திருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதி
மக்களவைத் தொகுதி
Sriperumbudur lok sabha constituency (Tamil).png
திருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதி (2008 மறுசீரமைப்புக்குப் பிந்தையது)
தொகுதி விவரங்கள்
நிறுவப்பட்டது1967–நடப்பு
மாநிலம்தமிழ்நாடு
மொத்த வாக்காளர்கள்22,10,851[1]
சட்டமன்றத் தொகுதிகள்7. மதுரவாயல்
8. அம்பத்தூர்
28. ஆலந்தூர்
29. திருப்பெரும்புதூர்
30. பல்லாவரம்
31. தாம்பரம்

திருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதி (Sriperumbudur Lok Sabha constituency) தமிழ்நாட்டின், 39 மக்களவைத் தொகுதிகளுள், 5வது தொகுதி ஆகும். இத்தொகுதி, தமிழ்நாட்டின் மிகப்பெரிய மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும்.

தொகுதி மறுசீரமைப்பு[தொகு]

2008 ஆம் ஆண்டில் செய்யப்பட்ட தொகுதி மறுசீரமைப்புக்கு முன்புவரை, திருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதியில் கும்மிடிப்பூண்டி, பொன்னேரி (தனி), திருப்பெரும்புதூர் (தனி), பூந்தமல்லி, திருவள்ளூர், திருத்தணி ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இருந்தன. சிறீபெரும்புதூரைத் தவிர மற்ற அனைத்துத் தொகுதிகளும் புதிய தொகுதியில் புதியவை. முன்பு தனித் தொகுதியாக இருந்த இது பொதுத் தொகுதியாக மாற்றப்பட்டது.

சட்டமன்ற தொகுதிகள்[தொகு]

இம்மக்களவைத் தொகுதியில் மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளன. அவைகள்:

  1. மதுரவாயல்
  2. அம்பத்தூர்
  3. ஆலந்தூர்
  4. திருப்பெரும்புதூர்
  5. பல்லாவரம்
  6. தாம்பரம்

வென்றவர்கள்[தொகு]

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி கூட்டணி ஆதாரம்
4 ஆவது மக்களவைத் தேர்தல், 1967 சிவசங்கரன் திமுக
5 ஆவது மக்களவைத் தேர்தல், 1971 டி.எஸ். லட்சுமணன் திமுக
6 ஆவது மக்களவைத் தேர்தல், 1977 சீராளன் ஜெகன்னாதன் அதிமுக
7 ஆவது மக்களவைத் தேர்தல், 1980 நாகரத்தினம் திமுக
8 ஆவது மக்களவைத் தேர்தல், 1984 மரகதம் சந்திரசேகர் இந்திய தேசிய காங்கிரசு
9 ஆவது மக்களவைத் தேர்தல், 1989 மரகதம் சந்திரசேகர் இந்திய தேசிய காங்கிரசு
10 ஆவது மக்களவைத் தேர்தல், 1991 மரகதம் சந்திரசேகர் இந்திய தேசிய காங்கிரசு
11 ஆவது மக்களவைத் தேர்தல், 1996 நாகரத்தினம் திமுக
12 ஆவது மக்களவைத் தேர்தல், 1998 டாக்டர் வேணுகோபால் அதிமுக
13 ஆவது மக்களவைத் தேர்தல், 1999 அ. கிருட்டிணசாமி திமுக
14 ஆவது மக்களவைத் தேர்தல், 2004 அ. கிருட்டிணசாமி திமுக
15 ஆவது மக்களவைத் தேர்தல், 2009 த. ரா. பாலு திமுக
16 ஆவது மக்களவைத் தேர்தல், 2014 கே. என். ராமச்சந்திரன் அ.தி.மு.க [2]
17 ஆவது மக்களவைத் தேர்தல், 2019 த. ரா. பாலு திமுக

வாக்காளர்கள் எண்ணிக்கை[தொகு]

தேர்தல் ஆண்கள் பெண்கள் மூன்றாம்
பாலினத்தவர்கள்
மொத்தம் ஆதாரம்
16 ஆவது மக்களவைத் தேர்தல், 2014 9,82,501 9,63,204 264 19,45,969 2014 ஆம் ஆண்டு கணக்கீட்டின்படி[3]
17 ஆவது மக்களவைத் தேர்தல், 2019 11,02,231 11,08,288 332 22,10,851 2019 ஆம் ஆண்டு கணக்கீட்டின்படி[1]

வாக்குப்பதிவு சதவீதம்[தொகு]

தேர்தல் வாக்குப்பதிவு சதவீதம் முந்தைய தேர்தலுடன் ஒப்பீடு ஆதாரம்
15 ஆவது மக்களவைத் தேர்தல், 2009 66.10% - [4]
16 ஆவது மக்களவைத் தேர்தல், 2014 66.21% 0.11% [3]
17 ஆவது மக்களவைத் தேர்தல், 2019

17வது மக்களவைத் தேர்தல்(2019)[தொகு]

இந்த தேர்தலில் 8 வேட்பாளர்கள் கட்சி சார்பாகவும் மற்றும் 11 வேட்பாளர்கள் சுயேட்சையாகவும் என மொத்தம் 19 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் திமுக வேட்பாளர் த. ரா. பாலு, பாமக வேட்பாளரான, ஏ. வைத்திலிங்கத்தை, 5,07,955 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.[5]

வேட்பாளர் சின்னம் கட்சி தபால் வாக்குகள் பெற்ற மொத்த வாக்குகள் வாக்கு சதவீதம் (%)
த. ரா. பாலு Indian election symbol rising sun.svg திமுக 2,531 7,93,281 56.39%
ஏ. வைத்திலிங்கம் Indian Election Symbol Mango SVG.svg பாமக 653 2,85,326 20.28%
எம். சிறீதர் Indian Election Symbol Battery-Torch.png மக்கள் நீதி மய்யம் 142 1,35,525 9.63%
மகேந்திரன் Indian Election Symbol sugarcane farmer.svg நாம் தமிழர் கட்சி 124 84,979 6.04%
தாம்பரம் நாராயணன் ஜி Gift box icon.png அமமுக 51 41,497 2.95%
நோட்டா - - 55 23,343 1.66%

வாக்காளர் புள்ளி விவரம்[தொகு]

ஆண் பெண் மூன்றாம்
பாலினத்தவர்கள்
மொத்தம் வாக்களித்தோர் %

வாக்குப்பதிவு[தொகு]

2014 வாக்குப்பதிவு சதவீதம் [3] 2019 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
%

16 ஆவது மக்களவைத் தேர்தல் (2014)[தொகு]

முக்கிய வேட்பாளர்கள்[தொகு]

வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள்
கே. என். ராமச்சந்திரன் அதிமுக 5,45,820
எஸ். ஜெகத்ரட்சகன் திமுக 4,43,174
மாசிலாமணி ம.தி.மு.க 1,87,094
அருள் அன்பரசு இந்திய தேசிய காங்கிரசு 39,015

15 ஆவது மக்களவைத் தேர்தல் (2009)[தொகு]

32 வேட்பாளர்கள் போட்டியிட்டதில், திமுகவின் த. ரா. பாலு, பாமகவின் ஏ. கே. மூர்த்தியை, 25,036 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.

வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள்
த. ரா. பாலு திமுக 3,52,641
ஏ. கே. மூர்த்தி பாமக 3,27,605
அருண் சுப்பரமணியன் தேமுதிக 84,530
இராஜப்பா பகுஜன் சமாஜ் கட்சி 4,483

14 ஆவது மக்களவைத் தேர்தல் (2004)[தொகு]

அ. கிருட்டிணசாமி (திமுக) - 5,17,617

டாக்டர் வேணுகோபால் (அதிமுக) - 2,82,271

வெற்றி வேறுபாடு - 2,35,346 வாக்குகள்.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Special Summary Revision 2019 - PC wise Electorate in TN as per Final publication of Electoral Rolls on 31/01/2019".
  2. உறுப்பினர் விவரம் - இந்திய மக்களவை [தொடர்பிழந்த இணைப்பு]
  3. 3.0 3.1 3.2 "Poll Percentage - GELS2014" (PDF). முதன்மை தேர்தல் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு. 2014. 28 சூலை 2018 அன்று பார்க்கப்பட்டது.
  4. "DETAILED RESULTS OF LATEST ELECTIONS ( XLS FORMAT ) - GENERAL ELECTIONS 2009". இந்தியத் தேர்தல் ஆணையம். ஏப்ரல் 30, 2014 அன்று பார்க்கப்பட்டது.
  5. "Sriperumbudur General (Lok Sabha) Election Results 2019".

உசாத்துணை[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]