வௌவால்
வௌவால் புதைப்படிவ காலம்: Late Paleocene – Recent | |
---|---|
டௌன்செண்டி என்னும் பெருங்காது வௌவால் Townsend's big-eared bat, Corynorhinus townsendii | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
உள்வகுப்பு: | |
பெருவரிசை: | |
வரிசை: | கைச்சிறகிகள் Chiroptera Blumenbach, 1779
|
Suborders | |
See article | |
வௌவால் (Bat) பறக்கவல்ல முதுகெலும்புள்ள (முதுகெலும்பி) பாலூட்டி ஆகும். பாலூட்டிகளில் பறக்கவல்ல ஒரே விலங்கு வௌவால்தான். இவ்விலங்கை வவ்வால் என்றும் வாவல் என்றும் அழைப்பர். இவ்வௌவால் இனத்தில் 1000க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. பாலூட்டிகளிலேயே இவை மட்டுமே 20% ஆக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. உயிரினங்களைத் தேர்ந்து வகைப்படுத்தும் அறிவியல் துறையாளர்களான வகையியலாளர்கள் வௌவால் இனத்தை கைச்சிறகிகள் எனப்படும் Chiroptera என்னும் வரிசையில் வைத்துள்ளார்கள். இவ்வௌவால்கள் பெரும்பாலும் (சுமார் 70%) எலி போன்ற சிறு முகம் (குறுமுகம்) உடையனவாகவும் பூச்சிகளையுண்பனவாகவும் உள்ளன. வௌவால்கள் பகல் பொழுது முழுவதும் தலைகீழாக தொங்கிக்கொண்டிருக்கும். சூரியன் மறைந்த பின்னர் இவை உலவ ஆரம்பிக்கும்.இரவு நேரங்களிலேயே இவை உணவு உண்ணும்.
வௌவால்கள் நரியின் முகத்தோடும், சிகப்பு கலந்த பழுப்பு நிறத்தில் இருக்கும்,அதன் இறக்கைகள் வழு வழுவென காட்சி அளிக்கும்.
இட மெய்மிகள் (Place cells) என அழைக்கப்படுகிற நரம்பணுவே வெளவாலின் முப்பரிமாண காட்சிகளை காணச்செய்கிறது என ஒரு ஆய்வு பரிந்துரைக்கிறது.[2] ஆங்கில அறிவியல் இதழான சயன்சு இல், ஏப்ரல் 18 அன்று ஆய்வாளர்கள் வெளியிட்ட அறிக்கையில் ரெளசெட்டசு அகிப்தியக்கசு (Rousettus aegyptiacus) எனப்படும் எகிப்திய பழங்கள் உண்ணும் வெளவால் தன் இட மெய்மிகளாலேயே தனது முப்பரிமாண காட்சிகளை அனுபவித்துவருகிறது என கூறப்பட்டுள்ளது.[3][4]
வகைகள்
[தொகு]உலகம் முழுவதும் இரண்டாயிரம் வகையான வௌவாள்கள் வாழ்கின்றன்.
இவ்வகை வௌவால்களை குறும் கைச்சிறகிகள் (microchiroptera) என்னும் உட்பிரிவில் உள்ள துரிஞ்சில்கள் என்பார்கள். மற்றுமோர் உட்பிரிவாகிய பெரும் கைச்சிறகிகள் (megachiroptera) வகை சற்றே உடல் பெரிதாகவும் நீண்ட முகம் (நெடுமுகம்) உடையதாகவும் இருக்கும். இவை பெரும்பாலும் பழம் தின்னிகள் ஆகும். இவற்றின் முகம் நரியின் முகம் போலும் இருப்பதால் ஆங்கிலத்தில் இவற்றை பறக்கும் நரி (flying fox) என்றும் அழைப்பர். பெரும்பாலும் இரவு நேரங்களிலேயே பறந்து திரிந்து உண்டு வாழ்கின்றன.
பழந்திண்ணி வௌவால்கள் இரவு நேரங்களில் நாற்பத்து எட்டு கிலோமீட்டர் தூரம் பயணிக்கும்.இவை பழத்தின் சாறை மட்டுமே உறிஞ்சி குடிக்கும், பழத்தின் சக்கையை உமிழ்ந்து விடும்.ஆனால் வாழைப்பழம் போன்ற மிருதுவான பழங்களை முழுதாக திண்றுவிடும்.இவை மலர்களில் உள்ள தேனையும் குடிக்கும்.வௌவாள்கள் பயிர்களையும் தின்றுவிடும். அதனால் இது விவசாயிகளின் எதிரியாக கருதப்படுகின்றது.
குறும் கைச்சிறகி வகையச் சேர்ந்த சில வௌவால்கள் விலங்குகளின் இரத்தத்தை உறிஞ்சி குடிப்பனவாகவும்(குருதியுறுஞ்சும் வௌவால்) உள்ளன. சில மீன் உண்ணுகின்றன.
வௌவால் உணவு
[தொகு]பபுவா நியூ குய்னியா விலும் , பசுபிக பெருங்கடலில் உள்ள தீவுகளிலும் வௌவால் உணவாக பயன்படுத்தப்படுகின்றது.ஆசியாவின் சில பகுதிகளிலும் வௌவாள்கள் தீனி போன்று உண்ணப்படுகின்றது.
உட்பிரிவுகள்
[தொகு]உடற்கூறு
[தொகு]வௌவால்கள் இரண்டு பெரும் பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இவைகளின் உருவ அமைப்பை வைத்து பெரிய வவ்வால்கள் (Mega bats) எனவும் சிறிய வௌவால்கள் (Mictro bats) எனவும் பிரிக்கப்பட்டுள்ளன. பெரிய வௌவால்களில் குறிப்பிடத்தக்கது பிளையிங் பாக்ஸ் (Flying fox) வௌவால் ஆகும். இவை அதிகபட்சமாக 41 செ.மீ வரை வளரக்கூடியது. சிறிய வகை வௌவால்களில் குறிப்பிடக்தக்கது பம்பல்பீ(Bumble Bee) வௌவால் ஆகும். இவை மூன்று செ.மீ நீளமும் இரண்டு கிராம் எடையும் உள்ளதாகும்.
வௌவாலின் கடியினால் ஏற்படும் வெறிநோய் (rabies)
[தொகு]வெறிநாய் கடியினால் ஏற்படும் ஒரு வைரஸ் நோயாகிய ராபீசு போலவே பிற விலங்குகளில் இருந்தும் இவ்வகை நோய் உண்டாகலாம். பூனை, நரி, ராக்கூன் மற்றும் வௌவால் மூலமாகவும் இந்நோய் பற்றிக் கொள்ளலாம்.
அமெரிக்காவில் காட்டேரி வௌவாள் என்று அழைக்கப்படும் ஒரு வகை வௌவாள்கள் வாழ்கின்றன.அவை ரத்தம் குடிப்பவை ஆகும்.அந்த வௌவால்கள் காட்டு விலங்குகள், மிருகங்கள், ஆடு மாடுகள்,சில நேரங்களில் மனிதர்களின் இரத்தத்தையும் குடிக்கும்.காட்டேரி(வாம்பயர்) கதைகள் இவற்றின் அடிப்படையில் உருவாக்கப்பட்டவையே ஆகும்.
ஒலி அலைகள்
[தொகு]இருளில் முன்னிருக்கும் பொருட்களைக் கவனிக்க வௌவால்களுக்கு மீயொலி அலைகள் உதவுகின்றன. மனிதர்களால் 80 முதல் 20 ஆயிரம் அதிர்வெண் அளவுள்ள ஒலி அலைகளை மட்டுமே உணர முடியும். வௌவால்களின் தொண்டையில் இருந்து ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் அதிர்வெண் அளவில் ஒலி அலைகள் உண்டாகின்றன. இவை ஒலியைச் சிறுசிறு துடிப்பலைகளாக வெளிப்படுத்தும். ஒவ்வொரு துடிப்பும் மிகவும் குறைந்த கால அளவைக் கொண்டது. ஒரு வினாடியில் 5 ஆயிரத்தில் ஒரு பாகம் ஆகும். 17 மீட்டர் தொலைவில் ஏதாவது தடை இருந்தால், வௌவால் வெளிப்படுத்தும் ஒலிக்கும், அந்த ஒலி எதிரொலித்து திரும்பும் ஒலிக்கும் இடையே உள்ள நேர இடைவெளியை உணர்ந்து, தடை இருக்கும் இடத்தை அறிந்து அதற்கேற்ப பறக்கும் திறனைக் கொண்டது வௌவால்.
வௌவாலின் கழிவுகள்
[தொகு]வௌவாளின் கழிவுகள் குயானோ என்று அழைக்கப்படுகின்றது.இதில் அதிக அளவு புரத சத்து உள்ளது. அதனால் இது ஒரு நல்ல உரமாக பயன்படுகிறது.இவை அதிக அளவு லாபத்திற்கு விற்கப்படுகின்றன. குகைகள் மற்றும் ரூஸ்டிங் மரங்களையும் முகவர்கள் குத்தகைக்கு விடுவர், அதன் மூலம் விவசாயிகள் தங்கள் நிலங்களுக்கு தேவையான உரங்களை பெற்றுக்கொள்வர்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Eick et al. (2005). "A Nuclear DNA Phylogenetic Perspective on the Evolution of Echolocation and Historical Biogeography of Extant Bats (Chiroptera)". Molecular Biology and Evolution 22: 1869. doi:10.1093/molbev/msi180. பப்மெட்:15930153. https://archive.org/details/sim_molecular-biology-and-evolution_2005-09_22_9/page/1869. "Several molecular studies have shown that Chiroptera belong to the Laurasiatheria (represented by carnivores, pangolins, cetartiodactyls, eulipotyphlans, and perissodactyls) and are only distantly related to dermopterans, scandentians, and primates (Nikaido et al. 2000; Lin and Penny 2001; Madsen et al. 2001; Murphy et al. 2001a, 2001b; Van Den Bussche and Hoofer 2004).".
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-04-22. பார்க்கப்பட்ட நாள் 2013-04-20.
- ↑ http://ta.wikinews.org/wiki/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88_%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ http://www.sciencemag.org/content/340/6130/367
உசாத்துணை
[தொகு]- கலைக்களஞ்சியம், தமிழ் வளர்ச்சிக் கழக வெளியீடு, சென்னை, 1963.
- Nowak, Ronald M. 1994. " Walker's BATS of the World". The John Hopikins University Press, Baltimore and London.
வெளி இணைப்புகள்
[தொகு]- வௌவால் பற்றிய தமிழ்க் கட்டுரை பரணிடப்பட்டது 2011-03-18 at the வந்தவழி இயந்திரம்