கான் அகாதமி
![]() | |
உருவாக்கம் | அக்டோபர் 2006 |
---|---|
நிறுவனர் | சல்மான் கான் |
வகை | 501(c)(3) |
தலைமையகம் | |
சேவைகள் | கல்வி நுட்பவியல், கல்வி |
ஆட்சி மொழிகள் | ஆங்கிலம், 5 அலுவல் மொழிபெயர்ப்புகள், ~20,000 உரைத்துணை காணொளிகள்[1][2] |
முக்கிய நபர்கள் | சல்மான் கான் |
சார்புகள் | பள்ளிக்கல்வி மதிப்பீட்டுத் தேர்வு,[3][4] பிக்சர் |
வருவாய் | $33.663 மில்லியன் (2014) |
செலவுகள் | $24.123 மில்லியன் (2015) |
ஊழியர்கள் | 105 (நவம்பர் 6, 2016) |
வலைத்தளம் | www |
கான் அகாதமி இலாப நோக்கற்ற நிறுவனமாகும்.[5] 2006-ம் ஆண்டு சல்மான் கான் என்பவரால் உருவாக்கப்பட்ட கல்விசார்ந்த இணையத்தளமாகும்.[6] இது யூடியூப் வாயிலாக, கல்விசார்ந்த காணொளிகளை கட்டற்ற முறையில் வழங்குகிறது.[7] ஆங்கிலம், எசுப்பானியம், போர்த்துக்கேய மொழி, இத்தாலிய மொழி, உருசிய மொழி, துருக்கிய மொழி, பிரெஞ்சு மொழி, வங்காள மொழி, மற்றும் இந்தி மொழிகளில் தற்போது சேவைகளை வழங்கி வருகிறது.
வரலாறு[தொகு]
கான் அகாதமி 2004-ம் ஆண்டு சால் கான் என்பவரால் தொடங்கப்பட்டது. யூடியூப் வாயிலாக அவருடைய காணொளிகளை பதிவு செய்தார்.[8] அதன் பிறகு, சுமூத்ட்ரா என்னும் வரைகலை மென்பொருள் வாயிலாகவும், தற்போது ஆர்ட்ரேஜ் வாயிலாகவும் பதிவேற்றுகிறார்.
இந்நிறுவனத்திற்கு கிடைத்த ஆதரவின் காரணமாக 2009-ம் ஆண்டு தனது பணியிலிருந்து விலகி, முழுவதுமாக கான் அகாதமியில் கவணம் செலுத்தினார்.[9] செப்டம்பர் 15, 2014-ம் நாளில் கான் லேப் பள்ளியை (Khan Lab School), மவுண்டன் வியூ, கலிபோர்னியாவில் துவங்கினார். [10]
வருவாய்[தொகு]
கான் அகாதமி இலாப நோக்கற்ற அமைப்பு ஆகும், நன்கொடை மட்டுமே பெற்று நடக்கும் அமைப்பாகும்.[11] 2010-ம் ஆண்டு, கூகுள் $2 மில்லியன் கொடையாக வழங்கியது.[12] 2013-ம் ஆண்டு, கார்லொசு சிலிம் இசுப்பானிய மொழியில் காணொளிகளை வெளியிடுவதற்கு நன்கொடை அளித்தார்.[13] 2015-ம் ஆண்டு, ஏடி&டி நிறுவனம் $2.25 மில்லியன் கொடையை கைப்பேசி செயலி உருவாக்குவதற்காக வழங்கியது.[14]
அமெரிக்க வருவாய்த்துறை அறிக்கையின் படி, சல்மான் கான் ஆண்டிற்கு $350,000 தொகையை 2011 முதல் வாங்கியுள்ளார். 2015-ம் ஆண்டு இது $556,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 2013-ம் ஆண்டு, தலைவரும், முதன்மை இயக்குநராகவும் உள்ள சாந்தனு சின்கா $375,000 பெற்றுள்ளார்.[15]
உள்ளடக்கம்[தொகு]
கான் அகாதமி இணையத்தளம் ஒவ்வொருவருக்கும் தனித்தனமையுடன் யூடியூப் வலைதளத்திலுள்ள காணொளியை வழங்குகிறது. இணையத்தளம் வாயிலாக பயிற்சிகள், இன்னபிற தகவல்களையும் அறியவும்,[16] பயிற்றுக் கருவிகளையும் உள்ளடக்கியுள்ளது.[17] இதைக் கைபேசிச் செயலி வாயிலாகவும் பார்க்க இயலும்.[18]
இது பள்ளிக்கல்வி மதிப்பீட்டுத் தேர்வு உள்ளிட்ட பிற தேர்வுகளுக்கும் பயிற்சி அளிக்கின்றது.[19]
வரவேற்பு[தொகு]
கான் அகாதமி இந்தியாவிலும் பிறநாடுகளிலும் வரவேற்பு பெற்றுள்ளது:
- பில் கேட்ஸ் ஆசுபென் ஐடியாசு விழாவில் கான் அகாதமி குறித்து பேசினார்.[20]
- 2010-ம் ஆண்டு, கூகுள் $2 மில்லியன் கொடை வழங்கியது.[21]
- 2011-ம் ஆண்டு, அயர்லாந்தைச் சார்ந்த ஓ சுல்லிவன் நிறுவனம் $5 மில்லியன் கொடை வழங்கியது.[22]
பன்னாட்டு அறிமுகம்[தொகு]
கான் அகாதமியானது சுமார் 1 பில்லியன் பாடங்களை உலகமுழுவதும் வழங்கியுள்ளது. ஒரு மாதத்தில் சுமார் 40 மில்லியன் மாணவர்களும், 2 மில்லியன் ஆசிரியர்களும் கான் அகாதமியை பயன்படுத்துகின்றனர்.[23] தற்போது, கான் அகாதமியின் உள்ளடக்கம் 36 மொழிகளில் தன்னார்வலர்களாலும் பன்னாட்டு கூட்டமைப்புகளாலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. [24] [25] கான் அகாதமியின் முழக்கம்: "உங்களுக்குத் தெரியவேண்டிய ஒன்றே ஒன்று: நீங்கள் எதை வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம். ("You only have to know one thing: you can learn anything").[26]
குறிப்புகளும் மேற்கோள்களும்[தொகு]
- ↑ "Khan Academy International". Khan Academy. http://international.khanacademy.org/. பார்த்த நாள்: 6 November 2016.
- ↑ https://khanacademy.zendesk.com/hc/en-us/articles/202483750-Is-Khan-Academy-available-in-other-languages-
- ↑ Tanz, Jason. "Can Khan Academy’s Free SAT Prep Level the Playing Field?". https://www.wired.com/2015/06/khan-academy-sat-prep/. பார்த்த நாள்: 7 November 2016.
- ↑ "Official SAT® Practice". Khan Academy. https://www.khanacademy.org/sat. பார்த்த நாள்: 7 November 2016.
- ↑ "Nonprofit Explorer – ProPublica". https://projects.propublica.org/nonprofits/organizations/261544963. பார்த்த நாள்: 2015-11-07.
- ↑ "One Man, One Computer, 10 Million Students: How Khan Academy Is Reinventing Education". https://www.forbes.com/sites/michaelnoer/2012/11/02/one-man-one-computer-10-million-students-how-khan-academy-is-reinventing-education/. பார்த்த நாள்: 2015-11-07.
- ↑ Sampson, Demetrios G.; Ifenthaler, Dirk; Spector, J. Michael; Isaias, Pedro (2014-07-17). Digital Systems for Open Access to Formal and Informal Learning. Springer. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9783319022642. https://books.google.com/books?id=J5UpBAAAQBAJ.
- ↑ Dreifus, Claudia (2014-01-27). "Salman Khan Turned Family Tutoring Into Khan Academy". The New York Times. பன்னாட்டுத் தர தொடர் எண்:0362-4331. https://www.nytimes.com/2014/01/28/science/salman-khan-turned-family-tutoring-into-khan-academy.html.
- ↑ Temple, James (2009-12-14). "Salman Khan, math master of the Internet". SF gate. http://www.sfgate.com/cgi-bin/article.cgi?f=/c/a/2009/12/13/BUKV1B11Q1.DTL&tsp=1. பார்த்த நாள்: 2009-12-23.
- ↑ "'A Bit Of A Montessori 2.0': Khan Academy Opens A Lab School". http://www.npr.org/sections/ed/2016/01/05/461506508/sal-khan-on-learning-coding-and-why-virtual-ed-is-not-enough. பார்த்த நாள்: 2016-01-06.
- ↑ "The Funders Pouring Money Into the Khan Academy – Inside Philanthropy: Fundraising Intelligence – Inside Philanthropy". http://www.insidephilanthropy.com/home/2014/6/26/the-funders-pouring-money-into-the-khan-academy.html. பார்த்த நாள்: 2015-11-07.
- ↑ "$10 million for Project 10^100 winners". The Official Google Blog. 2010-09-24. http://googleblog.blogspot.com/2010/09/10-million-for-project-10100-winners.html. பார்த்த நாள்: 2010-09-24.
- ↑ "Mexico's Carlos Slim funds Khan academy in Spanish". Marketplace இம் மூலத்தில் இருந்து 2015-05-08 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150508202303/http://www.marketplace.org/topics/life/education/mexicos-carlos-slim-funds-khan-academy-spanish.
- ↑ "AT&T Awards $2.25 Million for Mobile Learning Platform". http://philanthropynewsdigest.org/news/at-t-awards-2.25-million-for-mobile-learning-platform. பார்த்த நாள்: 2015-11-07.
- ↑ "Nonprofit Explorer – KHAN ACADEMY INC – ProPublica'". ProPublica. https://projects.propublica.org/nonprofits/organizations/261544963. பார்த்த நாள்: 2015-09-22.
- ↑ "Khan Academy". https://www.pcmag.com/article2/0,2817,2397123,00.asp. பார்த்த நாள்: 2015-11-07.
- ↑ "How Are Teachers and Students Using Khan Academy?". http://ww2.kqed.org/mindshift/2014/05/06/how-are-teachers-and-students-using-khan-academy/. பார்த்த நாள்: 2015-11-07.
- ↑ "Khan Academy for ipad review". theappzine. http://www.theappzine.com/content/khan-academy-20-ipad.
- ↑ "Test prep | Khan Academy". https://www.khanacademy.org/test-prep. பார்த்த நாள்: 2017-07-25.
- ↑ Thompson, Clive (15 July 2011). "How Khan Academy Is Changing the Rules of Education". Wired. https://www.wired.com/2011/07/ff_khan/. பார்த்த நாள்: 26 November 2012.
- ↑ "Project 10100 Winners". Project 10100 (Google). 2010 இம் மூலத்தில் இருந்து 2011-01-12 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110112175042/http://www.project10tothe100.com/index.html. பார்த்த நாள்: 2011-01-05.
- ↑ "The O’Sullivan Foundation Grants $5M To Online Learning Platform Khan Academy". Tech crunch. November 4, 2011. https://techcrunch.com/2011/11/04/the-osullivan-foundation-grants-5m-to-online-learning-platform-khan-academy.
- ↑ "Hakkımızda | Khan Academy Türkçe". http://www.khanacademy.org.tr/about.asp?ID=1. பார்த்த நாள்: 2017-03-06.
- ↑ "Volunteers | Khan Academy" (in en). https://www.khanacademy.org/contribute/credits. பார்த்த நாள்: 2017-03-06.
- ↑ "Supporters | Khan Academy" (in en). https://www.khanacademy.org/about/our-supporters. பார்த்த நாள்: 2017-03-06.
- ↑ "You Can Learn Anything | Khan Academy" (in en). http://youcanlearnanything.org. பார்த்த நாள்: 2017-03-06.