அமாசியா
அமாசியா (Amasia) என்பது எதிர்காலத்தில் ஆசியக் கண்டமும் வட அமெரிக்கக் கண்டமும் மோதி புதிதாக உருவாகவிருப்பதாகக் கருதப்படும் மீப்பெரும் கண்டத்துக்கு வழங்கும் பெயர் ஆகும்.[1] ஏற்கனவே யூரேசியா, வட அமெரிக்காவின் கீழே பசிப்பிக் தட்டு தொடர்ச்சியாக நகர்ந்து வருகிறது. இந்த நகர்வு மேலும் தொடர்ந்தால், இவையிரண்டும் மோதும் நிலையை உருவாக்கும். அதே வேளை, அத்திலாந்திக்கின், நடுக்கடல் முகடு காரணமாக, வட அமெரிக்கா மேற்குப் புறமாக தள்ளப்படும். இதனால் எதிர்காலத்தில், அத்திலாந்திக் பெருங்கடல் பசிப்பிக் பெருங்கடலை விடப் பெரியதாக வரலாம். சைபீரியாவில், யூரேசியத் தட்டுக்கும் வட அமெரிக்கத் தட்டுக்கும் இடைப்பட்ட எல்லை மில்லியன் ஆண்டுகளாக நிலையாக இருந்து வருகிறது. மேற்கண்ட காரணங்களினால், வட அமெரிக்காவும் ஆசியாவும் இணைந்து ஒரு மீப்பெருங்கண்டமாக உருவாகும் எனக் கருதப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Bowdler, Neil (2012-02-08). "America and Eurasia 'to meet at north pole'". பிபிசி. http://www.bbc.co.uk/news/science-environment-16934181. பார்த்த நாள்: 2012-02-08.