தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகம்
Appearance
குறிக்கோளுரை | உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டில் செம்மை |
---|---|
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை | Excellence in Physical Education And Sports |
வகை | பொதுத்துறை பல்கலைக்கழகம் |
உருவாக்கம் | 15 செப்டம்பர் 2005 |
வேந்தர் | ஆர். என். ரவி[1] |
துணை வேந்தர் | எம். சுந்தர்[2] |
மாணவர்கள் | 7500 |
அமைவிடம் | , , |
வளாகம் | நகர்ப்புறம் |
இணையதளம் | www |
தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகம் என்பது தமிழ்நாடு அரசால் 2005ஆம் ஆண்டு உடல்கல்வியியல் மற்றும் விளையாட்டுக்கள் துறைகளுக்கென சென்னையில் அமைக்கப்பட்ட ஒரு பல்கலைக்கழகம். இந்தியாவிலேயே இதுவே விளையாட்டுக் கல்விக்காக அமைக்கப்பட்ட முதல் பல்கலைக்கழகம் ஆகும்.
வழங்கும் படிப்புகள்
[தொகு]இப்பல்கலைக்கழகம் கீழ்காணும் நான்கு பிரிவுகளின் கீழான இளம்நிலை மற்றும் முதுநிலைப் பட்டப்படிப்பு, பட்டயப் படிப்பு மற்றும் ஆய்வியல் நிறைஞர், முனைவர், மதிப்புறு முனைவர் போன்ற ஆய்வியல் பட்டப்படிப்புகளையும் வழங்குகிறது.
- ஆசிரியர் கல்வி
- விளையாட்டு மற்றும் இளைஞர் நலன்
- உடல்நலம் மற்றும் உடல்நல அறிவியல்
- மேலாண்மை
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ Reporter, Staff (2021-12-12). "Two universities in State get new Vice-Chancellors". The Hindu (in Indian English). பார்க்கப்பட்ட நாள் 2021-12-12.
வெளி இணைப்புகள்
[தொகு]- http://www.tnpesu.org - (ஆங்கில மொழியில்)