திருவள்ளுவர் பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
திருவள்ளுவர் பல்கலைக்கழகம்
TUemblem.png

குறிக்கோள்: கண்ணுடைய ரென்பவர் கற்றோர்
நிறுவல்: 2002
வகை: பொதுத்துறை
வேந்தர்: கொனியேட்டி ரோசையா[1]
துணைவேந்தர்: முனைவர் A. ஜோதி முருகன்
அமைவிடம்: வேலூர், தமிழ்நாடு, இந்தியா
வளாகம்: நகர்ப்புறம்
சார்பு: பல்கலைக்கழக மானியக் குழு (UGC)
இணையத்தளம்: www.thiruvalluvaruniversity.ac.in

திருவள்ளுவர் பல்கலைக்கழகம் தமிழக அரசால் உருவாக்கப்பட்டுள்ள ஒரு பல்கலைக்கழகம். அக்டோபர் 16, 2002 அன்று திருவள்ளுவர் பல்கலைக்கழக சட்டம், 2002 (தமிழ்நாடு சட்டம் 32 -2002) கீழ் உருவாக்கப்பட்டது. இப்பல்கலைக்கழகம் தொடக்கத்தில் வேலூர் கோட்டை வளாகத்தில் அமைந்திருந்தது. அதன் பின்னர் வேலூரை அடுத்த சேர்க்காட்டில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு செயற்பட்டு வருகிறது. இப்பல்கலைக்கழகம் உலகப்பொதுமறையான திருக்குறளை எழுதிய திருவள்ளுவரின் பெயரில் அமைந்துள்ளது. விழுப்புரம், கடலூர், வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இப்பல்கலைக்கழகத்தின் கீழ் வருகின்றன.

வரலாறு[தொகு]

தொடக்கத்தில், சென்னைப் பல்கலைக்கழகத்தின் முதுகலை படிப்பிற்கான விரிவாக்க/நீட்சி மையமாக வேலூர் கோட்டை வளாகத்தில் செயற்பட்டு வந்தது. பின்னர் பல்கலைக்கழகமாக விரிவுபடுத்தப்பட்டது.

பல்கலைக்கழகத்தில் உள்ள துறைகள்[தொகு]

 1. பொருளாதாரம்
 2. விலங்கியல்
 3. வேதியியல்
 4. மானிடவியல்
 5. உயிர்-நுட்பவியல்
 6. குற்றவியல் மற்றும தடய அறிவியல்
 7. கணினி அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல்
 8. சுற்றுச் சூழலியல்
 9. ஆற்றலியல்
 10. கல்வியியல்
 11. ஆங்கிலம்
 12. உணவியல்
 13. வரலாறு
 14. மொழியியல்
 15. இலக்கியம்
 16. புவியியல்
 17. நூலகம் மற்றும் தகவலியல்
 18. மருத்துவ இயற்பியல்
 19. கடலியல்
 20. மருந்தியல்
 21. இயந்திரவியல்
 22. நுண் உயிரியல்
 23. அணுக்கரு இயற்பியல்
 24. அரசியல்
 25. கணிதவியல்
 26. நரம்பியல்
 27. மனவியல்/உளவியல்
 28. மனையியல்
 29. தத்துவயியல்
 30. சமூகவியல்
 31. புள்ளியியல்
 32. பொருளறிவியல்
 33. தொடர்பியல்

மேற்கோள்கள்[தொகு]

 1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.

வெளி இணைப்புகள்[தொகு]

அதிகாரப்பூர்வ இணையதளம்