சீயோன் தேசியப் பூங்கா
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
சீயோன் தேசியப் பூங்கா Zion National Park | |
---|---|
ஐயுசிஎன் வகை II (தேசிய வனம்) | |
Lua error in Module:Location_map at line 522: Unable to find the specified location map definition: "Module:Location map/data/US Locator Blank.svg" does not exist. | |
அமைவிடம் | Washington, Kane, and Iron counties, யூட்டா, United States |
அருகாமை நகரம் | Springdale, Utah(south), Orderville, Utah (east) and Cedar City, Utah near Kolob Canyons entrance |
பரப்பளவு | 146,598 ஏக்கர்கள் (593 km2), 143,035.07 ஏக்கர்கள் (579 km2) federal |
நிறுவப்பட்டது | July 31, 1909 |
வருகையாளர்கள் | 2,697,182 (in 2007) |
நிருவாக அமைப்பு | National Park Service |

சீயோன் தேசியப் பூங்கா (Zion National Park) தென்மேற்கு ஐக்கிய அமெரிக்காவின் யூட்டாவில் அமைந்துள்ள ஒரு தேசியப் பூங்காவாகும். செந்நிற நாவஃகோ (Navajo) என்றழைக்கப்படும் மணற்பாறையினால் ஆன 24 கிமீ(15 மைல் ) நீளமும், 800 மீ வரை (அரை மைல்) ஆழமும் கொண்ட சீயோன் பள்ளத்தாக்கு, 593 சதுர கி.மீ (229-சதுர மைல்) பரப்பு கொண்ட இவ் இயற்கைப் புரவகத்தின் (இத்தேசியப் பூங்காவின்) முக்கிய கவர்ச்சியாகும். கொலராடோ மேட்டுநிலம், கிரேட் பேசின், மஃகாவிப் பாலைநிலம் ஆகிய மூன்றும் சந்திக்கும் இடத்தில் இத்தேசியப் பூங்கா அமைந்துள்ளமை, இப் பூங்காவின் தனித்தன்மை வாய்ந்த புவியியல் சூழமைப்புக்கும், பல்வகைமை கொண்ட நிலைத்திணை (தாவரம்), உயிரினங்களுக்கும் காரணமாக அமைகின்றன. பல வகையான நிலைதிணைகளும், 289 வகையான பறவைகளும், 75 வகை முலையூட்டிகளும் (19 வகை வௌவால்கள் உட்பட), 32 வகை ஊர்வனவும், இங்கு வாழ்கின்றன. இங்குள்ள சிறப்பான விலங்குகளில் மலையரிமா, பெருங்கொம்பாடு, கலிபோர்னியா காண்டோர் என்னும் கழுகு, பொன்னாங்கழுகு முதலியனவற்றைக் குறிப்பிடலாம்.
இப்பகுதியில் மாந்தர் வாழ்க்கை ஏறத்தாழ 8000 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கியது. இவர்கள் அமெரிக்கப் பழங்குடிகள். இவர்களுக்குப் பின்னர் கி.பி. 300 ஆண்டளவில் அவ்வப்போது நாடோடிகளாகத் திரிந்து வாழும் கூடைமுடையும் அனாசாசி (Basketmaker Anasazi) என்னும் இனத்தவர் இங்கு வாழ்ந்தனர். இவர்களுக்குப் பின்னர் கி.பி. 500 ஆண்டளவில் அங்கு நிலையாக வாழத்தொடங்கிய கூடைமுடையும் வர்ச்சின் (கன்னி) அனசாசி பண்பாடு (Virgin Anasazi culture) அங்கு முகிழ்த்தது