பாரத் பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பாரத் பல்கலைக்கழகம்
Bharath University
முந்தைய பெயர்s
Bharath Engineering College
குறிக்கோளுரைபுத்தமைவினால் உலகை வெல்க.
கடின உழைப்பால் விண்மீன் தொடு.
வகைநிகர்நிலைப் பல்கலைக்கழகம்
உருவாக்கம்1984
தலைவர்ஜே. சந்தீப் ஆனந்த்
வேந்தர்அவ்வை நடராசன்
துணை வேந்தர்எம். பொன்னவைக்கோ
கல்வி பணியாளர்
1300
மாணவர்கள்10000
அமைவிடம்சென்னை, தமிழ்நாடு, இந்தியா
12°54′28″N 80°08′32″E / 12.907748°N 80.142163°E / 12.907748; 80.142163ஆள்கூறுகள்: 12°54′28″N 80°08′32″E / 12.907748°N 80.142163°E / 12.907748; 80.142163
வளாகம்நகர்ப்புறம்
நான்கு வளாகங்களில் ஏறத்தாழ 305 ஏக்கர்கள் (123 ha).
தரநிர்ணயம்என்ஏஏசி('ஏ' தரநிலை)[1]
சேர்ப்புப.மா.கு
இந்தியப் பல்கலைக்கழகங்களின் சங்கம்
இணையதளம்www.bharathuniv.ac.in

பாரத் பல்கலைக்கழகம் (Bharath University) அல்லது பாரத் உயர்கல்வி மற்றும் ஆய்வுக் கழகம் (BIHER) அல்லது பாரத் அறிவியல் மற்றும் தொழினுட்பக் கழகம் (BIST)

வரலாறு[தொகு]

பாரத் பல்கலைக்கழகம் 1984ஆம் ஆண்டு எஸ்.ஜகத்ரட்சகனால் பாரத் பொறியியல் கல்லூரி என நிறுவப்பட்டது. தமிழ்நாட்டில் துவக்கத்தில் நிறுவப்பட்ட தன்னாட்சி பெற்ற பொறியியல் கல்லூரிகளில் இது ஒன்றாக இருந்தது.[3] இந்தப் பொறியியல் கல்லூரி முதலில் சென்னைப் பல்கலைக்கழகத்துடனும் பின்னர் அண்ணாப் பல்கலைக்கழகத்துடனும் இணைக்கப்பட்டிருந்தது. 2002ஆம் ஆண்டில் பல்கலைக்கழக மானியக் குழு இக்கல்லூரிக்கு நிகர்நிலைப் பல்கலைக்கழக நிலையை வழங்கியது. அப்போது இதன் பெயர் பாரத் உயர்கல்வி மற்றும் ஆய்வுக் கழகம் என மாற்றப்பட்டது. செப்டம்பர் 2006இல் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் தங்கள் பெயர்களில் பல்கலைக்கழகம் என்ற ஒட்டை வைத்துக்கொள்ளலாம் என்ற பல்கலைக்கழக மானியக் குழுவின் அறிவிப்பினை அடுத்து இதன் பெயர் பாரத் பல்கலைக்கழகம் என மாற்றப்பட்டது.

வளாகங்கள்[தொகு]

பாரத் பல்கலைக்கழகம் நான்கு வளாகங்களிலிருந்து செயல்படுகின்றது. இவற்றில் மூன்று சென்னையிலும் ஒன்று புதுச்சேரியிலும் உள்ளன.[4]

பாரத் அறிவியல் மற்றும் தொழினுட்பக் கழகம், சென்னை[தொகு]

இதுவே 1984இல் நிறுவப்பட்ட முதன்மை வளாகமாகும். இது துவக்கத்தில் 'பாரத் பொறியியல் கல்லூரி' என்று பெயரிடப்பட்டிருந்தது. 2002ஆம் ஆண்டில் நிகர்நிலைப் பல்கலைக்கழக நிலை எய்தியபோது, இதன் பெயர் 'பாரத் உயர்கல்வி மற்றும் ஆய்வுக் கழகம்' என மாற்றப்பட்டது. 2003இல் 'பாரத் பல்கலைக்கழகம்' உருவானபோது, இக்கல்லூரிக்கு 'பாரத் அறிவியல் மற்றும் தொழினுட்பக் கழகம்' எனப் பெயரிடப்பட்டது.

ஸ்ரீ பாலாஜி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, சென்னை[தொகு]

இக்கல்லூரி 2004ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இதே வளாகத்தில் ஸ்ரீ பாலாஜி செவிலியர் கல்லூரியும் உள்ளது.

ஸ்ரீ இலட்சுமி நாராயணா மருத்துவ அறிவியல் கழகம், புதுச்சேரி[தொகு]

இக்கல்லூரி 2007ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.

ஸ்ரீ பாலாஜி பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, சென்னை[தொகு]

இக்கல்லூரி 2002ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இதே வளாகத்தில் 2007ஆம் ஆண்டில் ஸ்ரீ பாலாஜி இயன்முறை மருத்துவக் கல்லூரி நிறுவப்பட்டுள்ளது.

சகோதர நிறுவனங்கள்[தொகு]

மேற்சான்றுகள்[தொகு]

  1. "The Accreditation Results of Deemed to be Universities approved by the Executive Committee on 16th November, 2015.". மூல முகவரியிலிருந்து 19 ஜனவரி 2016 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 16 January 2016.
  2. "The Accreditation Results of Deemed to be Universities approved by the Executive Committee on 16th November, 2015.". மூல முகவரியிலிருந்து 19 ஜனவரி 2016 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 16 January 2016.
  3. "About Bharath University". மூல முகவரியிலிருந்து 22 ஜனவரி 2016 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 16 January 2016.
  4. "http://www.bharathuniv.ac.in/naac/2015/ssr.pdf". பார்த்த நாள் 27 January 2016.[தொடர்பிழந்த இணைப்பு]
  5. "http://www.tagore-engg.ac.in/NAAC-Self%20Study%20Report%202014.pdf". மூல முகவரியிலிருந்து 1 மார்ச் 2016 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 27 January 2016.
  6. "View details of college - Tagore Medical College and Hospital, Chennai". பார்த்த நாள் 27 January 2016.
  7. "http://www.jerusalemengg.ac.in/ext/jcessr.pdf". மூல முகவரியிலிருந்து 3 பிப்ரவரி 2016 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 27 January 2016.
  8. "http://www.bharathuniv.ac.in/downloads/engg_info.pdf". Bharath University. மூல முகவரியிலிருந்து 6 மார்ச் 2016 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 27 January 2016.
  9. "https://www.annauniv.edu/cai/Affiliated%20Colleges%20list%20by%20Alphabetical/Affiliated%20Colleges%20-%20PDF%20Files/Sri%20Lakshmi%20Ammal%20Engineering%20College.pdf". பார்த்த நாள் 27 January 2016.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாரத்_பல்கலைக்கழகம்&oldid=3249452" இருந்து மீள்விக்கப்பட்டது