கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
University of Cambridge
Coat of Arms of the University of Cambridge.svg
இலத்தீன்: Universitas Cantabrigiensis
குறிக்கோளுரைHinc lucem et pocula sacra (இலத்தீன்)
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை
Literal: From here, light and sacred draughts
Non-literal: இந்த இடத்திலிருந்து , நாம் ஞானம் மற்றும் விலைமதிப்பற்ற அறிவு பெறுவோம்
வகைPublic, (The colleges are private insitutions)
உருவாக்கம்c. 1209
நிதிக் கொடை£4.9 billion (2013, incl. colleges)[1]
வேந்தர்The Lord Sainsbury of Turville
துணை வேந்தர்Sir Leszek Borysiewicz
கல்வி பணியாளர்
5,999[2]
நிருவாகப் பணியாளர்
3,142[2]
மாணவர்கள்18,448[2]
பட்ட மாணவர்கள்12,077[2]
பட்டப்பின் படிப்பு மாணவர்கள்6,371[2]
அமைவிடம்கேம்பிரிட்ச், England
வளாகம்Urban
366,444 சதுர மீட்டர்கள் (36.6444 ha) (excl. colleges)[3]
Colours     Cambridge Blue[4]
தடகள விளையாட்டுகள்The Sporting Blue
சேர்ப்புRussell Group
Coimbra Group
EUA
G5
LERU
IARU
இணையதளம்[1]
University of Cambridge logo.svg

கேம்பிரிட்ச் பல்கலைக்கழகம்(University of Cambridge) என்பது இங்கிலாந்தில், கேம்பிரிட்ச் என்னும் ஊரில் அமைந்துள்ள தொல்முதுப் பல்கலைக்கழகம் ஆகும். இப்பல்கலைக்கழகம் சுமார் கி.பி. 1209-இல் தொடங்கப்பட்டிருக்கும் என கணிக்கின்றனர். ஆங்கிலம் பேசும் நாடுகளில் இதுவே இரண்டாவது தொன்மை வாய்ந்த பல்கலைக்கழகம் எனக் கருதப்படுகின்றது மற்றும் செயல்பாட்டில் இருக்கும் மூன்றாவது தொன்மைவாய்ந்த பல்கலைக்கழகம் எனவும் கூறப்படுகிறது.[5]

31 கல்லூரிகளைக் கொண்ட இப்பல்கலைக்கழகத்தில் 2005 ஆம் ஆண்டுக் கணக்கின் படி 25,595 மாணவர்கள் பயில்கிறார்கள். இவற்றில் 16,160 மாணவர்கள் பட்டப் படிப்பும், 9435 மாணவர்கள் மேற்பட்டப் படிப்பும் மேற்கொள்ளுகிறார்கள். இப் பல்கலைக்கழத்திற்கு 2006 ஆம் ஆண்டின் கணக்குப் படி மொத்தம் சுமார் 4.1 பில்லியன் பிரித்தானிய பவுண்டுகள் நிறுவன வளர்ச்சித் தொகையாக வழங்கப்படுகிறது. இப் பல்கலைக்கழகமே ஐரோப்பாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் மிகவும் அதிகமான பணவசதி கொண்ட ஒன்றாகக் கருதப்படுகின்றது. இப் பல்கலைக்கழகத்தின் வருமானத்தில் ஏறத்தாழ மூன்றில் ஒரு பங்கை இங்கிலாந்து அரசிடம் இருந்து பெறுகின்றது.

கேம்பிரிட்ஜ் பல முக்கிய மாணவர்களைக் கொண்டுள்ளது, ஏறத்தாழ 90 நோபல் பரிசு பெற்றவர்கள் இந்த பல்கலைக்கழகத்தில் இணைந்திருந்தனர். இது பல்வேறு கல்வி சங்கங்களில் உறுப்பினராகவும் மற்றும் ஆங்கிலம் பல்கலைக்கழகங்களின் தங்க முக்கோணத்திலும் ஓர் அங்கம் வகிக்கிறது.

வரலாறு[தொகு]

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் இங்கிலாந்து கிங் ஹென்றி IIIஆல் 1231ல் ஒரு பட்டயம் மூலம் நிறுவப்பட்டதாக அறியப்படுகிறது. 1223லிருந்து போப் கிரிகோரி IXயால் இந்த பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேறும் எந்த ஒரு பட்டதாரியும் எங்கெல்லாம் கிறிஸ்துவம் இருக்கிறதோ அங்கெல்லாம் கற்றுக்கொடுக்கலாம் என்று கூறினார்.[6]

இந்த பல்கலைக்கழகத்தை ஒரு இடைக்கால பல்கலைக்கழகம் என்று போப் நிக்கோலஸ் IV 1290ல்[7] அறிவித்த பிறகும் போப் ஜான் XXII மூலம் 1318ல் [8] உறுதிசெய்யப்பட்ட பின்பு ஐரோப்பாவை சேர்ந்த பலர் கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகத்திற்கு படிக்கவோ அல்லது விருந்தினர் உரை அளிக்கவோ வந்தனர்.

பல்கலைக்கழகத்தில் கல்லூரிகளின் அடித்தளம்[தொகு]

Clare College (left) and part of King's College, including King's College Chapel (centre), built between 1441 and 1515

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கல்லூரிகள் முதலில் அமைப்பின் ஒரு ஒரு தற்காலிகமான அம்சமாக இருந்தன, ஆனால் எந்தக் கல்லூரியும் பல்கலைக்கழகத்தை விட பழமையானதாக இல்லை.எந்த விதமான ஆஸ்திகளும் இல்லாமல் தொடர்புடன் இருந்த நிறுவனங்களை விடுதிகள் என்றழைத்தனர். இந்த விடுதிகள் காலப்போக்கில் கல்லூரிகளுடன் ஐக்கியமாயின. ஆனாலும் கார்ரெட் லேன் விடுதி போன்ற பெயர்கள் இன்றும் நிலைத்துள்ளன.[9]

ஹக் டி பால்ஷாம்,எலி ஆயர் 1284ல் பீட்டர்ஹவுஸ்,கேம்பிரிச்சு என்ற கல்லூரியை முதலில் நிறுவினார். இதுவே கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகத்தின் முதல் கல்லூரியாகும். பதிமூன்று மற்றும் பதினான்ங்காம் நூற்றாண்டுகளில் பல கல்லூரிகள் தொடங்கப்பெற்றன. ஆனாலும் 1596ல் தொடங்கப்பெற்ற சிட்னி சுச்செக்ஸ் கல்லூரிக்கும் 1800ல் தொடங்கப்பெற்ற டௌனிங் கல்லூரிக்கும் இடையை 204 ஆண்டு கால இடைவெளி இருந்தது.

இடைக்காலத்தில் தங்கள் கல்லூரிகளின் உறுப்பினர்கள் மற்றும் நிறுவனர்களின் ஆன்மாவிற்காக பிரார்த்தனை செய்வதற்காவே இது போன்ற கல்லூரிகல் நிறுவப்பட்டன, இவை பெரும்பாலும் தேவாலயங்களும் அல்லது ஆச்சிரமங்களிலும் தொடர்புடையதாக இருந்தது. இந்த போக்கு 1536ல் மடாலயங்களின் கலைத்தலுக்கு பின்பு மாறியது.

பரவலாக அறியப்பட்ட முன்னாள் மாணவர்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Cambridge College Buys a Bank" (PDF). Bloomberg. p. 4. 24 July 2013 அன்று பார்க்கப்பட்டது.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 "Facts and Figures January 2012" (PDF). Cambridge University. 1 April 2012 அன்று பார்க்கப்பட்டது.
  3. "University of Cambridge—Facts and Figures January 2013" (PDF).
  4. "Identity Guidelines – Colour" (PDF). University of Cambridge Office of External Affairs and Communications. 28 March 2008 அன்று பார்க்கப்பட்டது.
  5. Sager, Peter (2005). Oxford and Cambridge: An Uncommon History.
  6. Hilde De-Ridder Symoens (2003). Cambridge University Press. ed. A History of the University in Europe: Universities in the Middle Ages. 1. பக். 89. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-521-54113-8. 
  7. Hackett, M.B. (1970). The original statutes of Cambridge University: The text and its history. Cambridge University Press. பக். 178. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-521-07076-8. http://books.google.com/books?id=7og8AAAAIAAJ&pg=PA178. பார்த்த நாள்: 2 September 2012. 
  8. David Willey (journalist) (Easter 2012). "Vatican reveals Cambridge papers". Cam 66: 05. 
  9. Charles Henry Cooper (1860). Memorials of Cambridge. 1. W. Metcalfe. பக். 32. http://books.google.co.uk/books?id=7bQWAAAAIAAJ&printsec=frontcover#v=onepage&q&f=false. பார்த்த நாள்: 9 September 2012. 

வெளி இணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
University of Cambridge
என்பதின் ஊடகங்கள் உள்ளன.