கொலம்பியா (பெருங்கண்டம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கொலம்பியா (Columbia) அல்லது நுனா (Nuna) அல்லது அட்சன்லாந்து (Hudsonland) புவியின் பண்டைக்கால மீப்பெருங்கண்டங்களில் ஒன்றாகும். இக்கருத்துருவை முதன்முதலில் ஜே.ஜே.டபிள்யூ. ரோஜர்சும் எம். சந்தோசும் (2002) முன்மொழிந்தனர்[1] இப்பெருங்கண்டம் ஏறத்தாழ 2.5 முதல் 1.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னதாக தொல்லுயிர்முன் காலத்தில் இருந்ததாக கருதப்படுகின்றது. சாவ் மற்றும் பிறர் (2002)[2] கொலம்பியா பெருங்கண்டத்தின் சேர்க்கை புவியளாவிய மோதல் நிகழ்வுகளாக 2.1–1.8 பில்லியன் ஆண்டுகளில் நிகழ்ந்திருக்கக்கூடியதாக கருதுகின்றனர்.

கொலம்பியா மீப்பெருங்கண்டம் முன்னாள் கண்டங்களான லொரேன்சியா, பால்ட்டிக்கா, உக்ரானிய புவித்தட்டு, அமேசோனியப் புவித்தட்டு, ஆத்திரேலியா ஆகியவற்றின் முதல்-கிரேட்டான்களைக் கொண்டு அமைந்திருந்தது; சைபீரியா, வடசீனா, கலகாரியா புவித்தட்டுக்களையும் உள்ளடக்கியிருந்திருக்கலாம்.

கொலம்பியா இருந்ததற்கான சான்றுகள் நிலவியல் [2][3] மற்றும் தொன்மைக்காந்தத் தரவுகளைக் கொண்டு.[4][5]நிறுவப்படுகின்றன.

மேற்சான்றுகள்[தொகு]

  1. http://szczepan.ct8.pl/teksty/seminar/3.pdf பரணிடப்பட்டது 2015-02-03 at the வந்தவழி இயந்திரம் Rogers, J.J.W. and Santosh, M., 2002, Configuration of Columbia, a Mesoproterozoic supercontinent. Gondwana Research, v. 5, pp. 5–22
  2. 2.0 2.1 Zhao, Guochun; Cawood, Peter A.; Wilde, Simon A.; Sun, M. (2002). "Review of global 2.1–1.8 Ga orogens: implications for a pre-Rodinia supercontinent". Earth-Science Reviews 59: 125–162. doi:10.1016/S0012-8252(02)00073-9. Bibcode: 2002ESRv...59..125Z. 
  3. Zhao, Guochun; Sun, M.; Wilde, Simon A.; Li, S.Z. (2004). "A Paleo-Mesoproterozoic supercontinent: assembly, growth and breakup". Earth-Science Reviews 67: 91–123. doi:10.1016/j.earscirev.2004.02.003. Bibcode: 2004ESRv...67...91Z. 
  4. Pesonen, Lauri J.; J. Salminen; F. Donadini; S. Mertanen (November 2004) (PDF). Paleomagnetic Configuration of Continents During the Proterozoic. http://spaceweb.oulu.fi/geofys03/pdf/No30_Paleomagnetic_Configuration_of_Continents_.pdf. பார்த்த நாள்: 2006-03-11. 
  5. Bispo-Santos, Franklin; Manoel S. D’Agrella-Filho; Igor I.G. Pacca; Liliane Janikian; Ricardo I.F. Trindade; Sten-Ake Elming; Jesué A. Silva; Márcia A.S. Barros et al. (June 2008). Columbia revisited: Paleomagnetic results from the 1790 Ma colider volcanics (SW Amazonian Craton, Brazil) Precambrian Research, v. 164, p. 40-49-162.