இந்தியக் கடல்சார் பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் (Indian Maritime University) (IMU) அல்லது இந்தியன் மேரிடைம் பல்கலைக்கழகம் தமிழகத் தலைநகர் சென்னையில் செம்மண்சேரி கிராமத்தில் கிழக்குக் கடற்கரைச் சாலைக்கும் இராஜிவ் காந்தி சாலைக்கும் இடையே நடுவண் அரசால் கட்டமைக்கபடும், கடல்சார் போக்குவரத்துத் துறை கல்வித்திட்டங்களை வழங்கும், ஓர் பல்கலைக்கழகமாகும். இது இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் சட்டம், 2008 (2008ஆம் ஆண்டின் 22வது சட்டம்)படி 2008ஆம் ஆண்டு நவம்பர் 14ஆம் நாள் நிறுவப்பட்டது. தலைமையகத்தைச் சென்னையிலும் வெளிவளாகங்களாக கொல்கத்தா, மும்பை மற்றும் விசாகப்பட்டிணம் ஆகிய இடங்களிலும் கொண்டு அமைந்துள்ளது.[1] அண்மையில் கொச்சி துறைமுகம் சலுகையில் வழங்கியுள்ள இடத்தில் கொச்சி வளாகம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

தற்போது உத்தண்டியில் உள்ள தேசிய கடல்சார் அகாதெமி வளாகத்திலிருந்து இயங்குகிறது.

பல்கலைக்கழக்கத்தில் இணைக்கப்பட்டுள்ள நிறுவனங்கள்[தொகு]

தற்போது இயங்கிவரும் கீழுள்ள அரசு மற்றும் அரசுசார் கடல்சார் பயிற்சி மற்றும் ஆய்வு மையங்களும் கல்வி நிறுவனங்களும் இப்பல்கலைக்கழக்கத்தில் இணைக்கப்பட்டுள்ளன:

  • கடல்சார் பொறியியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், கொல்கத்தா
  • கடல்சார் பொறியியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், மும்பை
  • லால் பகதூர் சாத்திரி மேம்பட்ட கடல்சார் கல்வி மற்றும் ஆய்வுக் கல்லூரி, மும்பை
  • பயிற்சிக் கப்பல் டி.எஸ். சாணக்யா, நவி மும்பை
  • தேசிய கடல்சார் அகாதெமி, சென்னை
  • இந்திய துறைமுக மேலாண்மைக் கழகம், கொல்கத்தா
  • தேசிய கப்பல் வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி மையம், விசாகப்பட்டிணம்
  • இந்திய கடல்சார் பல்கலைக்கழக வளாகம், கொச்சி

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). 2009-09-20 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2011-03-03 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)

வெளியிணைப்புகள்[தொகு]