உள்ளடக்கத்துக்குச் செல்

கலகாரிப் பாலைவனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கலகாரிப் பாலைவனம்
Kalahari Desert
கலகாரிப் பாலைவனம், செயற்கைக்கோள் படிமம்
நாடு  போட்சுவானா நமீபியா
 தென்னாப்பிரிக்கா
அடையாளச்
சின்னங்கள்
போட்சுவானா மான் தேசிய பூங்கா, மத்திய கலகாரி, சோபே தேசிய பூங்கா, கலகாரி வடிநிலம், கலகாரி மான் தேசிய பூங்கா, கலகாரி எல்லைப்புற பூங்கா, மக்கடிக்காடி பான்ஸ்
ஆறு செம்மஞ்சள் நதி
மிகவுயர் புள்ளி பிரண்ட்பெர்க்கு மலை 8,550 அடி (2,610 m)
 - ஆள்கூறுகள் 21°07′S 14°33′E / 21.117°S 14.550°E / -21.117; 14.550
நீளம் 4,000 கிமீ (2,485 மைல்), E/W
பரப்பு 9,30,000 கிமீ² (3,59,075 ச.மைல்)
Biome மிதவறட்சி பாலைவனம்
கலகாரி பாலைவனம் (அரக்கு நிறத்தில்), கலகாரி வடிநிலம் (செம்மஞ்சள்)
கலகாரி பாலைவனம் (அரக்கு நிறத்தில்), கலகாரி வடிநிலம் (செம்மஞ்சள்)
கலகாரி பாலைவனம் (அரக்கு நிறத்தில்), கலகாரி வடிநிலம் (செம்மஞ்சள்)
நமீபியா கலகாரி

கலகாரிப் பாலைவனம் (Kalahari Desert) (ஆஃப்ரிகான்ஸ்: Kalahari-woestyn) எனும் இது, தென்னாப்பிரிக்கா பிராந்தியத்தில் வியாபித்திருக்கும் வறண்ட வனாந்தரப் புன்னிலமாகும். புவியியல் பாலைவனங்களின் பட்டியலில் பங்குபெறும் இது, தென்னாப்பிரிக்காவிலிருந்து போட்சுவானாவரையில் பரந்துவிரிந்த பெரும்பாலைவனமாக அறியப்படுகிறது. ஆண்டொன்றுக்கு குறைந்தது 110-200 மில்லிமீட்டர் (4.3-7.9 அங்குலம்) முதல், அதிகப்படியாக 500 மில்லிமீட்டர் (20 அங்குலம்) மழையே இங்கு பெய்கிறது. இங்குள்ள நில ஈரப்பதம், ஒரு மாதத்திற்குள்ளாகவே வறண்டுவிடுவதாக உள்ளது.[1]

பரப்பிணைப்பு

[தொகு]

நமீபியா, தென்னாப்பிரிக்கா பெரும்பகுதிகளை உள்ளடக்கிய இப்பாலைவனம், சுமார் 900.000 சதுர கிலோமீட்டர்கள் (350.000 சதுர மைல்கள்) விரிந்து காணப்படுகிறது.[2] கலகாரிப் பாலைவனத்தை சுற்றியுள்ள வடிநிலத்தின் பரப்புளவு சுமார் 2,500,000 சதுரகிலோமீட்டர்கள் (970,000 சதுரமைல்கள்) என கணக்கிடப்பட்டுள்ளது. இது, போட்சுவானா, நமீபியா மற்றும் தென்னாப்பிரிக்கா போன்ற பகுதிகளை இணைத்தவாறு வெகுதுாரம் நீண்டுள்ளது. மேலும், அங்கோலாவின் ஒரு பகுதியாக காணப்படும் கலகாரிப் பாலைவனம் சாம்பியா மற்றும் சிம்பாப்வே பகுதிவரையும் நிலவியுள்ளது.[3]

புகலிடம்

[தொகு]

புலம்பெயரும் பறவைகளுக்கும், விலங்குகளுக்கும் கலகாரிப் பாலைவனம் புகலிடமாக விளங்குகிறது. முற்காலத்தில், யானைகள், ஒட்டகச்சிவிங்கிகள் போன்ற பேரின விலங்குகளின் வாழ்வாதாரங்களாக இருந்துள்ளது. அதோடு, சிறுத்தைகள், சிறுத்தைப்புலிகள் மற்றும் சிங்கங்கள் புகலிடமாக இருந்துவந்த ஆற்றுப் படுக்கைகளின் பெரும்பகுதி மேய்ச்சல் நிலமாக உள்ளது.[4]

அமைவிடம்

[தொகு]

நீல வண்ண கோள் எனும் புவியில் ஆபிரிக்க கண்டத்தின் தென்பகுதியில் காணப்படும் கலகாரிப் பாலைவனம், பூமியின் தென் கோளத்தில் நிலநடுக்கோட்டின் நெருக்கமாக ஆபிரிக்க தட்டில் அமைந்துள்ளது.[5] அப்பாலைவனம், சுமார் அறுபது கோடி (Sixty Million) ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியிருக்குமென்றும், இப்பாலைவனம் அவுஸ்திரேலிய பாலைவனங்களோடு ஒத்துபோவதாகவும் ஆய்வுகளால் அறியப்பட்டுள்ளது.[6]

விளக்கம்

[தொகு]

கலகாரிப் பாலைவனத்திற்கு இப்பெயர் பெறக் காரணம், சுவான மொழியாகும். ககல (Khala) என்றால், "பெரும் தாகம்" அல்லது ககலகடி (Kgalagadi), "வறண்ட இடம்" எனப் பொருட்படுகிறது.[7] சுவான மொழி (Tswana language), என்பது நைகர்-கொங்கோ மொழிக் குடும்பத்தை சேர்ந்த பண்டு மொழிகளுள் ஒன்றாகும். இம்மொழி தென்னாப்பிரிக்கா, சிம்பாப்வே, நமிபியா போன்ற நாடுகளில் நான்கரை மில்லியன் மக்களால் பேசப்படும் மொழியாக அறியப்பட்டது.[8]

வடிகால் அமைப்பு

[தொகு]

கலகாரிப் பாலைவன பகுதியில், பருவகால வெள்ளப்பெருக்கின்போது வடிகாலமைப்பான வறண்ட பள்ளதாக்குகள் வழியாக பெரும் கடாய் (pan) பகுதிகளான, போட்சுவானாவின் மக்கடிக்காடி (Makgadikgadi) கடாய் பகுதியும், மற்றும் நமீபியாவின் எதோசா (Etosha) எனும் கடாய் பகுதியும் வடிகாலமைப்பாக காணப்படுகிறது.[9] மேலும், ஒமுரம்பா (Omuramba) என்றழைக்கப்படும் "பண்டைய உலர் நதி படுக்கைகள்" மழைக்காலங்களில், கலகாரியின் மத்திய வடக்கு பகுதியில் பயணித்து நீராதாரங்களாக விளங்குகின்றது.[10]

கழிமுகப் பகுதி

[தொகு]

கலகாரி பாலைவன மையப்பகுதி, கழிமுகப் பகுதியாகக் காரணம் ஒக்கவாங்கோ (Okavango River) நதியாகும். இந்நதி ஆப்பிரிக்காவின் அங்கோலா நாட்டின் பீடபூமியில் உற்பத்தியாகி 1,600 கிலோமீட்டர் (1000 மைல்கள்) பயணித்து வடமேற்கு போட்சுவானாவின் கலகாரி கழிமுகப் பகுதியை வந்தடைகின்றன.[11] மேலும், ஆப்பிரிக்காவின் நான்காவது பெரிய இந்நதி கடலை நோக்கி பாயாமல் வழக்கத்துக்கு மாறாக கலகாரி பாலைவனத்தின் மையப்பகுதியில் நிரந்தர கழிமுகமாக "டெல்டாவாக" (Delta) மாறிவிடுகிறது.[12]

தாவரங்கள் மற்றும் மலர்கள்

[தொகு]

கலகாரி பாலைவனம் உலர்தன்மையோடு இருப்பினும் பல்வேறு தாவரங்கள் வளர்வதற்கு துணைபுரிகிறது. இவ்வறண்ட நிலத்திற்குரிய தாவரமான சீத்திம் "பசை தரும் வேலமரம்" (Acacia) போன்ற மரமும், மூலிகைகளும், புற்களும் வளர ஏதுவாக உள்ளது.[13] மேலும், கொம்பு முலாம்பழம் "ஆப்பிரிக்க கொம்பு வெள்ளரி" அல்லது "பழகூழ் முலாம்பழம்" (Kiwano frui "tCucumis metuliferus" or Jelly Melon), சூர்நகம் அல்லது "பேய் நகம்" (Devil Claw ) என்றழைக்கப்படும் இதுபோன்ற பழக் கொடிகள் பெருமளவில் கலகாரியில் செழிப்பதாக அறியப்படுகிறது.[14]

சீத்திம் (பசை தரும் வேலமரம்)
கொம்பு முலாம்பழம்
சூர்நகக் கொடி

மேற்சான்றுகள்

[தொகு]
  1. "Ikowbookozd|1/3|The Kalahari Desert|By Molly Aloian|வலை காணல்: சனவரி 21 2016" (PDF). Archived from the original (PDF) on 2022-04-10. பார்க்கப்பட்ட நாள் 2016-01-21.
  2. The Holistic Expedition of Africa|Reason why I am a Tourist Guide?|வலை காணல்: சனவரி 21 2016
  3. "African Safari Tours|Vast and unspoiled the Kalahari Desert provides an unforgettable safari experience in Botswana|வலை காணல்: சனவரி 22 2016". Archived from the original on 2016-01-21. பார்க்கப்பட்ட நாள் 2016-01-22.
  4. "The Kalahari|South Africa|Soaring Safaris|Gliding with a Difference|Search a Topic New Tempe Weather|வலை காணல்: சனவரி 23 2016". Archived from the original on 2016-04-09. பார்க்கப்பட்ட நாள் 2016-01-23.
  5. Kalahridesert.Weebly.com|HOME|KALAHARI DESERT|வலை காணல்: சனவரி 23 2016
  6. Africa facts|Kalahari Desert Facts - General|வலை காணல்: சனவரி 23 2016
  7. Kalahari Desert Explained|Climate|வலை காணல்: சனவரி 26 2016
  8. Tswana|Ethnologue: Languages of the World|A language of Botswana|வலை காணல்: சனவரி 26 2016
  9. World Wild life Southern Africa: Northern Botswana|வலை காணல்: சனவரி 26 2016
  10. "Game Plan Africa|Kalahari|வலை காணல்: சனவரி 26 2016". Archived from the original on 2018-05-09. பார்க்கப்பட்ட நாள் 2016-01-26.
  11. Okavango River|River, Africa|Alternative titles: Cubango River; Kubango River; Okovango River|வலை காணல்: சனவரி 27 2016
  12. Eko Tracks|Botswana|Boteti River|வலை காணல்: சனவரி 27 2016
  13. "Plants Of The Kalahari|SCIENTIFIC NAME|வலை காணல்: சனவரி 27 2016". Archived from the original on 2015-12-17. பார்க்கப்பட்ட நாள் 2016-01-27.
  14. Wiki How|How to Eat a Kiwano (Horned Melon)|வலை காணல்: சனவரி 27 2016

புற இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கலகாரிப்_பாலைவனம்&oldid=3594377" இலிருந்து மீள்விக்கப்பட்டது