உள்ளடக்கத்துக்குச் செல்

மவுண்டன் வியூ, கலிபோர்னியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மவுண்டன் வியூ நகரம்
கீழ்நகர்ப் பகுதியில் உள்ள நகர மன்றமும் நிகழ்த்துகலைகளுக்கான மையமும்
கீழ்நகர்ப் பகுதியில் உள்ள நகர மன்றமும் நிகழ்த்துகலைகளுக்கான மையமும்
அலுவல் சின்னம் மவுண்டன் வியூ நகரம்
சின்னம்
கலிபோர்னியாவின் சான்ட்டா கிளாரா கௌன்ட்டியில் மவுண்டன் வியூ அமைவிடம்
கலிபோர்னியாவின் சான்ட்டா கிளாரா கௌன்ட்டியில் மவுண்டன் வியூ அமைவிடம்
நாடுஐக்கிய அமெரிக்கா
மாநிலம்கலிபோர்னியா
கௌன்ட்டிசான்ட்டா கிளாரா
நிறுவப்பட்டதுநவம்பர் 7, 1902
அரசு
 • நகரத்தந்தைஜான் இங்க்சு (சு)[1]
பரப்பளவு
 • மொத்தம்12.273 sq mi (31.788 km2)
 • நிலம்11.995 sq mi (31.068 km2)
 • நீர்0.278 sq mi (0.720 km2)  2.26%
ஏற்றம்
105 ft (32 m)
மக்கள்தொகை
 (2010)
 • மொத்தம்74,066
 • அடர்த்தி6,000/sq mi (2,300/km2)
நேர வலயம்ஒசநே-8 (பசிபிக் நேர வலயம்)
 • கோடை (பசேநே)ஒசநே-7 (PDT)
சிப் குறியீடு
94035, 94039-94043
இடக் குறியீடுஅழைப்பு குறியீடு 650
கூட்டரசு தகவல் செயலாக்கச் சீர்தரக் குறியீடு06-49670
புவியியல் பெயர் தகவல் அமைப்பு அடையாளம்0277611
இணையதளம்www.mountainview.gov

மவுண்டன் வியூ (Mountain View) city in ஐக்கிய அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் சான்ட்டா கிளாரா கவுன்ட்டியில் அமைந்துள்ள நகரமாகும். இது சான் பிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதியில் அமைந்துள்ளது. இங்கிருந்து சான்ட்டா குரூசு மலைகள் தென்படுவதால் இந்நகருக்கு இப்பெயர் அமைந்தது.[3] இந்த நகரத்தின் எல்லைகளாக பாலோ ஆல்ட்டோ, லோசு ஆல்டோசு, சன்னிவேல் நகரங்கள் அமைந்துள்ளன. மோஃபெட் கூட்டாட்சி வான்தளமும் சான் பிரான்சிஸ்கோ விரிகுடாவும் மற்ற எல்லைகளாக உள்ளன. 2010 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி இங்கு 74,066 பேர் குடியுள்ளனர்.

சிலிக்கான் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள மவுண்டன் வியூ நகரில் பல உயர் தொழினுட்ப நிறுவனங்கள் இயங்குகின்றன. இங்குதான் 1956இல் திரிதடையம் கண்டுபிடித்த மூவரில் ஒருவரான வில்லியம் ஷாக்லி தமது ஷாக்லி குறைகடத்தி ஆய்வகம் என்ற சிலிக்கான் குறைக்கடத்தி சில்லுகளை தயாரிப்பதற்கான முதல் நிறுவனத்தை நிறுவினார். இன்று உலகின் பல மிகப்பெரும் தொழினுட்ப நிறுவனங்களின் தலைமையகங்கள் மவுண்டன் வியூவில் அமைந்துள்ளன; இவற்றில் கூகிள், மோசில்லா பவுண்டேசன், சைமென்டெக் மற்றும் இன்டியூட் என்பனவும் அடங்கும்.

மேற்சான்றுகள்

[தொகு]
  1. New Mayor of Mountain View, California, is a Libertarian
  2. U.S. Census
  3. Munro-Fraser, J. P. (1881). History of Santa Clara County, California. San Francisco: Alley, Bowen & Co. p. 262. பார்க்கப்பட்ட நாள் April 2008. {{cite book}}: Check date values in: |accessdate= (help)

வெளி இணைப்புகள்

[தொகு]


மற்ற சுவையான சுற்றுலாவிடங்கள்

[தொகு]