உள்ளடக்கத்துக்குச் செல்

ஆரணி மக்களவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆரணி மக்களவைத் தொகுதி
மக்களவைத் தொகுதி
ஆரணி மக்களவைத் தொகுதி (மறுசீரமைப்புக்கு பிந்தையது)
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
சட்டமன்றத் தொகுதிகள்66. போளூர்
67. ஆரணி
68. செய்யார்
69. வந்தவாசி (தனி)
70. செஞ்சி
71. மயிலம்
நிறுவப்பட்டது2009-நடப்பு
மொத்த வாக்காளர்கள்14,45,781 [1]
ஒதுக்கீடுபொது
மக்களவை உறுப்பினர்
18வது மக்களவை
தற்போதைய உறுப்பினர்
கட்சிதிமுக
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டுஇந்தியப் பொதுத் தேர்தல் - 2024

ஆரணி மக்களவைத் தொகுதி (Arani Lok Sabha constituency) தமிழ்நாட்டின், 39 மக்களவைத் தொகுதிகளுள், 12ஆவது தொகுதி ஆகும்.

தொகுதி மறுசீரமைப்பு

[தொகு]

தொகுதி மறுசீரமைப்பு காரணமாக, வந்தவாசி மக்களவைத் தொகுதி நீக்கப்பட்டு, அதற்குப் பதில் அதில் இருந்த போளூர், செஞ்சி மற்றும் வந்தவாசி தொகுதிகளை எடுத்தும், அரக்கோணம் மக்களவைத் தொகுதியிலிருந்து, செய்யார் தொகுதியும், வேலூர் மக்களவைத் தொகுதியிலிருந்து, ஆரணி தொகுதிகளை எடுத்தும், மயிலம் என்ற புதிய தொகுதியை உருவாக்கியும் ஆரணி மக்களவைத் தொகுதி உருவாக்கப்பட்டது.

சட்டமன்றத் தொகுதிகள்

[தொகு]

மறுசீரமைப்புக்கு பின் ஆரணி மக்களவைத் தொகுதியில் 6 சட்டமன்றத் தொகுதிகள் அடங்கியுள்ளன.

1. போளூர்

2. ஆரணி

3. செய்யாறு

4. வந்தவாசி (தனி)

5. செஞ்சி

6. மயிலம்

எல்லைகள்

[தொகு]

திருவண்ணாமலை, வேலூர், அரக்கோணம், காஞ்சிபுரம், விழுப்புரம் மற்றும் புதுச்சேரி ஆகிய மக்களவைத் தொகுதிகள் ஆரணி மக்களவைத் தொகுதியின் எல்லைகளாக அமைந்துள்ளன.

ஆரணி தொகுதியின் சிறப்பு அம்சங்கள்

[தொகு]

ஆரணி மக்களவைத் தொகுதியில், ஆரணி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஆரணி கைலாசநாதர் ஆலயம், ஆரணியில் பட்டு நெசவு பிரதானமாக உள்ளது, ஆரணி மற்றும் களம்பூர் பகுதியில் 450க்கும் மேற்பட்ட நெல் மற்றும் அரிசி ஆலைகள். இங்கு உற்பத்தியாகும் அரிசி வகைகள் இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆதலால் தமிழ்நாட்டின் இரண்டாவது நெற்களஞ்சியமாகவும் ஆரணி விளங்குகிறது. காஞ்சிபுரத்திற்கு அடுத்தப்படியாக தயாரிக்கப்படும் ஆரணி பட்டு மிகவும் பிரபலமானது. இந்தியாவில் உள்ள பட்டு நகரங்களில் ஒன்றாக ஆரணி அழைக்கப்படுகிறது. ஆரணி கோட்டை, எஸ்.வி.நகரம் மற்றும் நடுக்காட்டில் அமைந்துள்ள அரண்மனைகள், முனுகப்பட்டு பச்சையம்மன் ஆலயம், தேவிகாபுரம் பெரியநாயகி அம்மன் ஆலயம். அதேபோல், போளூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட போளூர் முடையூர் சிற்ப கலைகள், ஏரிக்குப்பம் சனீஸ்வர பகவான் ஆலயம், திருமலை சமணர் ஆலயம், இஞ்சிமேடு சிவன் ஆலயம். செய்யாறு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட செய்யாறு சிப்காட், செய்யாறில் உள்ள சர்க்கரை ஆலை, திருவத்திபுரம் வேதபுரீஸ்வரர் ஆலயம், பிரம்மதேசம் சோழனால் கட்டப்பட்ட ஆலயம், மாமண்டூர் சிற்ப கலைகள் மற்றும் குடைவரை கோவில்கள். வந்தவாசி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வந்தவாசி கோட்டை, வந்தவாசி கோரைப்பாய், தென்னாங்கூர் பாண்டுரங்கன் சுவாமி ஆலயம். செஞ்சி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட செஞ்சி கோட்டை, மேல்மலையனூர் அங்காளம்மன் ஆலயம். மயிலம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மயிலம் முருகன் கோவில் ஆகிய சிறப்பு அம்சங்களாக உள்ளது.

சட்டமன்ற தொகுதிகள் மற்றும் வாக்காளர்கள்

[தொகு]

இம்மக்களவைத் தொகுதியில் மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளன. அவை:

தொகுதி எண் சட்டமன்றத் தொகுதி ஒதுக்கீடு மாவட்டம் வென்ற கட்சி ஆண் வாக்காளர்கள் பெண் வாக்காளர்கள் மற்ற வாக்காளர்கள் மொத்தம்
66 போளூர் பொது திருவண்ணாமலை அதிமுக
67 ஆரணி பொது அதிமுக
68 செய்யார் பொது திமுக
69 வந்தவாசி தனி திமுக
70 செஞ்சி பொது விழுப்புரம் திமுக
71 மயிலம் பொது பாமக

வென்றவர்கள்

[தொகு]
தேர்தல் நடந்த ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி கூட்டணி
2009 எம். கிருஷ்ணசாமி இந்திய தேசிய காங்கிரசு திராவிட முன்னேற்றக் கழகம்
2014 வி. ஏழுமலை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தனித்து போட்டி
2019 எம். கே. விஷ்ணு பிரசாத் இந்திய தேசிய காங்கிரசு திராவிட முன்னேற்றக் கழகம்
2024 எம். எஸ். தரணிவேந்தன் திராவிட முன்னேற்றக் கழகம் திராவிட முன்னேற்றக் கழகம்

வாக்காளர்கள் எண்ணிக்கை

[தொகு]
தேர்தல் ஆண்கள் பெண்கள் மற்றவர்கள் மொத்தம் ஆதாரம்
16-ஆவது மக்களவைத் தேர்தல், 2014 7,14,410 7,31,29 78 14,45,781 ஜனவரி 10, 2014 அன்று முதன்மை தேர்தல் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியல்[1]
17-ஆவது மக்களவைத் தேர்தல், 2019

வாக்குப்பதிவு சதவீதம்

[தொகு]
தேர்தல் வாக்குப்பதிவு சதவீதம் முந்தைய தேர்தலுடன் ஒப்பீடு ஆதாரம்
15-ஆவது மக்களவைத் தேர்தல், 2009 76.62% - [2]
16-ஆவது மக்களவைத் தேர்தல், 2014 80.00% ⬆️ 4.48% [1]
17 ஆவது மக்களவைத் தேர்தல், 2019 78.94% ⬇️ 1.32% [1]
18 ஆவது மக்களவைத் தேர்தல், 2024 73.77% ⬇️ 6.54% [1]

18-ஆவது மக்களவைத் தேர்தல் (2024)

[தொகு]

முக்கிய வேட்பாளர்கள்

[தொகு]

இத்தேர்தலில், 10 வேட்பாளர்கள் கட்சி சார்பாகவும் மற்றும் 19 வேட்பாளர்கள் சுயேட்சையாகவும் என மொத்தம் 29 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

வேட்பாளர் சின்னம் கட்சி தபால் வாக்குகள் பெற்ற மொத்த வாக்குகள் வாக்கு சதவீதம்
எம். எஸ். தரணிவேந்தன் Rising Sun திராவிட முன்னேற்ற கழகம் 5,00,099 43.86%
ஜி. வி கஜேந்திரன் அதிமுக 2,91,333 25.55%
அ. கணேஷ்குமார் பாமக பாஜக கூட்டணி 2,36,571 20.75%
கு. பாக்கியலட்சுமி நாம் தமிழர் கட்சி 66,740 5.85%
துரை Bahujan Samaj party symbol பகுஜன் சாமாஜ்வாடி கட்சி
நோட்டா - - 9,188 0.81%

17-ஆவது மக்களவைத் தேர்தல் (2019)

[தொகு]

முக்கிய வேட்பாளர்கள்

[தொகு]

இத்தேர்தலில், 6 வேட்பாளர்கள் கட்சி சார்பாகவும் மற்றும் 9 வேட்பாளர்கள் சுயேட்சையாகவும் என மொத்தம் 15 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் காங்கிரசு வேட்பாளர் எம். கே. விஷ்ணு பிரசாத், அதிமுக வேட்பாளரான வி. ஏழுமலையை 2,30,806 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.

வேட்பாளர் சின்னம் கட்சி தபால் வாக்குகள் பெற்ற மொத்த வாக்குகள் வாக்கு சதவீதம்
எம். கே. விஷ்ணு பிரசாத் இந்திய தேசிய காங்கிரசு 4,370 6,17,760 54%
வி. ஏழுமலை அதிமுக 1,660 38,69,54 33.83%
செந்தமிழன் ஜி‌ அமமுக 57 46,383 4.05%
தமிழ் அரசி நாம் தமிழர் கட்சி 258 32,409 2.83%
ஷாஜி மக்கள் நீதி மய்யம் 96 14,776 1.29%
நோட்டா - - 102 16,921 1.48%

16-ஆவது மக்களவைத் தேர்தல் (2014)

[தொகு]

முக்கிய வேட்பாளர்கள்

[தொகு]
வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள்
வி. ஏழுமலை அதிமுக 5,02,721
ஆர். சிவானந்தம் திமுக 2,58,877
ஏ. கே. மூர்த்தி பா.ம.க 2,53,332
எம். கே. விஷ்ணு பிரசாத் இதேகா 27,717

15-ஆவது மக்களவைத் தேர்தல் (2009)

[தொகு]

13 வேட்பாளர்கள் போட்டியிட்டதில் காங்கிரசின் எம். கிருட்டிணசாமி அதிமுகவின் என். சுப்பிரமணியனை 1,06,830 வாக்குகள் வேறுபாட்டில் வென்று ஆரணி மக்களவைத் தொகுதியின் முதல் உறுப்பினராக தேர்வு பெற்றார்.

வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள்
எம். கிருஷ்ணசாமி காங்கிரசு 3,96,728
என். சுப்பிரமணியன் அதிமுக 2,89,898
இரா. மோகனம் தேமுதிக 1,05,729
எம். வேலாயுதம் சுயேட்சை 14,919
சங்கர் பகுஜன் சமாஜ் கட்சி 9,700

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 "Poll Percentage - GELS2014" (PDF). முதன்மை தேர்தல் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு. 2014. பார்க்கப்பட்ட நாள் 28 சூலை 2018.
  2. "DETAILED RESULTS OF LATEST ELECTIONS ( XLS FORMAT ) - GENERAL ELECTIONS 2009". இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 2012-12-07. பார்க்கப்பட்ட நாள் ஏப்ரல் 30, 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆரணி_மக்களவைத்_தொகுதி&oldid=4052340" இலிருந்து மீள்விக்கப்பட்டது