அண்ணா பல்கலைக்கழகம் சென்னை - மண்டல அலுவலகம், கோயம்புத்தூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அண்ணா பல்கலைக்கழகம் சென்னை - மண்டல அலுவலகம், கோயம்புத்தூர்
ஏயூடி கோவை
Anna University of Technology, Coimbatore logo.jpg

குறிக்கோள்:தொழில்நுட்பக் கல்வி மற்றும் ஆய்வில் தலையாயச் சிறப்பு
நிறுவல்:2007
வகை:பொது
வேந்தர்:சுர்ஜித் சிங் பர்னாலா
துணைவேந்தர்:முனைவர்.கே.கருணாகரன்
அமைவிடம்:கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா
வளாகம்:நவாவூர், கோயம்புத்தூர்
விளையாட்டில்
சுருக்கப் பெயர்:
AUT CBE
இணையத்தளம்:www.annauniv.ac.in

அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் (Anna University of Technology, Coimbatore) தமிழ்நாட்டின் தொழிற்சாலைகள் நிறைந்த கோயம்புத்தூர் நகரில் நிறுவப் பட்டுள்ள ஓர் தொழில்நுட்ப பல்கலைக்கழகமாகும். இது 1 பெப்ரவரி 2007 அன்று அண்ணா பல்கலைக்கழகம் ஆறு பல்கலைக்கழகங்களாகப் பிரிக்கப்பட்டபோது அவற்றில் ஒன்றாக உருவானது. இது அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்த பல்கலைக்கழகமாக (affiliating type of university) செயல்பட்டு வருகிறது.

கோவை, ஈரோடு, சேலம், நீலகிரி, திருப்பூர், நாமக்கல், கரூர், தர்மபூரி, கிருட்டிணகிரி மாவட்டங்களில் உள்ள பொறியியல் கல்லூரிகள் இந்தப் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்குகின்றன. தற்போது கோவை அரசினர் தொழில்நுட்பக் கல்லூரியில் இயங்கி வருகிறது. பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் ஒதுக்கப்பட்ட 1000 ஏக்கர் நிலத்தில் சட்டச்சிக்கல்கள் உள்ளதால் மாற்று இடம் தேடப்பட்டு வருகிறது.[1]

அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம், கோவையின் கீழ் 3 அரசினர் பொறியியல்/தொழில்நுட்ப கல்லூரிகள், இரு அரசுசார் பொறியியல் கல்லூரிகள், 98 சுயநிதிக் கல்லூரிகள் மற்றும் 15 தன்னாட்சி நிறுவனங்கள் உள்ளன. இந்த நிறுவனங்களில் ஏறத்தாழ 80,000 மாணவர்கள் பல்வேறு பொறியியல் படிப்புகளை படித்து வருகின்றனர். இவர்களில் 80% பேர் சிற்றூர்களிலிருந்து கல்விபெற வந்தவர்கள்.

அண்ணா பல்கலைக்கழகம், கோவை பொறியியல், தொழில்நுட்பம், மேலாண்மை மற்றும் தொடர்புடைய அறிவியல் படிப்புகளை வழங்கி வருகிறது. ஆராய்ச்சிகளை வளர்த்தும் அவற்றிலிருந்து பெறப்பட்ட அறிவை பரப்புவதிலும் கவனம் செலுத்துவதுடன் தொழிலகங்களுக்கும் கல்விநிறுவனங்களுக்கும் இடையே பாலம் அமைத்து பயனுள்ள கல்வித்திட்டங்களை வகுப்பதிலும் சிறந்த பணி ஆற்றுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Anna University Looking for Its Own Campus