தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் | |
வகை | பொது |
---|---|
உருவாக்கம் | 1971 |
வேந்தர் | பன்வாரிலால் புரோகித்[1] |
மாணவர்கள் | 7500 scientists(Ph.D.,)= 1400 |
அமைவிடம் | கோயமுத்தூர், தமிழ்நாடு, இந்தியா |
சேர்ப்பு | இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் |
இணையதளம் | www.tnau.ac.in |
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். இது 1971 ஜூன் 1 ஆம் தேதி உருவாக்கப்பட்டது. கோயம்புத்தூரில் அமைந்துள்ளது. 1990 இல் தமிழ்நாடு ஜி. டி. நாயுடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் எனப்பெயர் மாற்றப்பட்டுப் பின்னர் 1992 இல் மீண்டும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் என மாற்றப்பட்டது.
உறுப்புக் கல்லூரிகள்[தொகு]
இந்தப் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் உறுப்புக் கல்லூரிகள்.[2]
வேளாண்மைக் கல்லூரிகள்[தொகு]
- வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், கோயமுத்தூர்.
- வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மதுரை.
- வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், கிள்ளிகுளம்.
- அன்பில் தர்மலிங்கம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்,, நாவலூர் குட்டப்பட்டு சிற்றூர், திருச்சிராப்பள்ளி, தமிழ் நாடு.
- வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், திருவண்ணாமலை
- வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தஞ்சாவூர்
- வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், குடுமியான்மலை, புதுக்கோட்டை மாவட்டம்
- வேளாண்மை கல்வி நிறுவனம், குமுளுர் திருச்சிராப்பள்ளி.
தோட்டக்கலை கல்லூரிகள்[தொகு]
- தோட்டக்கலைக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், பெரியகுளம்
- மகளிர் தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், திருச்சிராப்பள்ளி
வேளாண்மை பொறியியல் கல்லூரிகள்[தொகு]
- வேளாண்மை பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், கோயம்புத்தூர்,
- வேளாண்மைப் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், குமுளூர்.
வனக்கல்லூரிகள்[தொகு]
- வனவியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மேட்டுப்பாளையம்.
மனையியல் கல்லூரிகள்[தொகு]
வேளாண்மை கல்வி நிறுவனம் குமுளுர் திருச்சிராப்பள்ளி[தொகு]
வேளாண்மை கல்வி நிறுவனம் குமுளுர், திருச்சிராப்பள்ளி.
வேளாண்மை கல்வி நிறுவனம் 2016 ஆம் ஆண்டு திருச்சியில் நிறுவப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வேளாண்மை பட்டயப் படிப்பு கல்வி நிறுவனம் அனைத்தையும் ஒன்றாகக் இனைத்து குமுளுரில் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனத்தில் 500 மாணவர்கள் பயில்கின்றனர். 25 கி.மீ தொலைவில் திருச்சி மாநகரம் உள்ளது.7 கி.மீ தொலைவில் லால்குடி நகரம் உள்ளது.
கல்லூரி ஆய்வகம்
1. மண்ணியல் ஆய்வகம்.
2. பூச்சியியல் ஆய்வகம்
3.நோயியல் ஆய்வகம்
4.உழவியல் ஆய்வகம்
5.நூண்ணூயிரியல் ஆய்வகம்
6.தாவர இனப்பெருக்கவியல்ஆய்வகம்
7 . விதையியல் ஆய்வகம்
- மாணவர்கள் தங்கி பயில ஆண்கள்/ பெண்கள் இருபலருக்கும் விடுதி வசதி உள்ளது.
- மாணவர்கள் கல்வி சுற்றுலா செல்வதற்கு ஏதுவாக 4 பேருந்துகள் மற்றும் ஒரு A/C பேருந்து உள்ளது.
- காலை 9 மணி முதல் 5 மணி வரை மாணவர்கள் சிற்றுண்டி சாலை அமைந்துள்ளது.
தனியார்/ இணைவு கல்லூரிகள்[தொகு]
- ரோவர் வேளாண்மை கல்லூரி, பெரம்பலூர்
- ஆதிபராசக்தி வேளாண்மைக்கல்லூரி, கலவை
- CAT தேனி
- வானவராயர் வேளாண்மைக்கல்லூரி, கோயம்புத்தூர்
பல்கலைக்கழக ஆராய்ச்சி[தொகு]
- முதுகலை கல்வியகப் பள்ளி, கோயமுத்தூர்
- தமிழ் நாடு நெல் ஆராய்ச்சி நிலையம்.
- ஆராய்ச்சி இயக்ககம், கோயம்புத்
- தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்
- தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்கள்
- எண்ணெய் வித்துக்கள் ஆராய்ச்சி நிலையம் திண்டிவனம்- விழுப்புரம்.
- வேளாண்மை ஆராய்ச்சி நிலையம் கோவில்பட்டி- தூத்துக்குடி.
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "Tamil Nadu Agricultural University :: Colleges". tnau.ac.in (2012 [last update]). பார்த்த நாள் 1 June 2012.