லோரேசியா
![]() பாங்கேயா 200 மியாவின் (ஆரம்ப ஜுராசிக்) பகுதியாக லாராசியா (மையம்) மற்றும் கோண்ட்வானா (கீழ்) | |
கடந்தகாலத்து கண்டம் | |
---|---|
உருவானது | 1,071 Mya (புரோட்டோ-லோரேசியா) 253 Mya |
வகை | மீப்பெரும் கண்டம் |
இன்றைய அங்கம் | (பால்கன் குடா இல்லாத) ஐரோப்பா (இந்தியத் துணைக்கண்டம் மற்றும் அறபுத் தீபகற்பம் இல்லாத) ஆசியா வட அமெரிக்கா |
சிறு கண்டங்கள் | லோரென்சியா பால்டிகா கசக்சுதானியா சைபீரியா வடசீனா தென்சீனா |
தட்டுப் புவிப்பொறைக் கட்டமைப்பு | யூரேசியத் தட்டுப் புவிப்பொறை வட அமெரிக்கத் தட்டுப் புவிப்பொறை |
லோரேசியா (Laurasia, /lɔːˈreɪʒə/ or /lɔːˈreɪʃiə/)[1] ஏறத்தாழ 300 - 200 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பாஞ்சியா மீப்பெரும் கண்டத்தின் அங்கமாக இருந்த இரு மீப்பெருங்கண்டங்களில் (மற்றது கோண்டுவானா) மிக வடக்கில் இருந்ததாகும். இது பாஞ்சியா உடைந்தபோது, கோண்டுவானாவிலிருந்து 200 - 180 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் (டிராசிக் காலத்தில்) பிரிந்தது; பிரிந்த பின்னர் லோரேசியா மேலும் வடக்காக நகர்ந்தது மற்றும் கோண்டுவானா மேலும் தெற்காக நகர்ந்தது.[2]
வட அமெரிக்க கிரேட்டானுக்குக் கொடுக்கப்பட்ட லோரென்சியாவுடன் ஐரோப்பா மற்றும் ஆசியா இணைத்து இதற்கு லோரேசியா எனப் பெயரிடப்பட்டது. இந்தப் பெயர் சுட்டுவது போல வடக்கு அரைக்கோளத்தில் உள்ள பெரும்பான்மையான நிலப்பரப்புகளை தன்னகத்தேக் கொண்டுள்ளது. இதில் லோரென்சியா, பால்டிகா, சைபீரியா, கசக்சுதானியா, வடசீனா, தென்சீனா கிரேட்டான்கள் அடங்கியுள்ளன.
மேற்சான்றுகள்
[தொகு]- ↑ "Dictionary.com | Meanings & Definitions of English Words". Dictionary.com (in ஆங்கிலம்). Retrieved 2025-01-14.
- ↑ Houseman, Greg. "Dispersal of Gondwanaland". University of Leeds. Retrieved 21 Oct 2008.