வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகம்
குறிக்கோளுரைA place to learn; A chance to grow
வகைபல்கலைக்கழகம்
உருவாக்கம்1984
வேந்தர்Mr.G.Viswanathan
நிருவாகப் பணியாளர்
1410 (ஆசிரியர்கள்=655)
மாணவர்கள்12242 (ஆ=8895;பெ=3347)
அமைவிடம், ,
வளாகம்புறநகர், 250 ஏக்கர் (1 கிமீ²)
இணையதளம்http://www.vit.ac.in

வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் அல்லது வி.ஐ.டி பல்கலைக்கழகம் (VIT University) தமிழ் நாட்டில் உள்ள வேலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள பொறியியல் நிகர்நிலை பல்கலைக்கழகம் ஆகும். இப்பல்கலைக்கழகத்தை தோற்றுவித்து, அதன் வேந்தராகவும் இருந்து வருபவர் ஜி.விசுவநாதன் ஆவார். 1984ல் பொறியியல் கல்லூரியாக தொடங்கப்பட்ட இக்கல்லூரி, 2000 வரை சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வந்தது, பின்னர் 2001 இல் நிகர்நிலை பல்கலைக்கழகமாக உயர்வு கண்டது. செப்டம்பர் 2006ல் வேலூர் தொழில்நுட்ப நிறுவனம்(Vellore Institute of Technology) என்று பெயர் மாற்றப்பட்டது.[1]

வரலாறு[தொகு]

வி.ஐ.டி. பல்கலைக்கழகம் 1984 இல் வேலூர் இன்ஜீனியரிங் கல்லூரி என்ற பெயரில் தொடங்கப்பட்டது. பின்னர், 2001 இல் நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக அறிவிக்கப்பட்டதும் வேலூர் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி என்றானது. அதன் பின்னர், 2006 இல் யுனிவர்சிடி கிரென்ஸ் கமிஷெனின் படி வி.ஐ.டி பல்கலைக்கழகம் என பெயர் மாற்றம் அடைந்தது.[1] மாபெரும் புகழ் பெற்று விளங்கும் இப்பல்கலைகழகம் சமீபத்தில் இந்தியா டுடே பத்திரிக்கையால் நடத்தப்பட்ட இந்தியாவின் சிறந்த பொறியியல் கல்லூரிகள் என்ற கருத்து கணிப்பில் 10வது இடம் பெற்றது.

இப்பல்கலைகழகத்தில் 18 இளங்கலை பாடபிரிவுகளும், 32 முதுகலை பாடபிரிவுகளும் உள்ளன.அது மட்டுமன்றி ஆராய்ச்சி சார்ந்த பல்வேறு பாடபிரிவுகளும் உள்ளன. இங்கு சுமார் 12,250 மாணவ, மாணவியர் கல்வி கற்கின்றனர்.

கல்லூரி வாழ்க்கை[தொகு]

வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் 8 கல்வி பாடப்பிரிவுகள் உள்ளன. விளையாட்டு, கல்வி, கலை என அனைத்து துறைகளிலும் மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்கப்படுகிறது. கல்வி பயிலும் போதே எண்ணற்ற மாணவர்கள் தலைசிறந்த மென்பொருள் நிறுவனங்களில் பணி பெறும் வாய்ப்படைகிறார்கள்.

ரிவேரா[தொகு]

வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் 4 நாட்கள் நடைபெரும் கலை நிகழ்ச்சி ரிவேரா என அழைக்கப்படுகிறது. இவ்விழாவில் பங்குபெற பல கல்லூரிகளில் இருந்து மாணவர்கள் ஆர்வத்துடன் வருகின்றனர். ரிவேராவின் போது எண்ணற்ற விளையாட்டு, நடனம், பாட்டு, எழுத்து, இசை மற்றும் புதிர் போட்டிகள் நடைபெறும். திரை பிறபலங்கள் பலர் வருகை தருவது இவ்விழாவின் மற்றோரு சிறப்பாகும்.

கல்லூரி கட்டிட அமைப்பு, வசதிகள்[தொகு]

வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு தேவையான எல்லா வசதிகளும் உள்ளன. ஒவ்வொரு துறைக்கும் தனித்தனி கட்டிடம் ஒதுக்கப்பட்டு வகுப்புகள் நடைபெறுகின்றன. இவைத் தவிர, மாணவர்களுக்கென 13 விடுதிகளும், மாணவிகளுக்கென 4 விடுதிகளும் செயல்பட்டு வருகின்றன. அனைத்து விடுதிகளிலும் விளையாட்டு மைதனங்கள் மற்றும் நீச்சல் குள வசதிகள் செய்யப்பட்டு உள்ளது.

இதைத் தவிர, ஆண்டுதோறும் பல வழிகளில் மாணவர்களின் நன்மைக்காக பல திட்டங்கள் நடைமுறை படுத்தப்பட்டு வருகின்றது.

வெளி இணைப்புகள்[தொகு]

  1. "VIT BTech admissions".