சிறி சந்தரசேகரேந்தரா சரஸ்வதி விஸ்வ மகாவித்யாலயா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சிறீ சந்திரசேகரேந்திர சரசுவதி விசுவ மகாவித்தியாலயா (SCSVMV)
குறிக்கோளுரைவந்தே சத்குரும் சந்திரசேகரம்
வகைநிகர்நிலை
உருவாக்கம்1993
சார்புஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம்,காஞ்சிபுரம்
வேந்தர்முனைவர். பி. வி. வைத்தியநாதன்
துணை வேந்தர்சி. வி. வைத்தியநாதன்
அமைவிடம்காஞ்சிபுரம், தமிழ்நாடு, இந்தியா
12°51′39″N 79°44′1″E / 12.86083°N 79.73361°E / 12.86083; 79.73361ஆள்கூறுகள்: 12°51′39″N 79°44′1″E / 12.86083°N 79.73361°E / 12.86083; 79.73361
வளாகம்ஏனாத்தூர், 50 ஏக்கர்கள் (200,000 m2)
சேர்ப்புப.மா.கு, AICTE, AIU, CSI, CII, பிரிட்டிஷ் கௌன்சில்
இணையதளம்www.kanchiuniv.ac.in
Kanchiuniv.ac.in-logo.JPG

சிறீ சந்திரசேகரேந்திர சரசுவதி விசுவ மகா வித்தியாலயா (Sri Chandrasekarendra Saraswathi Viswa Maha Vidyalaya) தமிழ்நாடு மாநிலத்தில் காஞ்சிபுரத்தின் அருகாமையில் ஏனாத்தூரில் அமைந்துள்ள நிகர்நிலைப் பல்கலைக்கழகம் ஆகும். காஞ்சிபுரத்தில் உள்ள சங்கர மடத்தின் புரவலில் இயங்கும் இந்தப் பல்கலைக்கழகத்திற்கு மே 26,1993ஆம் ஆண்டு இந்திய மனிதவளத்துறை அமைச்சகம் பல்கலைக்கழக மானியக் குழு சட்டம் பிரிவு 3இன் கீழ் நிகர்நிலைப் பல்கலைக்கழகத் தகுதி வழங்கப்பட்டது. [1] இது காஞ்சி பல்கலைக்கழகம் மற்றும் சங்கரா பல்கலைகழகம் போன்ற பெயர்களிலும் பரவலாக அறியப்படுகிறது.

அமைவிடம்[தொகு]

பல்கலைக்கழகம் ஏனாத்தூரில் 50 ஏக்கர்கள் (200,000 m2) பரப்பளவில் காஞ்சியிலிருந்து 4 கிமீ தொலைவிலும் சென்னையிலிருந்து 76 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது. பல முன்னணி கல்வி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு உடன்பாடு ஏற்படுத்திக்கொண்டு சிறந்த கல்வி வழங்கும் முனைப்புடன் இயங்குகிறது.

ஆராய்ச்சிகள்[தொகு]

ஆய்வு மற்றும் மேம்படுத்தல் தலைவரின் கீழ் ஒவ்வொரு துறையிலும் ஆராய்ச்சிகளையும் மேம்படுத்தல்களையும் பல்கலைக்கழகம் ஊக்குவிக்கிறது. முனைவர் கல்வித்திட்டங்கள் அனைத்து துறைகளிலும் அளிக்கப்படுகின்றன. சமசுகிருதம் மற்றும் இந்தியப் பண்பாடு துறை 25க்கும் மேற்பட்ட முனைவர் பட்டதாரிகளை உருவாக்கியுள்ளது. முனைவர் கல்வித்திட்டங்களுக்கு ஆண்டுக்கு இருமுறை சேர்க்கைகள் வழங்கப்படுகின்றன. இப்பல்கலைக்கழக நூலகத்தில் பழமையான ஒலைச்சுவடிகள் காப்பகம் ஒன்றிருப்பது குறிப்பிடத்தக்கது.[2]

கல்வித் துறைகள்[தொகு]

பல்கலைக்கழகத்தில் கீழ்வரும் துறைகள் உள்ளன:

  • மேலாண்மைப் பள்ளி
  • ஆசிரியக்கல்வி பள்ளி
  • பொறியியல் மற்றும் தொழில்நுட்ப பள்ளி
  • அறிவியல் பள்ளி
  • சமூக அறிவியல் மற்றும் மனித்ததுவப் பள்ளி
  • உடல்நலம் மற்றும் வாழ்வின அறிவியல்
  • மொழிகள் பள்ளி

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]