மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி
![]() மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி (2008 மறுசீரமைப்புக்குப் பிந்தையது) | |
காலம் | 1984-நடப்பு |
---|---|
தற்போதைய மக்களவை உறுப்பினர் | செ. இராமலிங்கம் |
கட்சி | திமுக |
ஆண்டு | 2019 |
மாநிலம் | தமிழ்நாடு |
மொத்த வாக்காளர்கள் | 1,091,519[1] |
அதிகமுறை வென்ற கட்சி | இந்திய தேசிய காங்கிரசு (5 முறை) |
சட்டமன்றத் தொகுதிகள் | 160. சீர்காழி (SC) 161. மயிலாடுதுறை 162. பூம்புகார் 170. திருவிடைமருதூர் (SC) 171. கும்பகோணம் 172. பாபநாசம் |
மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி தமிழ்நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகளுள் 28வது தொகுதி ஆகும். இந்தத் தொகுதியில் விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் அதிக அளவில் உள்ளனர்.
பொருளடக்கம்
தொகுதி மறுசீரமைப்பு[தொகு]
மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் முன்பு கும்பகோணம், திருவிடைமருதூர், குத்தாலம், மயிலாடுதுறை, சீர்காழி (தனி), பூம்புகார் ஆகிய 6 சட்டசபை தொகுதிகள் இடம் பெற்றிருந்தன. கும்பகோணம், திருவிடைமருதூர், பாபநாசம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளன. மயிலாடுதுறை, சீர்காழி, பூம்புகார் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் நாகப்பட்டிணம் மாவட்டத்தில் அமைந்துள்ளன.
தொகுதி மறுசீரமைப்பு மூலம் குத்தாலம் தொகுதி நீக்கப்பட்டு அதற்குப் பதில் பாபநாசம் தொகுதி சேர்க்கப்பட்டது.
மக்களை உறுப்பினர்கள்[தொகு]
இங்கு காங்கிரஸ் 11 முறை வெற்றி பெற்றுள்ளது. திமுக இரண்டு முறை வெற்றி பெற்றுள்ளது. இதுவரை இந்த தொகுதியில் மக்களவை உறுப்பினர்களாக இருந்தவர்களின் பட்டியல்.
- 1951 இரட்டைஉறுப்பினர் ஆனந்தநம்பியார் கம்யூனிஸ்ட், சந்தானம் காங்கிரசு
- 1962 (தனி) மரகதம் சந்திரசேகர்- காங்கிரசு
- 1967 (தனி) சுப்ரவேலு தி.மு.க
- 1971 (தனி) சுப்ரவேலு தி.மு.க
- 1977 - குடந்தை ராமலிங்கம் - காங்கிரசு
- 1980 - குடந்தை ராமலிங்கம் - காங்கிரசு
- 1984 - இ. எசு. எம். பக்கீர்முகம்மது - காங்கிரசு
- 1989 - இ. எசு. எம். பக்கீர்முகம்மது - காங்கிரசு
- 1991 - மணிசங்கர் அய்யர் - காங்கிரசு
- 1996 - பி.வி. இராஜேந்திரன் - தமிழ் மாநில காங்கிரசு
- 1998 - கிருஷ்ணமூர்த்தி - தமிழ் மாநில காங்கிரசு
- 1999 - மணிசங்கர் அய்யர் - காங்கிரசு
- 2004 - மணிசங்கர் அய்யர் - காங்கிரசு
- 2009 - ஓ. எஸ். மணியன் - அதிமுக
- 2014 - ஆர். கே. பாரதி மோகன் - அதிமுக
- 2019 - இராமலிங்கம் - திமுக
15வது மக்களவைத் தேர்தல் முடிவுகள்[தொகு]
23 வேட்பாளர்கள் போட்டியிட்டதில் அதிமுகவின் ஓ. எசு. மணியன் காங்கிரசின் மணிசங்கர் அய்யரை 36,854 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.
வேட்பாளர் | கட்சி | பெற்ற வாக்குகள் |
---|---|---|
ஓ. எஸ். மணியன் | அதிமுக | 3,64,089 |
மணிசங்கர் அய்யர் | காங்கிரசு | 3,27,235 |
கே. பாண்டியன் | தேமுதிக | 44,754 |
ஜவாஹிருல்லா | மனிதநேய மக்கள் கட்சி | 19,814 |
எசு. கார்த்திகேயன் | பாரதிய ஜனதா கட்சி | 7,486 |
எல். வி. சப்தரிசி | பகுஜன் சமாஜ் கட்சி | 5,554 |
16வது மக்களவைத் தேர்தல்[தொகு]
முக்கிய வேட்பாளர்கள்[தொகு]
வேட்பாளர் | கட்சி | பெற்ற வாக்குகள் |
---|---|---|
ஆர். கே. பாரதி மோகன் | அதிமுக | 5,13,729 |
ஹைதர்அலி | மனிதநேய மக்கள் கட்சி | 2,36,679 |
அகோரம் | பா.ம.க | 1,44,085 |
மணிசங்கர் அய்யர் | காங் | 58,465 |
வாக்குப்பதிவு[தொகு]
2009 வாக்குப்பதிவு சதவீதம்[2] | 2014 வாக்குப்பதிவு சதவீதம் [3] | வித்தியாசம் |
---|---|---|
73.25% | 75.87% | ↑ 2.62% |
தேர்தல் முடிவு[தொகு]
17வது மக்களவைத் தேர்தல்(2019)[தொகு]
வாக்காளர் புள்ளி விவரம்[தொகு]
ஆண் | பெண் | இதர பிரிவினர் | மொத்தம் | வாக்களித்தோர் | % |
---|---|---|---|---|---|
10,97,243[4] |
முக்கிய வேட்பாளர்கள்[தொகு]
இந்த தேர்தலில் மொத்தம் 27 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் 6 வேட்பாளர்கள் கட்சிகள் சார்பாகவும், 21 வேட்பாளர்கள் சுயேட்சையாகவும் போட்டியிடுகின்றனர்.
சின்னம் | வேட்பாளர்[5] | கட்சி | பெற்ற வாக்குகள் | % | பெரும்பான்மை |
---|---|---|---|---|---|
![]() |
ஆசைமணி | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் | 3,37,978 | 30.8% | |
![]() |
ராமலிங்கம் | திராவிட முன்னேற்றக் கழகம் | 5,99,292 | 54.62% | 2,61,314 |
![]() |
கல்யாணசுந்தரம் | பகுஜன் சமாஜ் கட்சி | 3,183 | 0.29% | |
![]() |
சுபாஷ்னி | நாம் தமிழர் கட்சி | 41,056 | 3.74% | |
![]() |
ரெபயுதின் | மக்கள் நீதி மய்யம் | 17,005 | 1.55% | |
ஹபிப் மொஹமத் | All Pensioner’s Party | 892 | 0.08%
|
மேற்கோள்கள்[தொகு]
- ↑ GE 2009 Statistical Report: Constituency Wise Detailed Result
- ↑ "DETAILED RESULTS OF LATEST ELECTIONS ( XLS FORMAT ) - GENERAL ELECTIONS 2009". இந்தியத் தேர்தல் ஆணையம். பார்த்த நாள் ஏப்ரல் 30, 2014.
- ↑ "Poll Percentage - GELS2014". முதன்மை தேர்தல் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு (2014). பார்த்த நாள் 29 செப்டம்பர் 2018.
- ↑ "General Election 2019 - Election Commission of India". பார்த்த நாள் 12 August 2019.
- ↑ "List of CANDIDATE OF MAYILADUTHURAI Parliamentary Constituencies". Tamil Nadu. Election Commission of India. பார்த்த நாள் 12/05/2019.