உள்ளடக்கத்துக்குச் செல்

விநாயகா மிஷன் பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வினாயகா மிஷன் பல்கலைக்கழகம்
குறிக்கோளுரைநோக்கு, ஞானம், ஒற்றுமை
வகைபல்கலைக்கழகம்
உருவாக்கம்1981
வேந்தர்ஏ. சண்முகசுந்தரம்
துணை வேந்தர்வி. ஆர். இராசேந்திரன்
மாணவர்கள்25000+
பட்ட மாணவர்கள்19000+
பட்டப்பின் படிப்பு மாணவர்கள்5500+
500+
அமைவிடம், ,
வளாகம்நகர்ப்புறம்
நிறங்கள்            
சுருக்கப் பெயர்VMU,வினாயகா
சேர்ப்புப.மா.கு
இணையதளம்www.vinayakamission.com

விநாயகா மிஷன் பல்கலைக்கழகம் (Vinayaka Missions University, VMU) முன்னதாக விநாயகா மிஷன் ஆய்வு நிறுவனம் தமிழ்நாட்டின் சேலத்தில் அமைந்துள்ள உயர்கல்வி நிறுவனம் ஆகும். பல்கலைக்கழக மானியக் குழுவின் பரிந்துரைப்படி 2001இல் இந்திய அரசின் மனதவளத்துறையால் விநாயகா மிஷனுக்கு "பல்கலைக்கழகமாக" தரமுயர்த்தப்பட்டது.[1])

வரலாறு

[தொகு]

1981ஆம் ஆண்டு திருமுருக கிருபானந்த வாரியார் தவத்திரு சுந்தர சுவாமிகள் மருத்துவக் கல்வி அறக்கட்டளை நிறுவப்பட்டது. 1982ஆம் ஆண்டு நிறுவனர்-தலைவர் ஏ.சண்முகசுந்தரம் சேலத்தில் விநாயகா மிஷன் மருந்தாள்மைக் கல்லூரியை துவக்கினார்.

ஆய்வு

[தொகு]

விநாயகா மிஷன் பல்கலைக்கழகத்தில் மருத்துவம், பல்மருத்துவம், மருத்துவம்சார் அறிவியல், ஓமியோபதி மருந்துகள், பொறியியல், தொழினுட்ப, மேலாண்மைத் துறைகள், மாந்தவியல், கலை மற்றும் அறிவியல் துறைகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

கல்லூரிகள்

[தொகு]
  • விநாயகா மிஷன் கிருபானந்த வாரியார் மருத்துவக் கல்லூரி & மருத்துவமனைகள் - சேலம்
  • விநாயகா மிஷன் மருத்துவக் கல்லூரி & மருத்துவமனைகள் - காரைக்கால்
  • விநாயகா மிஷன் மருத்துவக் கல்லூரி & மருத்துவமனைகள் - புதுச்சேரி
  • விநாயகா மிஷன் சங்கராச்சாரியர் பல்மருத்துவக் கல்லூரி - சேலம்
  • விநாயகா மிஷன் ஓமியோபதி மருத்துவக் கல்லூரி & மருத்துவமனை - சேலம்
  • விநாயகா மிஷன் கிருபானந்த வாரியார் பொறியியல் கல்லூரி - சேலம்
  • ஆறுபடை வீடு தொழினுட்பக் கழகம் - சென்னை
  • விநாயகா மிஷன் மருந்தாள்மைக் கல்லூரி - சேலம்
  • விநாயகா மிஷன் இயன்முறை மருத்துவக் கல்லூரி - சேலம்
  • விநாயகா மிஷன் கிருபானந்த வாரியார் கலை மற்றும் அறிவயில் கல்லூரி - சேலம்
  • விநாயகா மிஷன் அன்னபூர்ணா செவிலியக் கல்லூரி - சேலம்
  • விநாயகா மிஷன் செவிலியக் கல்லூரி - காரைக்கால்
  • விநாயகா மிஷன் செவிலியக் கல்லூரி - புதுச்சேரி
  • அன்னபூர்ணா பொறியியல் கல்லூரி, சேலம் - அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்துள்ளது
  • அன்னபூர்ணா மருத்துவக் கல்லூரி & மருத்துவமனைகள், சேலம் - டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்துடன் இணைந்துள்ளது

2005ஆம் ஆண்டிலிருந்து தொலைதூரக் கல்வி இயக்குநரகம் நிறுவப்பட்டு இயங்கி வருகின்றது.

படங்கள்

[தொகு]

மேற்சான்றுகள்

[தொகு]
  1. "UGC Act-1956" (PDF). mhrd.gov.in/. Secretary, University Grants Commission. பார்க்கப்பட்ட நாள் 1 February 2016.

வெளி இணைப்புகள்

[தொகு]