அண்ணா பல்கலைக்கழகம், சென்னை - மண்டல அலுவலகம் திருநெல்வேலி
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
![]() | |
குறிக்கோளுரை | கல்வி மூலம் சேவை Service Through Education |
---|---|
வகை | பொது |
உருவாக்கம் | 2007 |
வேந்தர் | ஆர். என். ரவி[1] |
துணை வேந்தர் | எம். இராசாராம் |
அமைவிடம் | திருநெல்வேலி, தமிழ்நாடு, இந்தியா |
வளாகம் | பாளையம்கோட்டை, திருநெல்வேலி |
சுருக்கப் பெயர் | AU TVL |
இணையதளம் | அண்ணா பல்கலைக்கழகம் திருநெல்வேலி |
அண்ணா பல்கலைக்கழகம், திருநெல்வேலி (Anna University Tirunelveli) தமிழ்நாட்டின் திருநெல்வேலி நகரில் நிறுவப் பட்டுள்ள ஓர் தொழில்நுட்ப பல்கலைக்கழகமாகும். இது 1 பெப்ரவரி 2007 அன்று அண்ணா பல்கலைக்கழகம் ஆறு பல்கலைக்கழகங்களாகப் பிரிக்கப்பட்டபோது அவற்றில் ஒன்றாக உருவானது. இது அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்த பல்கலைக்கழகமாக (affiliating type of university) செயல்பட்டு வருகிறது. விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள 65 பொறியியல் கல்லூரிகள் இந்தப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.
வளாகங்கள்[தொகு]
பல்கலைக்கழகம் திருநெல்வேலி அரசினர் பொறியியல் கல்லூரி வளாகத்திலிருந்து இயங்குகிறது. இக்கல்லூரி தேசிய நெடுஞ்சாலை 7இல் பாளையம்கோட்டையிலிருந்து கன்னியாகுமரி நோக்கி 3 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. திருநெல்வேலி தொடர்வண்டி நிலையம் மற்றும் பேருந்து நிலையத்திலிருந்து 8 கி.மீ தொலைவில் உள்ளது. இதன் அருகாமையில் நிரந்த கட்டமைப்பு ரூ.7.44 கோடி செலவில் அமைக்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடியில் 25 ஏக்கர் நிலத்தில் வ.உ.சிதம்பரனார் பொறியியல் கல்லூரியும் நாகர்கோவிலில் 25 ஏக்கர் நிலத்தில் பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியும் கட்டப்பட்டுள்ளன.
ஆசிரியர் குழு[தொகு]
பதவி | பொறுப்பு |
---|---|
துணைவேந்தர் | எம். இராசாராம் |
பதிவாளர் | என். செண்பக விநாயக மூர்த்தி |
புல முதல்வர் | எசு.நடராசன் |
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
வெளியிணைப்புகள்[தொகு]
- அலுவல் இணையதளம் பரணிடப்பட்டது 2011-04-03 at the வந்தவழி இயந்திரம்