வில்லியம் ஷாக்லி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
வில்லியம் பிராட்ஃபோர்ட் சொக்லி

வில்லியம் சொக்லி (William Bradford Shockley, பெப்ரவரி 13, 1910 - ஆகஸ்ட் 12, 1989) டிரான்சிஸ்டரைக் கண்டுபிடித்த மூவருள் ஒருவர். பிரித்தானியாவில் பிறந்த அமெரிக்க இயற்பியலாளர். இவருக்கும் இவருடன் சேர்ந்து டிரான்சிஸ்டரைக் கண்டுபிடித்த ஜோன் பார்டீன், வால்ட்டர் பிரட்டன் ஆகியோருக்கு 1956 ஆம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது.

தான் வடிவமைத்த ஒரு வித டிரான்சிஸ்டரை வணிகமயமாக்க முற்பட்ட போது, அதன் விளைவாக உண்டானதே இன்றைய "சிலிகான் பள்ளத் தாக்கு". இதுவே இன்று மின்னணுத் தொழில்நுட்ப நூதனத்தில் மேலோங்கி நிற்கிறது. பிற்காலத்தில் இவர் ஸ்டான்போர்ட் பல்கலைக் கழகத்தின் பேராசிரியராக பணியாற்றினார். மேலும், செயற்கைத் தேர்வின் மூலம், மனித இனத்தை மேம்படுத்தும் (அப்படி நினைத்தார்) முயற்சிக்கும், ஆதரவாகச் செயல்பட்டார்.

இளமைக் காலமும் கல்வியும்[தொகு]

ஷாக்லி இங்கிலாந்தில் உள்ள லண்டன் நகரில், அமெரிக்கப் பெற்றோருக்குப் பிறந்தார். அகவை மூன்றினினிருந்து, அவரது சொந்த ஊரான கலிபோர்னியாவில் உள்ள பாலோ ஆல்டோவில் வளர்ந்தார். அவரது தந்தை வில்லியம் ஹில்மன் ஷாக்லி, சுரங்கங்களைக் கணிக்கும் சுரங்கப் பொறியாளராகப் பணி புரிந்து வந்தார்.

இவற்றையும் பார்க்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வில்லியம்_ஷாக்லி&oldid=1998647" இருந்து மீள்விக்கப்பட்டது