கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தொன்மையான மீப்பெருங்கண்டமாகவிருந்த பாஞ்சியா பிரிந்ததைக் காட்டும் அசைபடம்
பி. எஃப். ஆஃப்மேன் (1999) கூற்றுப்படி ஐரொவாசிய நிலப்பகுதி மீப்பெருங்கண்டமாக கருதப்படுவது இல்லை.[1]
நிலவியலில், மீப்பெருங்கண்டம் (supercontinent) எனப்படுவது ஒரே பெரும் நிலப்பகுதியாக அமைக்கப்படக் கூடிய புவியின்கண்டத் தொகுதிகள் அல்லது கிரேட்டான்களின் தொகுதியாகும்.[2][3] இருப்பினும், மீப்பெருங்கண்டத்தின் வரையறுப்பு குழப்பமானதாகவே உள்ளது. பி. எஃப். ஆஃப்மேன் போன்ற பல நிலவியல் அறிவியலாளர்கள் "மீப்பெருங்கண்டம்" என்பதற்கு "கிட்டத்தட்ட அனைத்து கண்டங்களின் கொத்தாக்காம்" எனவே கொள்கின்றனர்.[1] இந்த வரையறுப்பு பல விளக்கங்களுக்கு வழி வகுக்கின்றது.[4] முதல் வரையறையின்படி, கோண்டுவானா (அல்லது கோண்டுவானாலாந்து) மீப்பெருங்கண்டமல்லா; ஏனெனில் உள்ளடங்கிய பால்டிக்கா, லாரென்சியா , சைபீரியா நிலப்பகுதிகள் ஒரே நேரத்தில் தனித்தனியே பிரிந்து இருந்தன.[4] இந்த கண்டப் பகுதிகள் அனைத்தும் ஒன்றுக்கொன்று மிக நெருக்கமாக இருந்தபோது இவற்றிற்கு கொடுக்கப்பட்ட கூட்டுப் பெயரே பாஞ்சியா ஆகும். எனவே பாஞ்சியா ஓர் மீப்பெருங்கண்டமாகும். ரோஜர்சு, சந்தோஷ் (2004) கூற்றுப்படி தற்காலத்தில் மீப்பெருங்கண்டம் எதுவும் இல்லை. நிலவியல் வரலாற்றில் பலமுறை மீப்பெருங்கண்டங்கள் இணைந்தும் பிரிந்தும் உள்ளன. கண்டங்களின் நிலைகள் துல்லியமாக சுராசிக் காலத்திலிருந்து அறியப்படுகின்றன. ஆனால், 200 Ma முன்னால், கண்டங்களின் துல்லியமான நிலைகள் கிடைக்கவில்லை.[5]
↑ 1.01.1Hoffman, P.F., "The break-up of Rodinia, Birth of Gondwana, True Polar Wander and the Snowball Earth". Journal of African Earth Sciences, 17 (1999): 17–33.
↑Rogers, John J.W., and M. Santosh. Continents and Supercontinents. Oxford: Oxford UP, 2004. Print.