது. திரிகூடமலையின் உச்சியில் இருந்து 40 அடி உயரத்திலிருந்து உருவாகி சிற்றாற்றின் வழியாக ஓடிவந்து 5 கிளைகளாக பிரிந்து விழுகிறது. இதில் பெண்கள் குளிக்க ஒரு அருவி கிளைகளும், ஆண்கள் குழந்தைகளுக்கு 3 கிளைகளும் உள்ளன. இங்கு சாஸ்தா கோயிலும், முருகன் கோயிலும் உள்ளது.


வலைவாசல்:புவியியல்/சிறப்புப் படம்/6

மட்டக்களப்பு வாவி
படிம உதவி: அன்ரன்

மட்டக்களப்பு வாவி இலங்கையின் மட்டக்களப்பில் மட்டக்களப்புப் பிரதேசத்தை ஊடறுத்து வடக்குத் தெற்காக அமைந்துள்ளது. சுமார் 30 மைல் நீளமானதும் 27,527 ஏக்கர் பரப்பளவினையும் கொண்ட இது இலங்கையின் மிகப் பெரிய வாவி என்று கருதப்படுகிறது. தெற்கு மேற்காகக் கடலுடன் கலக்கும் இவ்வாவி கடலிலிருந்து ஏறக்குறைய இருபது மைல் நீளம் வரை உவர்நீரையும் ஏனைய பகுதிகளில் நன்னீரையும் கொண்டுள்ளது. மட்டக்களப்பு வாவியின் கிழக்குப் பகுதிகள் சூரியன் எழுவதால் எழுவான்கரை என்றும் மேற்குப் பகுதியில் சூரியன் மறைவதால் படுவான்கரை என்றும் அழைக்கப்படுகின்றன.


வலைவாசல்:புவியியல்/சிறப்புப் படம்/7

பாசிக்குடா
படிம உதவி: அன்ரன்

பாசிக்குடா மட்டக்களப்பிலிருந்து 35 கிமீ வட மேற்கில் அமைந்துள்ள ஒரு கரையோரப் பிரதேசம். புகழ்பெற்ற உல்லாச பயணிகளைக் கவரும் இடமாக இது உள்ளது. அலைகளின் அகோரமில்லாத, ஆழமில்லாத விசாலமான கடற்பரப்பு, முருகைக்கற்பாறைகள், கடற் தாவரங்கள், கடல் வாழ் உயிரினங்கள் ஆகியவற்றின் இயற்கை வனப்பும், உல்லாச விடுதிகளும், கிடுகுகளால் அழகுற,நேர்த்தியாக வேயப்பட்ட “கபாணா” என்றழைக்கப்படும் உல்லாச விடுதிகளும், படகுச் சவாரிக்கு ஏற்ற கடலும், பாசிக்குடாவின் சிறப்புகளாகும்.


வலைவாசல்:புவியியல்/சிறப்புப் படம்/8

டெயிட் எரிமலை
படிம உதவி: Daniel Gainza

டெயிட் என்பது கேனரி தீவுகளிலுள்ள ஓர் எரிமலை ஆகும். இதன் உயரம் 3,718 மீ ஆகும். இதுவே ஸ்பெயினின் மிக உயர்ந்த பகுதியும் உலகின் மூன்றாவது பெரிய எரிமலையும் ஆகும். இந்த எரிமலை கடைசியாக 1909ஆம் ஆண்டு வெடித்தது. 18,900 எக்டேர் பரப்பளவு கொண்ட இம்மலையைச் சுற்றியுள்ள டெயிட் தேசியப் பூங்கா யுனெஸ்கோவினால் உலகப் பாரம்பரியக் களமாக 2007ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. படத்தில் வடக்கு திசையிலிருந்து இம்மலையின் தோற்றம் காட்டப்பட்டுள்ளது.


வலைவாசல்:புவியியல்/சிறப்புப் படம்/9

எரிகற்குழம்பு
படிம உதவி: Mbz1

எரிகற்குழம்பு (லாவா) என்பது எரிமலை குமுறும் போது வெளிவரும் உருகிய பாறைக் குழம்பைக் குறிக்கும். இது எரிமலையின் துளையில் இருந்து வெளிவருகையில் இதன் வெப்பநிலை 700 °C முதல் 1200 °C வரை இருக்கும். இக்குழம்பின் பாகுநிலை நீரினை விட சுமார் மடங்கு அதிகமாக இருப்பினும், இக்கொதிக்கும் பாறைக் குழம்பு வெகுதூரம் உறையாமல் ஓடக்கூடியது. படத்தில் கிட்டத்தட்ட 10 மீ உயரத்தில் பீய்ச்சி அடிக்கும் எரிகற்குழம்பு காட்டப்பட்டுள்ளது.


வலைவாசல்:புவியியல்/சிறப்புப் படம்/10

ஆகாயகங்கை அருவி
படிம உதவி: Dilli2040

ஆகாயகங்கை அருவி தமிழ் நாட்டில் உள்ள கொல்லி மலையிலுள்ள அய்யாறு ஆற்றின் மீது அமைந்துள்ளது. கொல்லி மலையில் அமைந்துள்ள அரப்பளீசுவரர் கோவிலுக்கு அருகில் இந்த அருவி உள்ளது. அருவியிலிருந்து வெளிவரும் நீரானது கிழக்கு நோக்கி பாய்ந்து திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் புளியஞ்சோலை பகுதியை அடைகிறது. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைவாகவே இருப்பதால், கொல்லி மலை இன்றும் இயற்கை அழகுடனே விளங்குகிறது. படத்தில் அருவியின் முழுத் தோற்றம் காட்டப்பட்டுள்ளது.


வலைவாசல்:புவியியல்/சிறப்புப் படம்/11

2004 இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கம் உருவான இடத்திலிருந்து பல்வேறு நாடுகளுக்கும் பரவிய விதம்
படிம உதவி: Veledan

2004ஆம் ஆண்டு சுமத்ரா தீவின் வடமேற்குக் கரையில் ரிக்டர் என்ற அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் காரணமாக எழுந்த ஆழிப்பேரலையின் விளைவாக இந்தியா உட்பட 6 நாடுகளில் மொத்தமாக பேர் உயிரிழந்தனர். இந்த இயங்குபடத்தில் நிலநடுக்கம் உருவான இடத்திலிருந்து பல்வேறு நாடுகளுக்கும் பரவிய விதம் காட்டப்பட்டுள்ளது.


வலைவாசல்:புவியியல்/சிறப்புப் படம்/12

செயற்கைக் கோளிலிருந்து எடுக்கப்பட்ட ஹவாய் தீவுக்கூட்டத்தின் படம்
படிம உதவி: Jacques Descloitres

ஹவாய் ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். இது ஒரு தீவுக்கூட்டம். ஐக்கிய அமெரிக்காவின் முதன்மையான நிலப்பகுதியிலிருந்து 3700 கி.மீ. தூரத்தில் வட பசுபிக் பெருங்கடலில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் ஒனலுலு. இது ஐக்கிய அமெரிக்காவில் 50 ஆவது மாநிலமாக 1959 இல் இணைந்தது. படத்தில் செயற்கைக் கோளிலிருந்து எடுக்கப்பட்ட இத்தீவுக் கூட்டத்தின் படம் காட்டப்பட்டுள்ளது.


வலைவாசல்:புவியியல்/சிறப்புப் படம்/13

அகத்தியமலை
படிம உதவி: PlaneMad

தமிழ்நாட்டுப் புறத்திலிருந்து அகத்தியமலையின் பரந்த தோற்றம். இம்மலைமுடி மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ளது. இதன் உயரம் 1,868 மீட்டர்கள். நெய்யாறு கானுயிர்க் காப்பகத்தின் ஒரு பகுதியான இது, தமிழக - கேரள மாநிலங்களின் எல்லையில் அமைந்துள்ளது. தாமிரபரணி ஆறு இம்மலையில் தோன்றி திருநெல்வேலி மாவட்டத்தின் ஊடாகப் பாய்கிறது. இம்மலையின் கேரளப்பக்கப் பகுதிகள் தென்மேற்கு பருவப் பெயர்ச்சிக் காற்று மூலம் மழை பெறுகின்றன. ஆனால் தமிழகப் பக்கத்தில் மழைக்காற்று வருவதை இம்மலை தடுத்து விடுவதால், மழை மறைவுப் பகுதி ஒன்று உருவாகி, வறண்டு காட்சி அளிக்கிறது.


வலைவாசல்:புவியியல்/சிறப்புப் படம்/14

சகாரா பாலைவனம்
படிம உதவி: Luca Galuzzi

அகாக்கஸ் மலைகளின் பின்னணியில் மேற்கு லிபியாவில் சகாரா பாலைவனத்தின் ஓர் காட்சி. அகாக்கஸ் மலைகளை வண்ணமய மணல் குன்றுகள், இயற்கை வளைவுகள்,பெரும் பள்ளங்கள், தனியே நிற்கும் பாறைகள் என பலவகையான இயற்கைத் தோற்றங்களில் காணலாம். இது கத் நகரத்துக்கு அருகில் உள்ளதுடன், அல்ஜீரிய நாட்டின் எல்லைக்கும் அண்மையிலேயே இருக்கின்றது.இப் பகுதியில் அதிக அளவில் பாறை ஓவியங்கள் காணப்படுகின்றன.


வலைவாசல்:புவியியல்/சிறப்புப் படம்/15

மூணரின் வனப்பு
படிம உதவி: Bimal K C

மூணார் (அல்லது மூணாறு) தமிழகத்தின் அருகிலுள்ள கேரளத்தின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஓர் அழகிய நகரம். தேயிலை தயாரித்தலே இங்கு முக்கியமான தொழில். முத்தரப்புழா, நல்லதண்ணி, குண்டலா ஆகிய 3 ஆறுகள் சங்கமிக்கும் இடமாததால் மூன்றாறு என்பது இதன் பெயர். இது பேச்சுத் தமிழில் மருவி இப்பொழுது மூணாறு என்று ஆகியுள்ளது. இங்குள்ள தேயிலைத் தோட்டங்களும் இயற்கை எழில் கொஞ்சும் முகில்கள் விளையாடும் மலைமுகடுகளும், வளைந்து நெளிந்து செல்லும் பாதைகளும் கண் கொள்ளாக் காட்சிகளாகும்.


வலைவாசல்:புவியியல்/சிறப்புப் படம்/16

மாலே
படிம உதவி: Shahee Ilyas

மாலே மாலைதீவுகள் குடியரசின் தலைநகரமாகும். இது மாலே தீவில் அமைந்துள்ளது. வணிகத் துறைமுகம் ஒன்று இத்தீவில் அமைந்துள்ளது. மேலும் நாட்டின் முக்கிய பொருளாதார நடவடிக்கைகள் இத்தீவை மையப்படுத்தியே நடைபெறுகின்றன. மாலே அனைத்துலக விமான நிலையம் இத்தீவிற்கு அருகில் அமைந்துள்ளது.


வலைவாசல்:புவியியல்/சிறப்புப் படம்/17

ஆப்கானித்தானின் கந்தகார் நகருக்கருகில் 2008 ஆம் ஆண்டு ஏற்பட்ட புழுதிப்புயல்
படிம உதவி: Tonymapping

புழுதிப்புயல் வறட்சி, மிதவறட்சிப் பகுதிகளில் நிகழும் ஒரு வானிலை நிகழ்வாகும். காற்றின் கதி ஒரு குறித்த அளவைவிட கூடும் போது மணல், புழுதி என்பன மண்ணிலிருந்து அகற்றப்பட்டு காற்றுடன் அடித்துச் செல்லப்படல் புழுதிப்புயல் எனப்படுகிறது. புழுதிப்புயல் காரணமாக மண்ணரிப்பு ஏற்படுகிறது மேலும் மேற்பரப்பு மண் அடித்துச் செல்லப்படுவதால் அப்பகுதியில் வேளாண்மை பாதிக்கப்படுகிறது. புவிக்கு மேலதிகமாக செவ்வாயிலும் புழுதிப்புயல்கள் ஏற்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.


வலைவாசல்:புவியியல்/சிறப்புப் படம்/18

சீயோன் தேசியப் பூங்காவில் ஏஞ்சல் லேண்டிங் என்னுமிடத்திலிருந்து பார்க்கும் போது தோன்றும் காட்சி
படிம உதவி: Diliff

சீயோன் தேசியப் பூங்கா தென்மேற்கு ஐக்கிய அமெரிக்காவின் யூட்டாவில் அமைந்துள்ள ஒரு தேசியப் பூங்காவாகும். செந்நிற நவஜோ என்றழைக்கப்படும் மணற்பாறையினால் ஆன 15 மைல் (24 கிலோமீட்டர்) நீளமானதும் அரை மைல் வரை (800 மீட்டர்) ஆழமும் கொண்ட சீயோன் பள்ளத்தாக்கு இத்தேசியப் பூங்காவின் முக்கிய கவர்ச்சியாகும். பல் வகை தட்பவெப்பநிலை, புவியியல் வலயங்களைக் கொண்டுள்ளமையால் இங்கே உயிரியற் பல்வகைமை செறிவாக உள்ளது. இங்கு பல வகையான நிலைத்திணைகளும், 289 வகையான பறவைகளும், 75 வகை பாலூட்டிகளும் (19 வகை வௌவால்கள் உட்பட), 32 வகை ஊர்வனவும் வாழ்கின்றன.


வலைவாசல்:புவியியல்/சிறப்புப் படம்/19

அம்பேவளை
படிம உதவி: Ekabhishek

இலங்கையின் மலை நாட்டின் அம்பேவளையிலிருந்து தென்மேற்குத் திசையாக தோன்றும் காட்சி. நிலநடுக் கோட்டுக்கு அமையாக அமைந்திருந்தாலும் கடல் மட்டத்திலிருந்து 2500 மீட்டருக்கு மேல் அமைந்துள்ளபடியால் இங்கே ஆண்டு முழுவதும் குளிர்ச்சியான தட்பவெப்பநிலை நிலவுகின்றது. இலங்கையில் பால் பண்ணைகள் அதிகளவில் அமைந்துள்ள ஒரு பகுதியாகும். கடந்த காலத்தில் இதை அண்மித்த பகுதிகளில் உருளைக் கிழங்குப் பண்ணைகள் கூடுதலாக அமைக்கப்பட்டிருந்தன எனினும் சூழலுக்கு ஏற்பட்ட தீங்கு காரணமாக பின்னர் இவை அகற்றப்பட்டன. தொலைவில் தெரியும் முகடு இலங்கையின் முக்கிய வணக்கத்தலங்களுள் ஒன்றான சிவனொளிபாத மலையாகும்.


வலைவாசல்:புவியியல்/சிறப்புப் படம்/20

நயாகரா நீர்வீழ்ச்சி
படிம உதவி: Helen Filatova

நயாகரா நீர்வீழ்ச்சி அல்லது நயாகரா பேரருவி என்பது வட அமெரிக்காவின் வட கிழக்குப் பகுதியில் உள்ள புகழ் மிக்க ஒரு பேரருவி. இது உலகத்திலேயே உள்ள அருங்காட்சிகளில் ஒன்றாக போற்றப்படுகிறது. ஆண்டுதோறும் இதனை பார்க்க 10 மில்லியன் மக்கள் வருகின்றனர். இப்பேரருவி கனடாவிற்கும் ஐக்கிய அமெரிக்க நாடுகளுக்குமான எல்லையில் ஓடும் சுமார் 56 கி.மீ நீளமுள்ள நயாகரா ஆற்றின் பாதி தொலைவில் அமைந்துள்ளது.


வலைவாசல்:புவியியல்/சிறப்புப் படம்/21

கவாசு அருவி
படிம உதவி: Moondigger

கவாசு அருவி, அமெரிக்காவின் அரிசோனா மகாணத்தில் உள்ள கிராண்ட் கன்யனில் இருக்கும் அருவி ஆகும். இதன் உயரம் 120 அடி ஆகும். இதன் நீர் அதிகமான அளவு தாதுக்களை கொணடுள்ளது.


வலைவாசல்:புவியியல்/சிறப்புப் படம்/22

நைல் ஆற்றின் கழிமுகம்
படிம உதவி: Jacques Descloitres, MODIS Rapid Response Team

நைல் ஆறு ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ளது. இது உலகில் உள்ள இரண்டு நீளமான ஆறுகளில் ஒன்றாகும். இதன் நீளம் 6670 கிலோமீட்டர் (4143 மைல்). புரூண்டியில் பயணத்தைத் தொடங்கும் இது, மத்திய தரைக்கடலை ஒட்டி அமைந்துள்ள கழிமுகப் பகுதிகளை தனது நீர்வளத்தால் செழிப்பாக்குகிறது. படத்தில் காணப்படுவது நைல் ஆற்றின் கழிமுகம் ஆகும்.


வலைவாசல்:புவியியல்/சிறப்புப் படம்/23

சூரிய அத்தமன நேரத்தில் செல்லா திண்மப்பாறைத் தொகுதி
படிம உதவி: Dmitry A. Mottl

செல்லா, வடக்கு இத்தாலியல் உள்ள பீடபூமியை ஒத்த தோற்றம் கொண்ட திண்மப்பாறைத் தொகுதி ஆகும். இதன் ஆகக்கூடிய உயரமானதான பிசு போயே 10338 அடிகளை கொண்டது. படத்தில் சூரிய அத்தமன நேரத்தில் செல்லாவின் தோற்றம்.


வலைவாசல்:புவியியல்/சிறப்புப் படம்/24

ஆனைமுடி
படிம உதவி: Arunguy2002

ஆனைமுடி மலைமுகடு தென் இந்தியாவின் மிகவும் உயரமான இடம் ஆகும். இதன் உயரம் 2, 695 மீ (8, 842 அடி). இது தென் இந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் உள்ள இரவிக்குளம் தேசிய பூங்காவின் தென் பகுதியிலே ஏலக்காய் மலைகள், ஆனை மலைகள், பழனி மலைகள் கூடுமிடத்தில் உள்ளது. இந்த ஆனைமுடி மலை கேரளாவில் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ளது. மலை முகடு மூனார் நகராட்சியின் கீழ் உள்ளது.


வலைவாசல்:புவியியல்/சிறப்புப் படம்/25

அந்தமான் தீவுகளின் வான்ஒளிப்படம்
படிம உதவி: Venkatesh K

அந்தமான் நிகோபார் தீவுகள் இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ளன.அந்தமான் நிகோபார் தீவுகளின் மொத்தம் எண்ணிக்கை 572. இதில் மக்கள் குடியிருக்கும் தீவுகளின் எண்ணிக்கை 36 ஆகும். இத் தீவுக்கூட்டங்களைக் கொண்ட இந்தத் தொகுதி ஒரு முனையில் இருந்து மறு முனைவரை 700 கி.மீட்டருக்கும் அதிகமான தொலைவு கொண்டது. இங்குள்ள தீவுகள் அரிய வகை கடல் உயிரினங்கள், தென்னை மரம் சூழ்ந்த கடற்கரைகள், பவளப் பாறைகள், பசுமைக் காடுகள், அருவிகள் போன்றவற்றைக் கொண்டுள்ளன.


முன்மொழிதல்

இந்த பக்கத்தில் நீங்கள் சேர்க்க விரும்பும் படிமங்களை இங்கு முன்மொழியவும்.

  1. தற்போது எதுவும் இல்லை.