பஞ்சாப் பல்கலைக்கழகம், சண்டிகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பஞ்சாப் பல்கலைக்கழகம் சண்டிகர்
குறிக்கோளுரைசமக்கிருதம்: तमसो मा ज्योतिर्गमय
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை
இருளிலிருந்து ஒளிக்கு வழிகாட்டுக !
வகைபொது
உருவாக்கம்1882, சண்டிகருக்கு மீளமைப்பு 1956
வேந்தர்முகம்மது அமீத் அன்சாரி, இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்
துணை வேந்தர்ஆர். சி. சோப்டி
அமைவிடம், ,
வளாகம்நகர்புறம்
சுருக்கப் பெயர்PU
சேர்ப்புUGC
இணையதளம்www.puchd.ac.in

பஞ்சாப் பல்கலைக்கழகம் ( Panjab University) இந்தியாவில் நிறுவப்பட்ட தொன்மையான பல்கலைக் கழகங்களில் ஒன்றாகும். இது பிரித்தானிய இந்தியாவில் தற்போதைய பாக்கித்தானில் உள்ள பஞ்சாபில் லாகூர் நகரில் 1882ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இதன் தற்போதைய வளாகம் 1956ஆம் ஆண்டில் கட்டமைக்கப்பட்டது.

சண்டிகர் நகரின் செக்டர்கள் 14 மற்றும் 25இல் 550 ஏக்கர்கள் (2.2 km2) பரப்பளவில் அமைந்துள்ள இந்தப் பல்கலைக்கழகம் தங்கிப் படிக்கும் வளாகமாகும். நிர்வாகத்தின் கட்டிடங்களும் கல்வித்துறைகளும் செக்டர் 14இல் அமைந்துள்ளன. பல்கலைக்கழகத்தில் 58 கற்பிக்கும் மற்றும் ஆய்வுத் துறைகள் உள்ளன. இதன் கீழ் பஞ்சாப், அரியானா, இமாச்சலப் பிரதேசம் மற்றும் சண்டிகரில் உள்ள 172 கல்லூரிகள் இணைக்கப்பட்டுள்ளன. தவிர முக்த்சர், லூதியானா,ஹோசியார்பூர் நகரங்களில் பிராந்திய மையங்கள் இயங்குகின்றன.

வரலாறு[தொகு]

பிரிவினைக்குப் பிறகு 1882ஆம் ஆண்டு லாகூரில் நிறுவப்பட்ட பஞ்சாப் பல்கலைக்கழகத்தின் இந்தியப் பிரிவு [1] , தனக்கென யாதொரு வளாகமும் இன்றி பத்தாண்டுகள் இயங்கி வந்தது. இதன் நிர்வாக அலுவலகம் இம்மாச்சலப் பிரதேசத்தின் சோலனிலும் கற்பிக்கும் துறைகள் ஹோசியார்பூர், ஜலந்தர், தில்லி மற்றும் அமிர்தசரசிலும் இயங்கி வந்தன. 1956ஆம் ஆண்டில் சண்டிகர் நகர் உருவாக்கத்தின்போது லெ கார்சியே வழிகாட்டுதலில் சிவப்பு கற்களாலான தற்போதைய பல்கலைக்கழக வளாகத்தை பியரி ஜோனெரெட் வடிவமைத்தார். 1966ஆம் ஆண்டில் பஞ்சாப் மாநிலம் சீரமைக்கப்பட்டபோது இந்தப் பல்கலைக்கழகம் அரியானா, பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம் மற்றும் சண்டிகர் நடுவண் ஆட்சிப் பகுதி மாநிலங்களுக்கு சேவை புரியுமாறு பன்மாநில அமைப்பாக நிறுவப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "UGC State Universities" (PDF). UNIVERSITY GRANTS COMMISSION. May 27, 2011. {{cite web}}: Cite has empty unknown parameter: |1= (help)

வெளியிணைப்புகள்[தொகு]