ஊர் (கண்டம்)
ஊர் (Ur) பழம்பாறை பேரூழிக் காலத்தில் 3000 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் உருவான மீப்பெரும் கண்டம் ஆகும்;[1] இதுவே புவியின் மிகப்பழமையான கண்டமாகக் கருதப்படுகின்றது. ஆர்க்டிக்காவைவிட அரை பில்லியன் ஆண்டுகள் முன்னதாகத் தோன்றியுள்ளது. ஆனால் மற்றொரு மீப்பெரும் கண்டமான வால்பரா இதற்கு முன்னதாக, 3600/3100 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னதாக, உருவாகியிருக்கலாம் என சிலர் கருதுகின்றனர்.[2]
1000 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் இது நெனாவுடனும் அட்லாண்டிக்காவுடனும் இணைந்து ரோடீனியா மீப்பெரும் கண்டமாக உருவானது. ஓர் பிரிபடாத நிலப்பகுதியாக இருந்து வந்த ஊர் பாஞ்சியா லோரேசியாவாகவும் கோண்டுவானாவாகவும் உடைந்தபோது இதுவும் பிரிபட்டது.[3]
உருவாக்கமும் பிளவுபடலும்[தொகு]
ஊர் கண்டத்து பாறைகள் தற்கால ஆப்பிரிக்கா, ஆத்திரேலியா, இந்தியத் துணைக் கண்டங்களின் நிலப்பகுதிகளாக உள்ளன.[3]
ஊர் உருவான காலத்தில் புவிப்பரப்பில் இருந்த ஒரே கண்டமாக அது இருந்திருக்கலாம்; தற்கால ஆத்திரேலியாவை விட சிறியதாக இருந்திருக்கலாம் என்றாலும் இது ஒரு மீப்பெருங்கண்டமாக கருதப்படுகின்றது. புவிப்பரப்பில் ஊர் ஒரே கண்டமாக இருந்தபோது மற்ற நிலப்பகுதிகள் சிறுசிறு பாறைத் தீவுகளாக இருந்திருக்கலாம். எனவே இவை கண்டங்களாகக் கருதப்படவில்லை.
காலக்கோடு[தொகு]
- ~3.1 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர், புவியின் மீதான ஒரே கண்டமாக ஊர் உருவானது.
- ~2.8 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர், கேனோர்லாந்து மீப்பெருங்கண்டத்தின் அங்கமாக ஊர் இருந்தது.
- ~2 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர், கொலம்பியாவின் அங்கமாக ஊர் இருந்தது.
- ~1 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர், ரோடீனியா மீப்பெருங்கண்டத்தின் அங்கமாக ஊர் இருந்தது.
- ~550 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர், பனோசியா மீப்பெருங்கண்டத்தின் அங்கமாக ஊர் இருந்தது..
- ~300 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பாஞ்சியா மீப்பெருங்கண்டத்தின் அங்கமாக ஊர் இருந்தது..
- ~208 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் ஊர் லோரேசியா, கோண்டுவானா அங்கங்களாக பிரிந்தது.
- ~65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் ஊரின் ஆப்பிரிக்கப் பகுதி இந்தியாவின் அங்கமாக பிரிந்தது.
- ~இன்று, ஊர் ஆத்திரேலியா, மடகாசுக்கரின் அங்கமாகும்.
மேற்சான்றுகள்[தொகு]
- ↑ Zubritsky, Elizabeth. "In the beginning, there was Ur". Endeavors. University of North Carolina at Chapel Hill. 28 June 2015 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Lerner & Lerner 2003
- ↑ 3.0 3.1 Zubritsky 1997
உசாத்துணைகள்[தொகு]
- Lerner, K. Lee; Lerner, Brenda Wilmoth, eds. (2003). "Supercontinents". Gale Cengage/eNotes.com.
- Zubritsky, Elizabeth (1997). "In the beginning, there was Ur". Endeavors.
வெளி இணைப்புகள்[தொகு]
- Zimmer, Carl (1997). "In Times of Ur". Discover Magazine. Unknown parameter
|month=
ignored (|date=
suggested) (உதவி)
உலகின் கண்டங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உலகின் பெரும்பகுதிகள் வார்ப்புருவையும் பார்க்க |