மனிதநேய மக்கள் கட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

மனிதநேய மக்கள் கட்சி தமிழ்நாடு மாநில அரசியற் கட்சியாகும். இது தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பிரிவாக பிப்ரவரி 2009 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது.

தமுமுக மற்றும் மமகவின் ஒருங்கிணைந்த தலைவரான ஜே. எஸ். ரிபாயி, தலைமையில் கடந்த 06 அக்டோபர் 2015 அன்று தாம்பரத்தில் நடைபெற்ற பொதுக்குழுவில், இதன் தலைவராக பேரா. எம். எச். ஜவாஹிருல்லா, பொதுச் செயலாளர் அப்துல் சமது, பொருளாளர் ஓ.உ.ரஹ்மத்துல்லாஹ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

2011 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து சேப்பாக்கம், இராமநாதபுரம், ஆம்பூர் ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டது. இதில் ஆம்பூரில் அஸ்லம் பாஷாவும், இராமநாதபுரத்தில் பேரா.M.H.ஜவாஹிருல்லாவும் வெற்றிபெற்று இக்கட்சியின் முதல் சட்டமன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.


கட்சியின் இணையத்தளம்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மனிதநேய_மக்கள்_கட்சி&oldid=1972608" இருந்து மீள்விக்கப்பட்டது