அண்ணா பல்கலைக்கழகம் சென்னை - மண்டல அலுவலகம், திருச்சிராப்பள்ளி
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
Other name | AUT-T, BIT Campus |
---|---|
குறிக்கோளுரை | Progress through Knowledge |
வகை | Public |
உருவாக்கம் | 1999 |
வேந்தர் | Governor of Tamilnadu |
துறைத்தலைவர் | Dr. T. Senthilkumar |
அமைவிடம் | திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு, India 10°39′26″N 78°44′46″E / 10.65722°N 78.74611°E |
வளாகம் | Tiruchirappalli, 354 ஏக்கர்கள் (143 ha) |
சேர்ப்பு | UGC |
இணையதளம் | www.aubit.edu.in |
அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி தமிழக அரசால் நடத்தப்படும் ஒரு தொழில்நுட்ப பல்கலைக்கழகம் ஆகும். 2007, பெப்ரவரி 1 முதல் செயல்பாட்டுக்கு வந்த இப்பல்கலைக்கழகம் சேர் பலகலைக்கழக வகையானது ஆகும்.இப்பல்கலைகழகம் திருச்சி நகரில் இருந்து 17 கிலோ மீட்டர் தொலைவில் புதுக்கோட்டை செல்லும் வழியில் உள்ளது.
முன்பு BIT எனவும் பின்பு School of Engineering எனவும் அழைக்கப்பட்ட இந்நிறுவனம் பின்பு அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம் திருச்சிராப்பள்ளியாக உருப்பெற்றது. 7 பல்கலைக்கழக வளாகங்களையும், 2 அரசு பொறியியல் கல்லூரிகளும், 77 தனியார் பொறியியல் கல்லூரிகளும், 11 தற்சார்பு நிறுவனங்களும் (MBA =8 + MCA=2+ B.ARCH=1) இதன் கட்டுப்பாட்டில் உள்ளது. இதன் முதல் துணை வேந்தராக முனைவர் வே. ராமசந்திரன் தமிழக அரசால் 08-02-2007 அன்று நியமிக்கப்பட்டார். அவரது பணிக்காலம் முடிவடைந்து புதிய துணை வேந்தராக முனைவர் P. தேவதாஸ் மனோகரன் 15-07-2010 அன்று நியமிக்கபட்டுள்ளார்.
சிறப்பு அம்சங்கள்[தொகு]
இப்பல்கலைக்கழகத்தில் தமிழ் வழி கல்வி நடைமுறைப்படுத்தபடுகிறது. இங்கு மேலாண்மை படிப்பு, பொறியியல் படிப்பு, கம்யூட்டர் அப்ளிகேஷன், இரட்டை பட்டம் போன்ற படிப்புகள் உள்ளன. முதுநிலை படிப்புகளும் உள்ளன. முதுநிலை பட்டம் பெற அண்ணா பல்கலைகழகத்தில் நடைபெறும் நுழைவுத்தேர்வு எழுதி, வெற்றி பெற வேண்டும் .
வளாகம்[தொகு]
நூலகம்[தொகு]
பல்கலைக்கழக வளாகத்தில் முற்றில்லும் கணினி மயமாக்கப்பட்ட நூலகம் செயல்படுகிறது. மாணவர்களின் வசதிக்கேற்ப நகலாக்கம் செய்து கொள்ளும் வசதியும் உள்ளது.மேலும் மாணவர்கள் தங்கள் குறிப்புகளை தொகுத்து கொள்ளவும், இணையத்தில் படிக்கவும் கணினி வசதிகளும் உள்ளன.
வங்கி[தொகு]
இங்கு இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட கனரா வங்கி செயல்படுகிறது .கல்வி கட்டணங்கள் அனைத்தும் இதன் மூலம் வசூலிக்கபடுகிறது.மேலும் கரூர் வைசியா வங்கியும் உள்ளது. இரண்டு வங்கிகளும் பணம் பட்டுவாடா இயந்திரத்தை தன்னுள்ளே கொண்டுள்ளன. கூடுதலாக ஆக்சிஸ் வங்கியின் கட்டண வசூல் மையம் ஒன்றும் இங்கு செயல்படுகிறது.
நல மையம்[தொகு]
மாணவர்களின் உடல் நலக் குறைபாடுகளுக்கு சிகிச்சை அளிக்க இலவச நல மையம் இங்கு செயல்படுகிறது. கலந்தாய்வு முதல் மருந்துகள் வரை எதற்கும் கட்டணம் வசூலிக்கப்படுவது இல்லை.
பேருந்து வசதி[தொகு]
திருச்சி மத்தியப் பேருந்து நிலையத்திலிருந்து கீரனூர் வரை சென்று வரும் K1 என்ற பேருந்தும், கல்லூரியில் இருந்து, விமான நிலையம் - கே.கே. நகர் வழியாக மத்திய மற்றும் சத்திரம் பேருந்து நிலையங்களுக்கு செல்ல 63B என்ற பேருந்தும் உள்ளன. அத்துடன், திருவரங்கத்தில் இருந்து திருவெறும்பூா், சூாியூர் வழியாகவும் பேருந்து இயக்கபடுகிறது. மேலும் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும் புதுக்கோட்டை மாா்க்க பேருந்துகளும் பல்கலைக்கழகத்தில் நின்று செல்லும்.
செயல்படும் மாணவர் அமைப்புகள்[தொகு]
- புதுமை சிந்தனைகள் அமைப்பு (Innovautt) பரணிடப்பட்டது 2011-02-21 at the வந்தவழி இயந்திரம்
- பொழுதுபோக்கு அமைப்பு (Hobby club)
- என் பெயர் மரம் அமைப்பு (My name is tree)
- மனம் அமைப்பு
- மாணவர் மின்னிதழ் (The AUTianz பரணிடப்பட்டது 2011-11-13 at the வந்தவழி இயந்திரம்)
நுட்ப/கலை விழாக்கள்[தொகு]
கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரிகள்[தொகு]
அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழக கட்டுபாட்டில் உள்ள கல்லூரிகள்.
- அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம்,திருச்சிராப்பள்ளி-அரியலுர் வளாகம்,அரியலுர்.
- அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம்,திருச்சிராப்பள்ளி-பண்ருட்டி வளாகம்,பண்ருட்டி.
- அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம்,திருச்சிராப்பள்ளி-திருக்குவளை வளாகம்,திருக்குவளை.
- அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம்,திருச்சிராப்பள்ளி-பட்டுக்கோட்டை வளாகம்,பட்டுக்கோட்டை.
வெளி இணைப்புகள்[தொகு]
- அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம் இணையத்தளம் பரணிடப்பட்டது 2010-07-22 at the வந்தவழி இயந்திரம்
- அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் உள்ள படிப்புகள். பரணிடப்பட்டது 2011-02-22 at the வந்தவழி இயந்திரம்
- அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் உள்ள கல்லூரிகள். பரணிடப்பட்டது 2011-02-21 at the வந்தவழி இயந்திரம்
- கலை விழா பரணிடப்பட்டது 2011-02-28 at the வந்தவழி இயந்திரம்