உள்ளடக்கத்துக்குச் செல்

அப்துஸ் சலாம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அப்துஸ் சலாம்
عبد السلام
Abdus Salam
பிறப்புசனவரி 29, 1926
இறப்பு21 நவம்பர் 1996(1996-11-21) (அகவை 70)
ஆக்சுபோர்டு, ஐக்கிய இராச்சியம்
குடியுரிமைபாக்கித்தானியர்
தேசியம்பாக்கித்தானியர்[1]
துறைகருத்தியற்பியல்
பணியிடங்கள்பாக்கித்தான் அணுவாற்றல் ஆணையம் · விண்வெளி மற்றும் மேல்வளிமண்டல ஆய்வு நிலையம் · பஞ்சாப் பல்கலைக்கழகம் · இம்பீரியல் கல்லூரி, லண்டன் · அரசஉ பல்கலைக்க்ழகக் கல்லூரி, லாகூர் · கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்பஞ்சாப் பல்கலைக்கழகம்
லாகூர் அரசுக் கல்லூரி பல்கலைக்கழகம்
செயிண்ட் மேரி கல்லூரி, கேம்பிரிட்ஜ்
ஆய்வேடுRenormalisation of Quantum Field Theory (1952)
ஆய்வு நெறியாளர்நிக்கோலஸ் கெம்மர்
Other academic advisorsபால் டாண்டன் மேத்தியூஸ்
முனைவர் பட்ட 
மாணவர்கள்
இயற்பியலாளர் மைக்கேல் டஃப் · இராபர்ட் டெல்பர்கோ · வால்ட்டர் கில்பர்ட் · ஜான் மொஃப்ஃபர்
அறியப்படுவதுகுவாண்டம் விசையியல் · சீர்மரபு ஒப்புரு
விருதுகள்இயற்பியலுக்கான நோபல் பரிசு
லமனோசொவ் தங்கப் பதக்கம்
கையொப்பம்

முகமது அப்துஸ் சலாம் (Mohammad Abdus Salam) என்பவர், பாகிஸ்தானிய இயற்பியலாளர் மற்றும் இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றவர். பாகிஸ்தானில் இருந்து நோபல் பரிசு பெற்ற ஒரே ஒரு ஆளுமை இவர் தான். முதன்முதலில் அறிவியலில் நோபல் பரிசு பெற்ற இஸ்லாமியரும் இவரே.

வரலாறு[தொகு]

அப்துஸ் சலாம் ஜனவரி 29, 1926 இல், பிரிக்கப்படாத இந்தியாவில் சாஹிவால் மாவட்டத்தில் சாண்டோக்தாஸ் எனும் ஊரில் சவுத்ரி முகமது ஹுசைன் மற்றும் ஹாஜிரா ஹுசைன் தம்பதியருக்கு பிறந்தார். இளம் வயதில் படிப்பில் சுட்டியாக இருந்த இவரை ஆசிரியர்கள், பட்டப்படிப்பில் ஆங்கில இலக்கியம் எடுத்து ஆசிரியராக ஆகச் சொன்னார்கள். இவரோ தனக்குக் கணிதத்தில் ஆர்வம் என்று சொல்லி கணிதத்தைப் பாடமாக தேர்வு செய்தார். தனது 14 வயதில், சலாம் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் மெட்ரிகுலேஷன் தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்தார்.[2]

அப்துஸ் சலாம் பல்துறை வல்லுநராகவும் உருது மற்றும் ஆங்கிலப் புலமை பெற்றவராகவும் இருந்தார். 1994ல் கணிதத்தில் பி ஏ படித்தார். அவர் ஸ்ரீநிவாஸ ராமானுஜத்தின் கணக்குகளையொட்டிப் பல ஆராய்ச்சிகள் செய்தார். அவர் 1946 ல் அரசுக் கல்லூரி பல்கலைக்கழகத்தின் கணிதவியல் தனது எம்.ஏ. பட்டத்தை பெற்றார்[3]. அதே ஆண்டில் செயின்ட் ஜான்ஸ் கல்லூரி, கேம்பிரிட்ஜ், பி.ஏ. (ஹானர்ஸ்) படிக்க உதவித்தொகை வழங்கியது. 1949ல் அவர் இயற்பியல் மற்றும் கணிதம் இரண்டிலும் தேர்ச்சி பெற்றார்.

1950ல் அவர் இயற்பியலில் மிகச் சிறந்த முன் முனைவர் பங்களிப்பிற்காக கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ஸ்மித் பரிசு பெற்றார். 1951ல் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் ஆய்வறிக்கையில் முதுநிலை பட்டம் பெற்றார்.

நோபல் பரிசு[தொகு]

முகமது அப்துஸ் சலாம், ஷெல்டன் கிளாஷோ, ஸ்டீவன் வெய்ன்பெர்க் (Sheldon Glashow, Steven Weinberg) ஆகிய மூவருக்கும் 1979ம் ஆண்டு நோபல் பரிசு கிடைத்தது. மின்காந்த மற்றும் கதிரியக்கச் சக்திகளின் மின்கதிரியக்கப் பிணைப்பைக் கண்டுபிடித்ததற்காக இம்மூவருக்கும் இந்த விருது வழங்கப்பட்டது.[4]

அரசுத் துறை பதவிகள்[தொகு]

1960 முதல் 1974 வரை பதினைந்து ஆண்டுகாலம் தொடர்ந்து பாகிஸ்தானின் அறிவியல் ஆலோசகராக இருந்தார் சலாம். செப்டம்பர் 16, 1961 இல் நிர்வாக ஆணை மூலம், விண்வெளி மற்றும் உயர் வளிமண்டலம் ஆராய்ச்சி ஆணையம் நிறுவப்பட்டது. அதில் அப்துஸ் சலாம் முதல் இயக்குநராகப் பணியாற்றினார்.[5]. 1964 ல், அப்துஸ் சலாம் பாக்கிஸ்தான் நாட்டின் IAEA குழு தலைவராகப் பத்தாண்டுகள் பணியாற்றினார்.[6]

ஆராய்ச்சி சார்ந்த விஷயங்கள்[தொகு]

1972ஆம் ஆண்டில் ஆயுதங்களின் வளர்ச்சி குறித்த ஆய்வையும் சலாம் வழி நடத்தினார்.

விருதுகள்[தொகு]

 • நோபல் பரிசு (1979)
 • Copley பதக்கம் (1990)
 • ஸ்மித் விருது(Smith)
 • ஆடம்ஸ் விருது(Adams)
 • நிசான் இ இம்தியாஸ் (Nishan-e-Imtiaz) (1979)
 • சித்தரா-இ-பாகிஸ்தான் Sitara-e-Pakistan (1959)
 • இயற்பியலில் சிறந்த பங்களிப்புக்கான தங்க பதக்கம் (அறிவியல் Czechoslovak அகாடமி, பராகுவே) (1981)
 • 1998ம் ஆண்டில் அந்நாடு அணுப் பரிசோதனைகளை நடத்தியதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் அரசு அவருக்கு நினைவு தபால் தலைகளை 1998ம் ஆண்டில் வெளியிட்டது.
 • அப்துஸ் சலாம் விருது (மேலும் சலாம் பரிசு என அழைக்கப்படும்) இயற்பியல் மற்றும் இயற்கை அறிவியல் உயர் சாதனைகள் மற்றும் பங்களிப்புக்கான விருது நிறுவப்பட்டது.[7]

மரணம்[தொகு]

The defaced grave of Abdus Salam at Rabwah, Punjab

நவம்பர் 21, 1996இல் அப்துஸ் சலாம் பிராக்ரஸிவ் மிகையணுக்கரு வாதத்தால் ஆக்ஸ்போர்டு, இங்கிலாந்தில் தனது 70 ஆவது வயதில் இறந்தார். பின்னர் அவரது உடல் பாகிஸ்தான் கொண்டு வரப்பட்டு இறுதி மரியாதை செய்யப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

 1. Zainab Mahmood (நவம்பர் 26, 2004) Dr Abdus Salam – The ’Mystic’ scientist. Chowk: Science
 2. Fraser, Gordon (2008). Cosmic anger: Abdus Salam – the first Muslim Nobel scientist. United Kingdom: Oxford University Press. p. 304. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-920846-3.
 3. Murthi, R.K. (1999). Children Encyclopedia of Nobel Laureates:Abdus Salam. New Delhi: Pitambar Publication Inc. pp. 41–46. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-209-0730-2.
 4. The Nobel Prize in Physics 1979 http://www.nobelprize.org/nobel_prizes/physics/laureates/1979/
 5. சுப்ரகோவின் வரலாறு (SUPRACO) http://www.suparco.gov.pk/pages/history.asp பரணிடப்பட்டது 2008-04-17 at the வந்தவழி இயந்திரம்
 6. Duff, Michael (2007). Salam + 50: proceedings of the conference. London, United Kingdom: Imperial College Press. p. 84.
 7. https://archive.today/20120729082232/www.dailytimes.com.pk/default.asp?page=2010%5C04%5C28%5Cstory_28-4-2010_pg11_6
"https://ta.wikipedia.org/w/index.php?title=அப்துஸ்_சலாம்&oldid=3792146" இலிருந்து மீள்விக்கப்பட்டது