உள்ளடக்கத்துக்குச் செல்

ஐரோவாசியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஐரோவாசியா
ஐரோவாசியா
புவியின் ஆப்பிரிக்கா-ஐரோவாசியப் பகுதி

யுரேசியா என்பது ஏறத்தாழ 53,990,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட மிகப் பெரியதொரு நிலப் பகுதி. இது புவி மேற்பரப்பின் 10.6 விழுக்காடு ஆகும். இது ஆசியா, ஐரோப்பா ஆகிய கண்டங்களுடன் மத்திய கிழக்குப் பகுதியையும் உள்ளடக்குகின்றது.[1][2] யுரேசியா என்னும் இந்தக் கருத்துரு மிகப் பழையது எனினும் இதன் எல்லைகள் தெளிவானவை அல்ல. யுரேசியா, இதைவிடப் பெரிய நிலத்திணிவான ஆப்பிரிக்கா-யுரேசியாவின் ஒரு பகுதியாகும்.[3] யுரேசியா, உலக மொத்த மக்கள் தொகையின் 69 விழுக்காடான 4.6 பில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் தொகையைக் கொண்டுள்ளது.[4][5]

வரலாறும் பண்பாடும்

[தொகு]

துப்பாக்கிகள், கிருமிகள், மற்றும் உருக்கு (Guns, Germs, and Steel) என்னும் தலைப்பிலான நூலை எழுதிய ஜாரெட் டயமண்ட் என்பார், உலக வரலாற்றில் யுரேசியாவின் வல்லாண்மைக்கு, அதன் கிழக்கு-மேற்கு விரிவு, காலநிலை வலயங்கள், வீட்டு வளர்ப்புக்கு ஏற்ற இப்பகுதியின் தாவரங்கள், விலங்குகள் முதலியவற்றைக் காரணமாகக் காட்டுகிறார்.

வரலாற்றுக் காலகட்டங்களில் யுரேசியாவின் பல்வேறு பண்பாடுகளை இணைத்ததன் மூலம் இப்பகுதியில் வணிகம், பண்பாட்டுப் பரிமாற்றம் ஆகியவற்றின் குறியீடாகப் பட்டுப் பாதை விளங்குகிறது. பழங்கால ஆசிய ஐரோப்பியப் பண்பாடுகள் இடையேயான மரபியல், பண்பாட்டு, மொழியியல் தொடர்புகளை ஆராயும் நோக்கில் பெரிய யுரேசியா வரலாறு என்னும் எண்ணக்கரு அண்மைக் காலங்களில் உருவாகியுள்ளது. இவையிரண்டும் நீண்ட காலமாக வேறுபட்ட தனித்தனியானவை ஆகவே கருதப்பட்டு வந்துள்ளன.

நிலவியல்

[தொகு]

யுரேசியா ஏறத்தாழ 325 - 375 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் உருவாகியதாகக் கருதப்படுகின்றது. ஒரு காலத்தில் தனியான கண்டமாக இருந்த சைபீரியா, கசாக்ஸ்தானியா, பால்டிக்கா என்பவை இணைந்த பொழுது இது உருவானது. சீனப் பகுதி சைபீரியாவின் தெற்குக் கரையுடன் மோதியது. பால்ட்டிக்கா என்பது முன்னர் லோரெந்தியா என்று அழைக்கப்பட்ட இன்றைய வட அமெரிக்காவுடன் இணைந்து இருந்தது. இது யூரோஅமெரிக்கா எனப்படுகின்றது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Nield, Ted. "Continental Divide". Geological Society. Archived from the original on 3 December 2013. பார்க்கப்பட்ட நாள் 8 August 2012.
  2. McDaniel, Melissa; Sprout, Erin; et al. (20 September 2011). "How many continents are there?". Continent. National Geographic Society. Archived from the original on 16 July 2019. பார்க்கப்பட்ட நாள் 27 July 2017. By convention there are seven continents: Asia, Africa, North America, South America, Europe, Australia, and Antarctica. Some geographers list only six continents, combining Europe and Asia into Eurasia. In parts of the world, students learn that there are just five continents: Eurasia, Australia (Oceania), Africa, Antarctica, and the Americas.
  3. McColl, R. W., ed. (2005). 'continents' – Encyclopedia of World Geography, Volume 1. Golson Books Ltd. p. 215. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780816072293. Archived from the original on 9 June 2016. பார்க்கப்பட்ட நாள் 26 June 2012. And since Africa and Asia are connected at the Suez Peninsula, Europe, Africa, and Asia are sometimes combined as Afro-Eurasia or Eurafrasia.
  4. "Population of Europe (2023) - Worldometers". www.worldometers.info. Archived from the original on 1 January 2023. பார்க்கப்பட்ட நாள் 1 January 2023.
  5. "Population of Asia (2023) - Worldometers". www.worldometers.info. Archived from the original on 4 October 2022. பார்க்கப்பட்ட நாள் 9 January 2023.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐரோவாசியா&oldid=3812980" இலிருந்து மீள்விக்கப்பட்டது