பஞ்சாப் பல்கலைக்கழகம்
Jump to navigation
Jump to search
குறிக்கோளுரை | உருது: ایمان ، اتحاد ، نظم (இமான், இட்டெஹட், நஸ்ம்) |
---|---|
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை | நம்பிக்கை, ஒற்றுமை, கட்டுப்பாடு |
வகை | பொது |
உருவாக்கம் | 1882 |
தலைவர் | முஜாஹித் காம்ரான் |
மாணவர்கள் | 30,000 |
அமைவிடம் | லாகூர், பஞ்சாப், பாக்கித்தான் |
வளாகம் | நகர்புறம் |
இணையதளம் | www.pu.edu.pk |
பஞ்சாப் பல்கலைக்கழகம் (University of the Punjab, பஞ்சாபி, உருது: جامعہ پنجاب) (சிலநேரங்களில் சுருக்கமாக PU), பாக்கித்தானின் பஞ்சாப் மாநிலத்தில் லாகூரில் அமைந்துள்ள ஓர் பல்கலைக்கழகமாகும். பாக்கித்தானில் உள்ள பல்கலைக்கழகங்களில் இதுவே மிகப் பழைமையானதும் பெரியதுமான பல்கலைக்கழகமாகும். இதன் முதல் ஆட்சிக்குழு கூட்டம் சிம்லாவில் அக்டோபர் 14, 1882ஆம் ஆண்டு நடந்தபோது முறையாக இப்பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது. கொல்கத்தா, மும்பை, சென்னையை அடுத்து பிரித்தானியர்களால் நிறுவப்பட்ட நான்காவது பல்கலைக்கழகமாகும். பாக்கித்தானில் உயர்நிலைப் பல்கலைக்கழகங்களில் ஒன்றாக விளங்குவதாக அந்நாட்டின் உயர்கல்வி ஆணையம் அறிவித்துள்ளது.[1][2]