சிட்லப்பாக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சிட்லப்பாக்கம்
தாம்பரம் மாநகராட்சி
சிட்லப்பாக்கம் ஏரி
சிட்லப்பாக்கம் is located in சென்னை
சிட்லப்பாக்கம்
சிட்லப்பாக்கம்
சிட்லப்பாக்கம் (சென்னை}
சிட்லப்பாக்கம் is located in தமிழ் நாடு
சிட்லப்பாக்கம்
சிட்லப்பாக்கம்
சிட்லப்பாக்கம் (தமிழ் நாடு)
ஆள்கூறுகள்: 12°56′15″N 80°08′19″E / 12.93739°N 80.13874°E / 12.93739; 80.13874ஆள்கூறுகள்: 12°56′15″N 80°08′19″E / 12.93739°N 80.13874°E / 12.93739; 80.13874
நாடு இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம்செங்கல்பட்டு
புறநகர்சென்னை
அரசு
 • ஆளுநர்ஆர். என். ரவி[1]
 • முதலமைச்சர்மு. க. ஸ்டாலின்[2]
 • மாவட்ட ஆட்சியர்ஆ. ர. ராகுல் நாத், இ. ஆ. ப
பரப்பளவு
 • மொத்தம்2.95 km2 (1.14 sq mi)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்37,987
 • அடர்த்தி13,000/km2 (33,000/sq mi)
மொழிகள்
 • அலுவல்தமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்600059, 600064
வாகனப் பதிவுTN-11
மக்களவைத் தொகுதிதிருப்பெரும்புதூர்
சட்டமன்றத் தொகுதிதாம்பரம்

சிட்லப்பாக்கம் (Chitlapakkam), இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள செங்கல்பட்டு மாவட்டத்தின் தாம்பரம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். மேலும் இது சென்னை பெருநகரத்தை ஒட்டி வடக்கு புறம் சுமார் 10 கி.மீட்டரில் பெருநகர சென்னை மாநகராட்சி அமைந்துள்ளது. இது திருவள்ளூர், வேலூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட எல்லையில் ஒட்டி அமைந்துள்ளது. இப்பகுதியில் வசிப்பவர்களின் பெரும்பான்மையினர் அலுவலகப் பணியாளர்களாக உள்ளனர்.

தாம்பரம் மாநகராட்சியுடன் இணைத்தல்[தொகு]

3 நவம்பர் 2021 அன்று இந்த பேரூராட்சியானது தாம்பரம் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது.

அமைவிடம்[தொகு]

சிட்லப்பாக்கம் பேரூராட்சிக்கு மேற்கில் காஞ்சிபுரத்திலிருந்து 56 கிமீ தொலைவில் உள்ளது. அருகமைந்த தொடருந்து நிலையம், 100 மீட்டர் தொலைவில் உள்ள தாம்பரம் சானிடோரியம் ஆகும். இதனருகில் தாம்பரம் 3 கி.மீ; பல்லாவரம் 2 கி.மீ; செம்பாக்கம் 2 கி.மீ மற்றும் சோழிங்கநல்லூர் 15 கி.மீ தொலைவில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு[தொகு]

2.90 சகிமீ பரப்பும், 18 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 367 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி தாம்பரம் (சட்டமன்றத் தொகுதி) மற்றும் ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்டதாகும். [3]

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இப்பேரூராட்சி 9,960 வீடுகளும், 37,906 மக்கள்தொகையும், கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 94.23% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 1001 பெண்கள் வீதம் உள்ளனர்.[4]

சிட்லப்பாக்கம் ஏரி[தொகு]

சிட்லப்பாக்கம் நகரமாவதற்கு முன், விவசாயம் சார்ந்த இடமாக இருந்தது. அப்போது இந்த ஏரியின் நீர் நீர்பாசணத்திற்கு பயன்படுத்தப்பட்டு வந்தது. அருகில் உள்ள பச்சைமலை ஏரியின் முதன்மை நீராதாரமாக இருந்தது.

1980 வரை, இந்த ஏரிக்கரை ஒரு பொழுது போக்கு இடமாக இருந்தது. ஏரி அருகே உள்ள பகுதிகளான செம்பாக்கம், அஸ்தினாபுரம் ஆகிய பகுதிகளின் தண்ணீர் தேவைக்கு இந்த ஏரி பயன்பட்டது. 1980-களின் துவக்கம் வரை, இந்தப் பகுதியின் நிலத்தடி நீர் வெறும் 5 அடி ஆழத்தில் காணப்பட்டது. கோடைக்கால உச்சத்தில்கூட நிலத்தடி நீர் 10 அடிக்கு கீழே சென்றதில்லை. இவ்வாறான தண்ணீர் வசதி காரணமாக இப்பகுதியில் குடியிருப்புகள் உருவாயின. ஏரியின் சூழல் இடம் பெயரும் பறவைகள் ஈர்த்தது மற்றும் பறவை நோக்கர்களுக்கு ஒரு பிடித்தமான இடமாக இருந்தது.[5]

ஏரியின் மொத்த நீர் தேங்கும் பரப்பளவு 86.86 ஏக்கர் ஆகும்.[6] என்றாலும் ஆக்கிரமிப்புகள் காரணமாக ஏரியின் பரப்பு 47 ஏக்கராக சுருங்கிவிட்டது.[7] ஏரி பாசணத்தில் விவசாயம் செய்யப்ப்பட்ட நிலப்பகுதிகள் குடியிருப்புகளாக மாறிவிட்டதால் இங்கு விவசாயம் இல்லாமல் போனது. இந்த ஏரிக்கு மலைப்பகுதியில் இருந்து நீர் வரக்கூடிய வகையில் மூன்று வாய்க்கால்கள் கட்டப்பட்டுள்ளன.[8] இதனால் சென்னையின் பிற பகுதிகளை ஒப்பிடும்போது ஏரியின் நீர்மட்டம் இங்கு மேலேயே உள்ளது. இப்பகுதியில் நீர் மட்டம் 2.50 முதல் 8 மீட்டர்வரை உள்ளது. நீரில் உள்ள உப்பின் அளவு 400 முதல் 900 பிபிஎம் ஆகும்.[9] ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையான காலத்தில் கூழைக்கடாக்களை பார்க்க இயலும், மேலும் ஆண்டு முழுவதும் சாம்பல் நாரை போன்ற பறவைகளைக் காணலாம்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. சிட்லபாக்கம் பேரூராட்சியின் இணையதளம்
  4. Chitlapakkam Population Census 2011
  5. "Chitlapakkam Lake now a cess pit". The Times of India (Chennai: The Times Group). 25 October 2012. Archived from the original on 27 ஆகஸ்ட் 2013. https://archive.today/20130827175148/http://articles.timesofindia.indiatimes.com/2012-10-25/chennai/34729183_1_water-body-water-tanks-lake-bunds. பார்த்த நாள்: 27 Aug 2013. 
  6. Bhattacharya, Saptarshi (9 June 2003). "'Clean' Chitlapakkam lake project launched". The Hindu (Chennai: The Hindu). Archived from the original on 27 ஆகஸ்ட் 2013. https://archive.today/20130827175111/http://hindu.com/2003/06/09/stories/2003060906970300.htm. பார்த்த நாள்: 27 Aug 2013. 
  7. "Chitlapakkam Lake now a cess pit". The Times of India (Chennai: The Times Group). 25 October 2012. Archived from the original on 27 ஆகஸ்ட் 2013. https://archive.today/20130827175148/http://articles.timesofindia.indiatimes.com/2012-10-25/chennai/34729183_1_water-body-water-tanks-lake-bunds. பார்த்த நாள்: 27 Aug 2013. 
  8. Chella, Devatha; Arun Kumar Thalla (May 2009). "Analysis of flow pattern between hill and lake". ARPN Journal of Engineering and Applied Sciences (Asian Research Publishing Network) 4 (3): 64–68. பன்னாட்டுத் தர தொடர் எண்:1819-6608. http://www.arpnjournals.com/jeas/research_papers/rp_2009/jeas_0509_186.pdf. பார்த்த நாள்: 30 Jun 2012. 
  9. "INFRASTRUCTURE: Water Supply". CMDA. பார்த்த நாள் 6 July 2012.
Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Chitlapakkam
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிட்லப்பாக்கம்&oldid=3317390" இருந்து மீள்விக்கப்பட்டது