உள்ளடக்கத்துக்குச் செல்

அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம்
குறிக்கோளுரை"சரி நிகர் சமானம்"
வகைபொதுத்துறை பல்கலைக்கழகம்
உருவாக்கம்1984
வேந்தர்தமிழ்நாட்டு முதலமைச்சர்
துணை வேந்தர்முனைவர் ஜி. வள்ளி
அமைவிடம்,
10°16′09″N 77°28′52″E / 10.2692°N 77.4812°E / 10.2692; 77.4812
வளாகம்ஊரகம்
சேர்ப்புபல்கலைக்கழக மானியக் குழு
இணையதளம்www.motherteresawomenuniv.ac.in

அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் (Mother Teresa Women's University) என்பது தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். இது கல்வி வழி பெண்களை முன்னேற்றுவதை தம் இலக்காகக் கொண்டு செயல்படும் கல்வி நிறுவனம் ஆகும். 1984 ஏப்ரலில் சரி நிகர் சமானம் என்ற பாரதியின் மொழியை இலக்காகக் கொண்டு அவரது நூற்றாண்டு விழாக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாகத் தொடங்கப்பட்டது. அத்தருணத்தில் தனது மகத்தான சேவைக்காக நோபல் விருதைப் பெற்ற அன்னை தெரசாவை அங்கீகரிக்கும் வகையில் அவரது பெயரைப் பல்கலைக்கழகத்துக்குச் சூட்டியதுடன், அவரது கரங்களால் கொடைக்கானலில் அடிக்கல் நாட்டச் செய்துத் துவக்கப்பட்டது. தொடக்கத்தில் கொடைக்கானலில் [1][2] உருவாக்கப்பட்டுப் பின்னர் 1990 இல் சென்னைக்கு மாற்றப்பட்டு மீண்டும் கொடைக்கானலுக்கு 1994 இல் மாற்றப்பட்டது. இதன் மையங்கள் கொடைக்கானல், மதுரை மற்றும் சென்னையில் உள்ளன. இங்கு பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, இளநிலை ஆய்வுப்படிப்பு, முனைவர் பட்ட ஆய்வு, ஆசிரியர் பயிற்சிப்பட்ட வகுப்பு, சான்றிதழ் வகுப்புகள், சுய தொழில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.[3]

துறைகள்

[தொகு]
  • கணினி அறிவியல்
  • கணிதம்
  • இயற்பியல்
  • வேதியியல்
  • தாவரவியல்
  • உயிர்தொழில்நுட்பம்
  • உணவு மற்றும் ஊட்டச்சத்து
  • துணி மற்றும் ஆடை வடிவமைப்பு
  • வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனை
  • தமிழ்
  • ஆங்கிலம்
  • வரலாறு
  • சமூகவியல்
  • பொது நிர்வாகம்
  • பெண்கள் ஆய்வு
  • வணிகவியல் முதுநிலைப் பட்டம்
  • வணிக மேலாண்மை முதுநிலைப் பட்டம்
  • கணினி பயன்பாடுகள் முதுநிலைப் பட்டம்
  • சமூகப் பணியியல் முதுநிலைப் பட்டம்

என பல்வேறு துறைகள் இந்த பல்கலைக்கழகத்தில் உள்ளன [4]

வெளி இணைப்புகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Mother Teresa Women's University, Kodaikanal". College Site. January 2014.
  2. "Mother Teresa Women's University, Kodaikanal". Colleges in Tamil Nadu. January 2014.
  3. "Tamil Nadu Governor Appoints K Kala As Vice-Chancellor Of Mother Teresa Women's University". NDTV.com (in ஆங்கிலம்). January 6, 2023. Retrieved 2023-02-01.
  4. https://www.motherteresawomenuniv.ac.in/