சென்னை மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இந்தக் கட்டுரை the district பற்றியது. its eponymous headquarters and the city, சென்னை என்பதைப் பாருங்கள்.
சென்னை மாவட்டம்
மாவட்டம்
தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்தின் அமைவிடம்
தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள்: ஆள்கூற்று: 13°5′2″N 80°16′12″E / 13.08389°N 80.27000°E / 13.08389; 80.27000
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
Metro பெருநகர சென்னை மாநகராட்சி
நிர்வாகத் தலைமையிடம் சென்னை
வருவாய் வட்டங்கள் 16
பரப்பளவு[1]
 • மொத்தம் 426
மக்கள்தொகை (2011)
 • மொத்தம் 4
 • அடர்த்தி 11
மொழிகள்
 • அலுவல் மொழி தமிழ்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
பாலின விகிதம் 929 பெண்கள் / 1000 ஆண்கள்
எழுத்தறிவு 90.18%

சென்னை மாவட்டம் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் சென்னை ஆகும். பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை புறநகர் பகுதிகள் இம்மாவட்டத்தில் தான் உள்ளன. தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் சிறிய மாவட்டம் என்றாலும், மக்கள்தொகை மிக்க மாவட்டம் ஆகும்.

178 சகிமீ பரப்பளவு கொண்டிருந்தது சென்னை மாவட்டம். 2018ல் சென்னை மாவட்டத்தினை ஒட்டியிருந்த காஞ்சிபுரம் மாவட்டம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களின் ஆலந்தூர் வட்டம், சோழிங்கநல்லூர் வட்டம், மதுரவாயல் வட்டம், மாதவரம் வட்டம், அம்பத்தூர் வட்டம் மற்றும் திருவொற்றியூர் வட்டங்கள் சென்னை மாவட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளதால், தற்போது சென்னை மாவட்டத்தின் மொத்த பரப்பளவு 426 சகிமீ ஆக கூடியுள்ளது.[2][3]

புவியியல்[தொகு]

சென்னை மாவட்டம் இந்தியாவின் கிழக்கு கரையோர சமவெளியில் 426 கிமீ2 பரப்பளவில்அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து சராசரியாக 6 மீட்டர் உயரத்திலும், கிழக்கு தீர்க்கரேகை 12°59' மற்றும் 13°9' வடக்கு அட்சரேகை 80 ° 12 'மற்றும் 80 ° 19' இடையேயும் அமைந்துள்ளது. இதன் பொருளாதார முக்கியத்துவம் மற்றும் அமைவிடத்தின் காரணமாக இது "தென்னிந்தியாவின் நுழைவாயில்" என்றழைக்கப்படுகிறது. இந்த மாவட்டத்தின் நிலநடுக்கம் குறித்த அபாய குறிப்பு மிதமான அபாயத்தை குறிக்கும் நிலஅதிர்வு மண்டலம் III கீழ் வருகிறது. தமிழ்நாட்டின் மொத்த கடலோரப்பகுதியில் 2.5% சதவீதம் சென்னை மாவட்டம் 25.60கிமீ கொண்டுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள சென்னை நகரத்தினை இரண்டு நீரோடைகள் குறுக்கே பிரிக்கின்றன அவை கூவம் மற்றும் அடையார் ஆகும்.

மாவட்டத்தின் புள்ளியியல் விவரங்கள்[தொகு]

தமிழக மாவட்டங்களிலேயே மிகவும் வளர்ச்சியடைந்த மாவட்டம் இதுவே ஆகும்.

பொருளாதார வளர்ச்சி[தொகு]

தமிழ்நாட்டின் மாவட்டங்களில், கோவை மாவட்டத்திற்கு அடுத்தப்படியாக சென்னை மாவட்டம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8.69% பெற்றுள்ளது. இதில் முறையே விவசாயம் 0.74% தொழில்துறை 5.65% மற்றவை 12.04ஆ% பங்குகொள்கின்றன. 2006-2007 ஆண்டு கணக்கெடுப்பின்படி சென்னை மாவட்டத்தின் தனி நபர் வருமானத்தை பொறுத்தவரையில் 37941 (ரூபாயில்) பெற்று 7ஆம் இடத்தில் உள்ளது. மேலும் மனித அபிவிருத்தி சுட்டெண் கணிப்பின் படி சென்னை 0.842 பெற்று முதல் இடத்தில் உள்ளது.[4].

மக்கள்தொகை பரம்பல்[தொகு]

தமிழக மாவட்டங்களிலேயே பரப்பளவில் சிறியதும், மக்கள்தொகை மிக்க மாவட்டம் இதுவே ஆகும். 175 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட மாவட்டத்தின் 2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி மொத்த மக்கள்தொகை 46,46,732 ஆகும். அதில் ஆண்கள் 2,335,844 ஆகவும்; பெண்கள் 2,310,888 ஆகவும் உள்ளனர். கடந்த பத்தாண்டுகளில் மக்கள்தொகை வளர்ச்சி 6.98% ஆக உயர்ந்துள்ளது. பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 989 பெண்கள் வீதம் உள்ளனர். மக்கள்தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டரில் 26,553 நபர்கள் வீதம் உள்ளனர். மாவட்ட சராசரி எழுத்தறிவு 90.18% ஆகவுள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 4,59,324 ஆகவுள்ளனர். நகர்புறங்களில் 100% மக்கள் வாழ்கின்றனர்.[5]

இம்மாவட்ட மக்கள்தொகையில் இந்துக்கள் 3,751,322 (80.73 %) ஆகவும், இசுலாமியர்கள் 439,270 (9.45 %) ஆகவும், கிறித்தவர்கள் 358,662 (7.72 %) ஆகவும், சமணர்கள் 51,708 (1.11 %) ஆகவும், மற்றவர்கள் 0.99% ஆகவும் உள்ளனர். இம்மாவட்டத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம் மற்றும் கன்னட மொழிகள் பேசப்படுகிறது.

ஆட்சியர் அலுவலகம்[தொகு]

வரலாறு[தொகு]

சென்னை நகரமானது 1659 இல் உருவாக்கப்பட்டது. பிராசிஸ்டே என்ற ஆங்கிலேயர் 1640 இல் புனித ஜார்ஜ் கோட்டையைக் கட்டனார். 1688 இல் சென்னை மாநகராட்சி உருவாக்கப்பட்டது. 1746, 1758, 1772 இல் சென்னையானது பிரஞ்சுக்காரர்களால் கைப்பற்றப்பட்டது. அதன்பிறகு ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டில் மீண்டும் வந்தது. சென்னை-1ல் ராஜாஜி சாலையில் உள்ள பழைய ஆட்சியர் அலுவலக கட்டிடம், 1793ஆம் ஆண்டு கட்டப்பட்டது. அந்த கட்டிடம் அப்போதைய மதராஸ் ஆளுநர் லார்டு பென்டிங் பெயரால் அழைக்கப்பெற்றது. 19ஆம் நூற்றாண்டின் இறுதி வரை இந்த கட்டிடம் பயன்பாட்டில் இருந்து வந்தது. பின்னர் புதிதாக ஆட்சியர் அலுவலகம் கட்டப்பட்டு, மீனவர் சமூகத்திலிருந்து முதன் முதலாக வழக்குரைஞராக இருந்து பல சேவைகள் செய்த சிங்காரவேலர் பெயரிடப்பட்டது. இன்று வரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் "சிங்காரவேலர் மாளிகை" என்றழைக்கப்படுகிறது.

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக முகவரி[தொகு]

மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
சிங்காரவேலர் மாளிகை,
62, ராஜாஜி சாலை,
சென்னை - 600 001.

மாவட்ட வருவாய் நிர்வாகம்[தொகு]

விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை மாவட்டம் வட சென்னை, மத்திய சென்னை மற்றும் தென் சென்னை என 3 வருவாய் கோட்டங்களும், 16 வருவாய் வட்டங்களும், 122 வருவாய் கிராமங்களும் கொண்டது.[6] மேலும் இம்மாவட்டம் பெருநகர சென்னை மாநகராட்சியும் கொண்டது.[7]

சென்னை மாவட்ட வருவாய் வட்டங்கள்[தொகு]

வழிபாட்டுத் தலங்கள்[தொகு]

மருத்துவமனை மற்றும் கல்லூரி[தொகு]

பெயர் முகவரி
சென்னை அரசுப் பொது மருத்துவமனை சென்னை-600003
ஸ்டான்லி மருத்துவமனை பழைய சிறைச்சாலை சாலை, சென்னை-600001
ராயப்பேட்டை மருத்துவமனை 1, மேற்கு காட் சாலை, சென்னை-600014
கீழ்ப்பாக்கம் மருத்துவமனை மற்றும் கல்லூரி சென்னை-600010
சித்தா மருத்துவ கல்லூரி சென்னை-600106

அரசியல்[தொகு]

சென்னை மாவட்டம் வடசென்னை, தென் சென்னை மற்றும் மத்திய சென்னை என மூன்று மக்களவைத் தொகுதிகளும், 16 சட்டமன்றத் தொகுதிகளும் கொண்டது.[8]

சட்டமன்றத் தொகுதிகள்[தொகு]

 1. மருத்துவர். ராதாகிருஷ்ணன் நகர் - டி. டி. வி. தினகரன் - சுயேச்சை
 2. பெரம்பூர் – பி. வெற்றிவேல் - அதிமுக – சட்டமன்றத் தலைவரால் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். வழக்கு நீதிமன்ற நிலுவையில் உள்ளது.[9]
 3. கொளத்தூர் - மு. க. ஸ்டாலின் - தி.மு.க.
 4. வில்லிவாக்கம் - பி. ரங்கநாதன் தி.மு.க.
 5. திரு. வி. க. நகர் - பி.சிவகுமார் (எ) தாயகம் கவி - தி .மு. க.
 6. எழும்பூர் (எஸ்.சி ) - கே.ஸ்.ரவிச்சந்திரன் - தி.மு.க.
 7. ராயபுரம் - டி. ஜெயக்குமார் - அ.தி.மு.க
 8. துறைமுகம் - பி.கே.சேகர் பாபு - தி.மு.க.
 9. சேப்பாக்கம்-திருவல்லிகேனி - ஜெ.அன்பழகன் - தி .மு. க .
 10. ஆயிரம் விளக்கு - செல்வம் கு. க - தி.மு.க .
 11. அண்ணாநகர் - எம். கே. மோகன் - தி .மு. க .
 12. விருகம்பாக்கம் - வீ. ன். விருகை ரவி - அ.தி.மு.க
 13. சைதாப்பேட்டை - ம. சுப்ரமணியன் - தி.மு.க .
 14. தியாகராயநகர் - பி.சத்தியநாராயணன் - அ.தி.மு.க
 15. மயிலாப்பூர் - ஆர். நடராஜ் இ.கா.ப (ஓய்வு) - அ.தி.மு.க
 16. வேளச்சேரி - வாகை. சந்திரசேகர் - தி.மு.க.

நாடாளுமன்றத் தொகுதிகள்[தொகு]

 1. வட சென்னை - டி. ஜி. வெங்கடேஷ் பாபு - அதிமுக
 2. தென் சென்னை - சி. இராஜேந்திரன் - அதிமுக
 3. மத்திய சென்னை- தயாநிதி மாறன் - திமுக

சுற்றுலாத் தலங்கள்[தொகு]

 1. மாமல்லபுரம் கடற்கரைக் கோயில்
 2. வள்ளுவர் கோட்டம்
 3. விவேகானந்தர் இல்லம்
 4. அரசு அருங்காட்சியகம்
 5. கிண்டி தேசியப் பூங்கா
 6. அறிஞர் அண்ணா விலங்கியல் பூங்கா
 7. சென்னை முதலைக் காப்பகம் அறக்கட்டளை
 8. தட்சிண சித்ரா

இதனையும் காண்க[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

 1. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; TH-5Jan என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
 2. Chennai district likely to expand to 426sqkm mid-July 2018
 3. Chennai district doubles in size
 4. http://www.mse.ac.in/pub/Monograph%20-%2017.pdf
 5. Chennai District : Census 2011 data
 6. விரிவாக்கம் செய்யப்படவுள்ள சென்னை மாவட்டப் பகுதிகள்
 7. சென்னை மாநகராட்சி
 8. சென்னை மாவட்ட மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும்
 9. Disqualification of 18 AIADMK MLAs: Madras HC passes split verdict , status quo continues

வெளி இணைப்புகள்[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சென்னை_மாவட்டம்&oldid=2681762" இருந்து மீள்விக்கப்பட்டது