சென்னைப் பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சென்னைப் பல்கலைக்கழகம்
சென்னைப் பல்கலைக்கழகம்
மெரினா கடற்கரையில் இருந்து பல்கலைக்கழகத்தின் பார்வை
குறிக்கோளுரைகற்றனைத்தூறும் அறிவும் ஆற்றலும்
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை
Learning Promotes Natural Talent
வகைபொது
உருவாக்கம்1857; 166 ஆண்டுகளுக்கு முன்னர் (1857)
நிதிக் கொடை$50 மில்லியன்
வேந்தர்ஆர். என். ரவி[1]
துணை வேந்தர்எசு. கெளரி
கல்வி பணியாளர்
300
பட்ட மாணவர்கள்3000
பட்டப்பின் படிப்பு மாணவர்கள்5000
அமைவிடம், ,
13°5′2″N 80°16′12″E / 13.08389°N 80.27000°E / 13.08389; 80.27000
நற்பேறு சின்னம்சிங்கம்
சேர்ப்புபல்கலைக்கழக மானிய ஆணைக்குழு
இணையதளம்www.unom.ac.in

சென்னைப் பல்கலைக்கழகம் தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். இது 1851-ஆம் ஆண்டு சென்னையில் தொடங்கப்பட்டது. இஃது இந்தியாவின் பழமையான பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். லண்டன் பல்கலைக்கழகத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இது, 5 செப்டம்பர் 1857-இல் இந்திய சட்டமன்றத்தின் கீழ் இணைக்கப்பட்டது. எனினும் இப்பல்கலைக்கழகம், நடுவண் அரசின் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு (UGC) அமைக்கும் வழிமுறைகளுக்கு உட்பட்டது. மருத்துவம், பொறியியல், சட்டம், அறிவியல், கலை முதலிய அனைத்துத் துறைகளும் இருந்தன. நீண்ட காலம் தமிழகத்தின் ஒரே பல்கலைக்கழகமாக விளங்கியது. இப்பொழுது சட்டம், பொறியியல், மருத்துவம் ஆகிய பிரிவுகள் பிற பல்கலைக்கழகங்களுடன் இணைக்கப்பட்டு விட்டன.

தன்னாட்சிக் கல்லூரிகளை முதல் முறையாகத் தொடங்கியது சென்னை பல்கலைக்கழகம்.

வரலாறு[தொகு]

இந்தியாவில் 16-ஆம் நூற்றாண்டின் இறுதியில் கல்கத்தா, பம்பாய், சென்னை ஆகிய மூன்று முக்கிய துறைமுகங்கள் கண்டறியப்பட்டன. இம்மூன்று நகரங்களிலும் நிர்வாகம், வர்த்தகம் ஆகியவற்றுக்காக நவீன அமைப்புகளை உருவாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

11-11-1839 தேதியிட்ட 70000 பேர் சேர்ந்து எழுதி லார்ட் ஜான் எல்பின்ஸ்டன் (Lord John Elphinston) அவர்களிடம் அளித்த பொதுமனுக்குழு சென்னைப் பல்கலைக்கழகம் அமைக்கக் காரணமாக அமைந்தது. கல்வி பற்றிய விவாதங்களும் எழுந்தன. ஜனவரி 1840-இல் ஜார்ஜ் நார்டன் தலைமையில் பல்கலைக்கழக வாரியம் அமைக்கப்பட்டது. இதுவே பிரெசிடென்சி கல்லூரி உருவாகக் காரணமாக அமைந்து அது முதலில் உருவானது. 1857-இல் மெட்ராஸ் பல்கலைக்கழக மருத்துவப் பயிற்சி அளிக்க அங்கிகாரம் பெற்றது.

அதன் பிறகு 14 வருடம் கழித்து 1854-இல் சார்லஸ் உட் எழுதிய கல்விக்குறிப்பின் பயனாக ஒரு சீரான கல்விக் கொள்கை ஒன்றை அமைத்து 1857-இல் சட்டம் இயற்றிச் சென்னைப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது. 1923-இல் சென்னைப் பல்கலைக்கழக எல்லைகள் வடக்கே ஒரிஸ்ஸா, ஆந்திரா, ஹைதராபாத், மேற்கே மங்களூர், மைசூர், கேரளா, திருவனந்தபுரம் எனப் பரந்து விரிந்திருந்தது.[2]

சென்னைப் பல்கலைக்கழகம் மும்பை மற்றும் கல்கத்தா பல்கலைக்கழகங்களுடன் இணைந்து 1857-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. 2000-ஆம் ஆண்டு, சென்னைப் பல்கலைக்கழகத்திற்கு NAAC மூலம் முதல் முறையாக அங்கீகாரம் மற்றும் "5 நட்சத்திர அந்தஸ்து" வழங்கப்பட்டது. தனது 150-ஆவது வருடத்தைக் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுடன் 2008-ஆம் ஆண்டு கொண்டாடியது.

சென்னைப் பல்கலைக்கழகத்தின் மூலம் உருவான மற்ற பல்கலைக்கழகங்கள்[தொகு]

 1. மைசூர் பல்கலைக்கழகம் (1916)
 2. உசுமானியா பல்கலைக்கழகம் (1918)
 3. ஆந்திரப் பல்கலைக்கழகம் (1926)
 4. அண்ணாமலைப் பல்கலைக்கழகம் (1929)
 5. திருவாங்கூர் பல்கலை (1937)
 6. உத்கல் பல்கலைக்கழகம் (1943)
 7. திருவேங்கடவன் பல்கலைக்கழகம் (1954)
 8. மதுரை காமராசர் பல்கலைக்கழகம் (1966)
 9. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (1971)
 10. அண்ணா பல்கலைக்கழகம் (1978)
 11. பாரதிதாசன் பல்கலைக்கழகம் (1982)
 12. பாரதியார் பல்கலைக்கழகம் (1982)
 13. பெரியார் பல்கலைக்கழகம் (1997)
 14. டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் (1997)
 15. திருவள்ளுவர் பல்கலைக்கழகம் (2002)

மானியங்கள்[தொகு]

2011-இல் பல்கலைக்கழக மானிய குழு சிறந்த திறன் கொண்ட ஒரு பல்கலைக்கழகமாகச் சென்னைப் பல்கலைக்கழகத்தைத் தேர்வு செய்தது. அதன் விளைவாக 25 கோடி ரூபாயை மானியமாகப் பெற்றது.[3]

பல்கலைக்கழக அமைப்பின் கட்டமைப்பு[தொகு]

பலகலைக்கழகத்தின் வேந்தராக தமிழக ஆளுநர் இருப்பார்.

 • செனட் (Senate)
 • தி சிண்டிகேட் (The Syndicate)
 • தி அகாடெமிக் கவுன்சில் (The Academic Council)
 • தி பாகல்ட்டீஸ் (The Faculties)
 • தி பினான்ஸ் கமிட்டி (The Finance Comittee)
 • தி போர்டு ஆப் சடடிஸ் (The board of Studies)

துறைகள்[தொகு]

வரலாற்றுத்துறை[தொகு]

சென்னை பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத்துறையானது இந்திய வரலாறு மற்றும் தொல்பொருள் ஆய்வுத்துறை என்ற பெயரில் 1914-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. துறையின் தலைவராக எஸ். கிருஷ்ணசாமி அய்யங்கார் நியமிக்கப்பட்டார். அவருக்குப் பின்னர் கே. ஏ. நீலகண்ட சாஸ்திரி, வி. ஆர். ராமச்சந்திர தீட்சிதர், கே. கே. பிள்ளை என அடுத்தடுத்து துறைத் தலைவர்களாக பணியாற்றினர். ஆரம்பத்தில் பி.எச்டி., எம்.லிட். ஆகிய படிப்புகள் மட்டுமே வழங்கப்பட்டுவந்தன. 1976-ம் ஆண்டிலிருந்துதான் எம்.ஏ., எம்.பில். படிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. 2013 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட துணைவேந்தர் ரா. தாண்டவன், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத் துணை வேந்தர் ஜி. விஸ்வநாதன், கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் டி. ஜானகி, திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பி. ஜெகதீசன் ஆகியோர் வரலாற்றுத் துறையின் முன்னாள் மாணவர்கள்.[4]

சென்னைப் பல்கலைக்கழகத்தின் இலச்சினை விளக்கம்[தொகு]

1857-இல் உருவாக்கப்பட்ட இந்த இலச்சினை இன்று வரை பயன்படுத்தப்பட்டு வருகிறது.

 • இரண்டு யானைகள்
 • இரு இதழ்கள் கொண்ட ஒரு தாமரை மலர்
 • புலி
 • குறிக்கோளுரை : கற்றைனைத்தூறும் அறிவும் ஆற்றலும்
 • ஆங்கில மொழியாக்கம்: Learning promotes (one's) natural (innate) talent [5]

நூலகம்[தொகு]

முதன் முதலில் சென்னைப் பல்கலைக்கழகத்தின் நூலகம் கன்னிமாரா நூலகத்தில் 1907-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இப்போதுள்ள நூலகம் 1936-ஆம் ஆண்டு செப்டம்பர் 3-ஆம் தேதி தொடங்கப்பட்டது. இஃது இந்திய-பிரிட்ஷ் வகையில் அமைக்கப்பட்டது.

சுவாரசியமான மற்றும் முக்கிய குறிப்புகள்[தொகு]

 • தேசிக விநாயகம் பிள்ளை, சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேரகராதி உருவாக்கத்தில் மதிப்பியல் உதவியாளராக இருந்தார்.[6]
 • இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது சென்னைப் பல்கலைக்கழகம் காலவரையின்றி மூடப்பட்டிருந்தது.[7]
 • 1915இல் இருந்து 1921 வரை, பிரிட்டிஷ் பொருளாதார நிபுணர் கில்பர்ட் ஸ்லாட்டர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் பொருளாதார பேராசிரியராக பணியாற்றினார். இவர் திராவிட கொள்கைகளில் மிகுந்த அக்கறை கொண்டவராயிருந்திருக்கிறார்.[8][9]
 • இந்தப் பல்கலைக்கழகத்தில் டாக்டர் காதம்பி மீனாட்சி இந்திய வரலாறு மற்றும் தொல்லியல் துறையில் க. அ. நீலகண்ட சாத்திரியிடம் முனைவர் பட்டம் பெற்ற முதல் பெண்மணி ஆவார்.[10]
 • இந்தியாவின் முதல் பெண் மருத்துவரான மரு.முத்துலட்சுமி ரெட்டி இந்த பல்கலைக்கழகத்தின் கீழ் பயின்றவரே.[11]
 • இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப காலகட்டங்களில் ஆய்வுத் துறையில் டாக்டர் பட்டங்களுக்காக அனுப்பப்படும் ஆய்வுரைகளை ஏற்றுக் கொண்ட பிறகு அவற்றை வெளியிட முன்வராது சென்னைப் பல்கலைக் கழகம். பல்கலைக்கழகம் காவல் கழகமாக மாறி சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுரைகளை வெளிஉலகத்திற்கு வெளியிடாமல் பூட்டி வைத்துவிடும்.[12]

வளாகங்கள்[தொகு]

 • தொல்காப்பியர் (சேப்பாக்கம்) வளாகம்
 • பரிதிமாற் கலைஞர் (மெரினா) வளாகம்
 • மறைமலை (கிண்டி) வளாகம்
 • சேக்கிழார் (தரமணி) வளாகம்
 • மதுரவாயல் வளாகம்

பல்கலைக்கழகத்தின் கட்டடம்[தொகு]

சேப்பாக்கத்தில் உள்ள பல்கலைக்கழகத்தின் செனட் கட்டிடம்

சேப்பாக்கத்தில் உள்ள பல்கலைக்கழகத்தின் செனட் கட்டிடம் மிகவும் புகழ் வாய்ந்தாகும்.

இங்குப் படித்துப் புகழ் பெற்றவர்கள்[தொகு]

நோபல் பரிசு பெற்றவர்கள்[தொகு]

இந்திய ஜனாதிபதிகள்[தொகு]

இந்திய தலைமை நீதிபதி[தொகு]

பேரறிஞர்கள்[தொகு]

புத்தாக்குனர்கள்[தொகு]

துணை வேந்தர்கள்[தொகு]

துணைவேந்தர்களாக முதலில் ஆங்கிலேயர்களும் பின்னர் தமிழ்நாட்டைச்சேர்ந்தவர்களும் இருந்து வருகின்றனர். துணைவேந்தர் புகைப்படங்களின் தொகுப்பு.[16]

உள்ளிணைந்த கல்லூரிகள்[தொகு]

தன்னாட்சி - கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்[தொகு]

 • பச்சையப்பன் கல்லூரி
 • மாநிலக் கல்லூரி
 • பாரதி கலைக் கல்லூரி
 • எத்திராஜ் கல்லூரி
 • லோகநாத நாராயணசாமி கலைக் கல்லூரி
 • டி ஜி வைஷ்ணவ் கல்லூரி
 • லயோலா கல்லூரி
 • எம் ஒ பி வைஷ்ணவ் கல்லூரி

இவற்றையும் காணவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. 2015. http://www.tn.gov.in/ta/government/keycontact/197. பார்த்த நாள்: நவம்பர் 3, 2015. 
 2. http://www.unom.ac.in/index.php?route=university/history
 3. http://epaper.timesofindia.com/Default/Scripting/ArticleWin.asp?From=Archive&Source=Page&Skin=TOINEW&BaseHref=TOICH/2011/12/29&PageLabel=4&EntityId=Ar00404&ViewMode=HTML
 4. ஜெ.கு.லிஸ்பன் குமார் (31 சனவரி 2014). "சென்னை பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறைக்கு நூறு வயது- விழாவில் 100 ஆய்வுக்கட்டுரைகள் வெளியாகின்றன". http://tamil.thehindu.com/opinion/reporter-page/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-100-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A9/article5636488.ece. பார்த்த நாள்: 1 பெப்ரவரி 2014. 
 5. http://www.unom.ac.in/index.php?route=university/history
 6. http://tamizhplanet.wordpress.com/category/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/5/
 7. http://infotamil.ch/ta/view.php?22AoCac3CE34eKYd302gOydd4OgC201dY2e4EMMca2oA42
 8. https://en.wikipedia.org/wiki/Gilbert_Slater
 9. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2009-01-25 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090125020015/http://hindu.com/2009/01/22/stories/2009012258140200.htm. 
 10. http://www.thehindu.com/features/friday-review/history-and-culture/madras-miscellany/article4372571.ece
 11. http://www.hindu.com/thehindu/mp/2002/02/18/stories/2002021800170300.htm
 12. நினைவு அலைகள்; டாக்டர் நெ.து.சுந்தரவடிவேலு; சாந்தா பதிப்பகம்;பாகம் 1;பக்கம் 18
 13. சென்னை பிரசிடென்சி கல்லூரியில் 1904-ஆம் ஆண்டு கலை இளநிலைப் பட்டம் பெற்றார். 1907-இல் முதுகலைப் பட்டமும் பெற்றார். http://dinamani.com/weekly_supplements/siruvarmani/article1485274.ece
 14. http://www.supremecourtofindia.nic.in/judges/bio/ksubbarao.htm
 15. http://www.thefamouspeople.com/profiles/srinivasa-ramanujan-503.php
 16. https://www.ugc-inno-nehu.com/IBS2012/ibs2012_UNOM_ibs/www.unom.ac.in/index02c8.html?route=university/formervcs பல்கலைகழக இணைய தளத்தில்
 17. http://www.thehindu.com/news/cities/chennai/r-thandavan-to-be-madras-universitys-new-vicechancellor/article4287856.ece

வெளி இணைப்புகள்[தொகு]

படங்கள்[தொகு]