உள்ளடக்கத்துக்குச் செல்

மீனாட்சி பல்கலைக்கழகம்

ஆள்கூறுகள்: 13°00′50″N 80°06′25″E / 13.014°N 80.107°E / 13.014; 80.107
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மீனாட்சி பல்கலைக்கழகம் (Meenakshi University) அல்லது முறையாக மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆய்விற்கான அகாதெமி (Meenakshi Academy of Higher Education and Research (MAHER)) இந்தியாவில் தமிழ்நாட்டின், சென்னையில் அமைந்துள்ள மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகமாகும்.

வரலாறு

[தொகு]

1991ஆம் ஆண்டில் மீனாட்சியம்மாள் பல்மருத்துவக் கல்லூரி உத்திரமேரூரில் துவங்கப்பட்டது.[1] 2004ஆம் ஆண்டு நடுவண் அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், பல்கலைக்கழக மானியக் குழுவின் பரிந்துரைப்படி, இதற்கு நிகர்நிலைப் பல்கலைக்கழகத் தகுதி வழங்கியது. [2]

இதன் வேந்தராக ஏ.என். இராதாகிருட்டிணனும், துணைவேந்தராக டி. குணசாகரனும் உள்ளனர்.

இணைந்த கல்வி நிறுவனங்கள்

[தொகு]
  • மீனாட்சி மருத்துவக் கல்லூரி மற்றும் ஆய்வுக் கழகம், ஏனாத்தூர், காஞ்சிபுரம்,
  • மீனாட்சி அம்மாள் பல்மருத்துவக் கல்லூரி, மதுரவாயல், சென்னை,
  • மீனாட்சி பொறியியல் கல்லூரி, கே. கே. நகர்,
  • மீனாட்சி செவிலியர் கல்லூரி, மாங்காடு,
  • பொறியியல் மற்றும் தொழினுட்பத் துறை, மாங்காடு, சென்னை.

கல்வித்துறைகள்

[தொகு]

பட்டப்படிப்புத் துறைகள்

[தொகு]
  • இளநிலை மருத்துவம் இளநிலை அறுவைமருத்துவம்
  • இளநிலை பல்மருத்துவ அறுவை
  • இளநிலை அறிவியல் (செவிலியம்)
  • இளநிலை இயன்முறை மருத்துவம்
  • இளநிலைப் பொறியியல்

பட்டமேற்படிப்புத் துறைகள்

[தொகு]
  • முதுநிலை மருத்துவக் கல்வி
  • முதுநிலை அறிவியல்
  • முதுநிலை பல்மருத்துவ அறுவை
  • முதுநிலை அறிவியல் (செவிலியம்)
  • முதுநிலை இயன்முறை மருத்துவம்
  • முதுநிலைப் பொறியியல்

டாக்டர் மற்றும் முனைவர்

[தொகு]

மருத்துவம் மற்றும் அறுவைச் சிகிச்சையில்

  • டாக்டர் பட்டப்படிப்பும் (DM,DS)
  • முனைவர் பாடத்திட்டங்களும்

வழங்கப்படுகின்றன.

மேற்சான்றுகள்

[தொகு]
  1. "BDS permission orders" (PDF). மீனாட்சி பல்கலைக்கழக வலைத்தளம். Archived from the original (PDF) on 2016-01-31. Retrieved 10 பெப்ரவரி 2016.
  2. "List of Deemed Universities in India". www.icbse.com. Retrieved 10 பெப்ரவரி 2016.

வெளியிணைப்புகள்

[தொகு]

13°00′50″N 80°06′25″E / 13.014°N 80.107°E / 13.014; 80.107

"https://ta.wikipedia.org/w/index.php?title=மீனாட்சி_பல்கலைக்கழகம்&oldid=3567792" இலிருந்து மீள்விக்கப்பட்டது