செட்டிநாடு பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செட்டிநாடு பல்கலைக்கழகம்
குறிக்கோளுரைசிந்தி, புத்தமை, மாற்று
வகைதனியார்
உருவாக்கம்2005
அமைவிடம்
செட்டிநாடு எல்த் சிட்டி, கேளம்பாக்கம், சென்னை
வளாகம்ஊரகம்
சேர்ப்புப.மா.கு
இணையதளம்[1]

செட்டிநாடு பல்கலைக்கழகம் (Chettinad University) அல்லது செட்டிநாடு ஆய்வு மற்றும் கல்வி அகாதமி சென்னையிலிருந்து ஏறத்தாழ 30 கிமீ தொலைவில் கேளம்பாக்கத்தில் அமைந்துள்ள நிகர்நிலைப் பல்கலைக்கழகம் ஆகும். செட்டிநாடு குழுமத்தைச் சேர்ந்த இந்நிறுவனம் 2005ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இங்கு செட்டிநாடு மருத்துவக் கல்லூரி மற்றும் ஆய்வுக் கழகம், செட்டிநாடு செவிலியக் கல்லூரி ஆகியவையும் உலகத்தரமான மீச்சிறப்பியல் மருத்துவமனையும் அமைந்துள்ளன. இந்தப் பல்கலைக்கழகம் ஆண்டுக்கு 350 மாணவர்களை சேர்க்கின்றது.


2012இல் மாணவர் சேர்க்கைக்கு விதிமுறைகளின்படி மாநில அரசுக்கு ஒதுக்கப்பட வேண்டிய 85 விழுக்காடு இடங்களைத் தர மறுத்ததாக அறியப்படுகின்றது.[1]

மேற்சான்றுகள்[தொகு]

  1. Kannan, Ramya (August 10, 2008). "Decision today on Chettinad Medical College seats". தி இந்து (Chennai). Archived from the original on ஆகஸ்ட் 12, 2008. https://web.archive.org/web/20080812100504/http://www.hindu.com/2008/08/10/stories/2008081060200800.htm. பார்த்த நாள்: October 4, 2012.