அயனாவரம்

ஆள்கூறுகள்: 13°06′00″N 80°13′59″E / 13.1°N 80.233°E / 13.1; 80.233
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அயனாவரம்
அயன்புரம்
புறநகர்ப் பகுதி
அயனாவரம் is located in சென்னை
அயனாவரம்
அயனாவரம்
அயனாவரம் (சென்னை)
அயனாவரம் is located in தமிழ் நாடு
அயனாவரம்
அயனாவரம்
அயனாவரம் (தமிழ் நாடு)
ஆள்கூறுகள்: 13°06′00″N 80°13′59″E / 13.1°N 80.233°E / 13.1; 80.233
நாடு இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம்சென்னை
புறநகர்சென்னை
அரசு
 • நிர்வாகம்தமிழ்நாடு அரசு
 • ஆளுநர்ஆர். என். ரவி[1]
 • முதலமைச்சர்மு. க. ஸ்டாலின்[2]
 • மாவட்ட ஆட்சியர்மருத்துவர். ஜெ. விஜய ராணி, இ. ஆ. ப
மொழிகள்
 • அலுவல்தமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்600 023
வாகனப் பதிவுTN-01
மக்களவைத் தொகுதிமத்திய சென்னை
சட்டமன்றத் தொகுதிவில்லிவாக்கம்
இணையதளம்www.chennai.tn.nic.in

அயனாவரம் (ஆங்கிலம்: Ayanavaram) அல்லது அயன்புரம், இந்தியாவின், தமிழ்நாட்டின், சென்னையின் புறநகர்ப் பகுதிகளுள் ஒன்றாகும். சென்னையின் பெரம்பூர் பகுதியில் அமைந்துள்ள 'இரயில் இணைப்புப் பெட்டித் தொழிற்சாலை'யை ஒட்டி இவ்வூர் அமைந்துள்ளது. இது சென்னையின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. சென்னையில், முக்கியமான இணைக்கும் சாலைகளில் ஒன்றான சென்னை-திருவள்ளூர் நெடுஞ்சாலை (கொன்னூர் நெடுஞ்சாலை), அயனாவரம் வழியாகச் செல்கிறது.

சொற்பிறப்பு[தொகு]

இந்த நகரம் முதலில் அயன்புரம் என்று அழைக்கப்பட்டது; 'அயன்' என்றால் பிரம்மா என்று பொருள். முருக பகவான் பிரம்மாவிற்கு அறிவுரை கூறி, படைப்பாற்றலை எடுத்துக் கொண்டபோது, ​​பிரம்மா சிவனிடம் பிரார்த்தனை செய்து, படைப்பாற்றல் செயலை மீண்டும் பெற்றார் என்று நம்பப்படுகிறது. பரசுராம ஈசுவரன் கோயிலில், பிரம்மா, சிவனை வணங்கினார் என்று நம்பப்படுகிறது.

அமைவிடம்[தொகு]

சென்னை மத்திய தொடருந்து நிலையத்திலிருந்து 8 கி.மீ. தொலைவிலும், சென்னை எழும்பூர் தொடருந்து நிலையத்திலிருந்து 6 கி.மீ. தொலைவிலும், சென்னை பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து 18 கி.மீ. தொலைவிலும், சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து 10 கி.மீ. தொலைவிலும், அயனாவரம் அமைந்துள்ளது.

அமைப்பு[தொகு]

அயனாவரத்தைச் சுற்றியுள்ள பகுதிகள்[தொகு]

போக்குவரத்து[தொகு]

சாலைப் போக்குவரத்து[தொகு]

அயனாவரத்தை, சென்னையின் மற்ற பகுதிகளுடன், (சென்னை திருவள்ளூர் நெடுஞ்சாலை) கொன்னூர் நெடுஞ்சாலை மற்றும் புதிய ஆவடி சாலை இணைக்கின்றன. பேருந்துகளை பராமரிப்பதற்காக ஒரு பணிமனையுடன் இணைக்கப்பட்டுள்ள அயனாவரம் பேருந்து நிலையம், மற்ற பகுதிகளுக்கு செல்ல சேவை செய்கிறது.

தொடருந்து போக்குவரத்து[தொகு]

  • பெரம்பூர் தொடருந்து நிலையம், 1 கி.மீ. தொலைவிலுள்ளது.
  • பெரம்பூர் கேரேஜ் வொர்க்ஸ் தொடருந்து நிலையம் 1 கி.மீ. தொலைவிலுள்ளது.
  • பெரம்பூர் லோகோ வொர்க்ஸ் 2 கி. மீ. தொலைவிலுள்ளது.
    • 'மெட்ரோ' தொடருந்து சேவையின் அடுத்த தடம் அயனாவரம் வழியாகச் செல்ல, வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன.

கோயில்கள்[தொகு]

அருகிலுள்ள இடங்கள்[தொகு]

  • நூர் விடுதி
  • சயானி குடியிருப்புகள்

மருத்துவ வசதிகள்[தொகு]

  • இ. எஸ். ஐ.‌ (E.S.I. - Employees State Insurance) மருத்துவமனை
  • மகப்பேறு ஆரம்ப சுகாதார மருத்துவமனை
  • எஸ். கே. மருத்துவமனை
  • 24 மணிநேர மருத்துவமனைகள்

கல்வி நிலையங்கள்[தொகு]

  1. பெத்தேல் மெட்ரிக் பள்ளி
  2. கன்னட சங்கப் பள்ளி
  3. தனிஷ் மெட்ரிக் பள்ளி
  4. சௌந்தரபாண்டியன் மேல்நிலைப் பள்ளி
  5. தாராப்பூர் மேல்நிலைப் பள்ளி
  6. சாலை கோவிந்தராஜன் பெண்கள் மேல்நிலைப் பள்ளி
  7. டேவிட்சன் மெட்ரிக் பள்ளி.

பொழுதுபோக்கு[தொகு]

பூங்காக்கள்[தொகு]

  • அருகிலுள்ள பெரம்பூரில், முரசொலி மாறன் மேம்பாலப் பூங்காக்கள் உள்ளன. இப்பூங்காக்களில், சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள், உடற்பயிற்சி உபகரணங்கள், நடைப்பயிற்சி தளங்கள், அமரும் இருக்கைகள், மனங்கவர் பூக்கள் நிறைந்த மரங்கள், மிக உயர்ந்த நிலை ஒளி விளக்குகள் என அதிக வசதிகள் உள்ளன.

சிறுவர் உருளைச் சக்கர சறுக்கு விளையாட்டு மைதான அரங்கம்[தொகு]

  • சிறுவர், சிறுமியர் இருபாலருக்கான உருளைச் சக்கர சறுக்கு விளையாட்டு மைதான அரங்கம் ஒன்று, முரசொலி மாறன் மேம்பாலப் பூங்கா உள்ளே அமைந்துள்ளது. இங்கு சிறுவர், சிறுமியர் பயிற்சி பெற்று, மாநில அளவில் போட்டிகளில் கலந்து வெற்றி கொள்கின்றனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.



"https://ta.wikipedia.org/w/index.php?title=அயனாவரம்&oldid=3490637" இருந்து மீள்விக்கப்பட்டது