வேலூர் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வேலூர் மாவட்டம்
வேலூர் மாவட்டம்
தலைநகரம் வேலூர்
மிகப்பெரிய நகரம் வேலூர்
ஆட்சியர்
எசு. ஏ. ராமன் இ.ஆ.ப
காவல்துறைக்
கண்காணிப்பாளர்


பகலவன் இ.கா.ப
பரப்பளவு 6,075 சகிமீ
மக்கள் தொகை
3,936,331
வருவாய் வட்டங்கள் 5
ஊராட்சி ஒன்றியங்கள் 5
நகராட்சிகள்
பேரூராட்சிகள்
ஊராட்சிகள்
வருவாய் கோட்டங்கள் 2
வருவாய் கிராமங்கள்
வேலூர் மாவட்ட இணையதளம் https://vellore.nic.in

வேலூர் மாவட்டம் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் 37 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் தலைநகரம் வேலூர் ஆகும்.

வரலாறு

19 ஆம் நூற்றாண்டில் பிரித்தானியரால் உருவாக்கப்பட்ட வட ஆற்காடு மாவட்டத்தின் ஒருபகுதியாகவே இது இருந்தது. 1989 இல் அந்த மாவட்டம் திருவண்ணாமலை சம்புவரையர் மாவட்டம் (இன்றைய திருவண்ணாமலை), வட ஆற்காடு அம்பேத்கர் மாவட்டம் ஆகிய பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது. வட ஆற்காடு அம்பேத்கர் மாவட்டம் 1996 இல் வேலூர் மாவட்டம் எனப் பெயரிடப்பட்டது. இம்மாவட்டத்தின் பகுதிகளைக் கொண்டு 15 ஆகஸ்டு 2019 அன்று இராணிப்பேட்டை மாவட்டம் மற்றும் திருப்பத்தூர் மாவட்டம் என இரண்டு புதிய மாவட்டங்கள் நிறுவப்படும் என 15 ஆகஸ்டு 2019 அன்று தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.[1][2]

மாவட்ட நிர்வாகம்

வருவாய் நிர்வாகம்

  1. வேலூர் வட்டம்
  2. அணைக்கட்டு வட்டம்
  3. குடியாத்தம் வட்டம்
  4. கே. வி. குப்பம் வட்டம்
  5. காட்பாடி வட்டம்

ஊரக வளர்ச்சி நிர்வாகம்

இம்மாவட்டம் 20 ஊராட்சி ஒன்றியங்களும் [3], 743 ஊராட்சிகளையும் கொண்டுள்ளது.[4]

உள்ளாட்சி நிர்வாகம்

இம்மாவட்டம் 1 மாநகராட்சியும், 11 நகராட்சிகளையும், 16 பேரூராட்சிகளையும் கொண்டது.[5]

மக்கள்தொகை பரம்பல்

6,075 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் 2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி மொத்த மக்கள்தொகை 3,936,331 ஆகும். அதில் ஆண்கள் 1,961,688 ஆகவும்; பெண்கள் 1,974,643 ஆகவும் உள்ளனர். கடந்த பத்தாண்டுகளில் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் 13.20% ஆக உயர்ந்துள்ளது. பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு, 1007 பெண்கள் வீதம் உள்ளனர். குழந்தைகள் பாலின விகிதம் ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு, 944 பெண் குழுந்தைகள் வீதம் உள்ளனர். மக்கள்தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டரில் 648 நபர்கள் வீதம் வாழ்கின்றனர். மாவட்ட சராசரி எழுத்தறிவு 79.17% ஆகவுள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 432,550 ஆகவும் உள்ளனர்.[6]

இம்மாவட்ட மக்கள்தொகையில் இந்துக்கள் 3,397,857 (86.32 %), கிறித்தவர்கள் 111,390 (2.83 %), இசுலாமியர் 414,760 (10.54 %) ஆகவும் உள்ளனர்.

தொழில்கள்

வேலூர் மாவட்டத்தில் அதிகமாக நடைபெறுவது தோல் தொழில் மற்றும் விவசாயம் முக்கிய அங்கமாகும். ஆம்பூரிலும், ராணிப்பேட்டையிலும், வாணியம்பாடியிலும் அதிகளவு ஆம்பூர் தோல் தொழிற்சாலைகள் காணப்படுகின்றன. ஆம்பூர் பிரியாணி சிறப்பு பெற்றது. ஆற்காடு பிரியாணி சிறப்பு பெற்றது.

அரசியல்

இம்மாவட்டத்தின் பகுதிகள் அரக்கோணம், வேலூர் மற்றும் திருவண்ணாமலை மக்களவைத் தொகுதிகளுக்கு உட்பட்டது. இம்மாவட்டத்தின் 10 சட்டமன்றத் தொகுதிகளில் 3 தொகுதிகள் ஒடுக்கப்பட்டோருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.[7]

15வது சட்டமன்ற உறுப்பினர்கள்
தொகுதி வேட்பாளர் கட்சி
அரக்கோணம்சு. ரவி அதிமுக
சோளிங்கர்பி. ஆர். மனோகர் அதிமுக
காட்பாடிதுரைமுருகன் திமுக
ராணிப்பேட்டைமுஹம்மத்ஜான் அதிமுக
ஆற்காடுஆர். சீனிவாசன் அதிமுக
வேலூர்வி. எஸ். விஜய் அதிமுக
அணைக்கட்டுமா. கலையரசு பாமக
கீழ்வைத்தனன் குப்பம்சே. கு. தமிழரசன் இகுக
குடியாத்தம்கு. லிங்கமுத்து சிபிஐ
வாணியம்பாடிகோவி. சம்பத்குமார் அதிமுக
ஆம்பூர்அஸ்லம் பாட்ஷா மமக
ஜோலார் பேட்டைகே. சி. வீரமணி அதிமுக
திருப்பத்தூர்எஸ். ராஜேந்திரன் அதிமுக

தேவாரத்தலங்கள்

திருவல்லம் வில்வநாதேஸ்வரர் கோயில், திருமால்பூர் மணிகண்டீஸ்வரர் கோயில், தக்கோலம் ஜலநாதீஸ்வரர் கோயில் என மூன்று தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள் இந்த வேலூர் மாவட்டத்தில் உள்ளன.

இதையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்"https://ta.wikipedia.org/w/index.php?title=வேலூர்_மாவட்டம்&oldid=2791365" இருந்து மீள்விக்கப்பட்டது