சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதி
| சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி | |
|---|---|
| தமிழ்நாடு சட்டப் பேரவை, தொகுதி எண் 19 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | தென்னிந்தியா |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | சென்னை |
| மக்களவைத் தொகுதி | மத்திய சென்னை |
| நிறுவப்பட்டது | 2008 |
| மொத்த வாக்காளர்கள் | 234,067[1] |
| ஒதுக்கீடு | பொது |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 17-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை | |
| தற்போதைய உறுப்பினர் | |
| கட்சி | தி.மு.க. |
| கூட்டணி | மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2021 |
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதி (Chepauk-Thiruvallikeni Assembly constituency), தமிழ்நாட்டிலுள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று. இதன் தொகுதி எண் 19.
இது சென்னை மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். தமிழகத்திலேயே சிறிய தொகுதியாக இருந்த சேப்பாக்கம் தொகுதியில் திருவல்லிக்கேணி தொகுதியின் பகுதிகளை இணைத்து, சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி 2011 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. தற்போது, பெரிய தொகுதிகளில் ஒன்றாக இந்தத் தொகுதியும் உள்ளது.[2]
2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் இத்தொகுதியின் மொத்த வாக்காளர்கள்: 2,34,319. அதில் ஆண் வாக்காளர்கள்: 1,15,080 பெண் வாக்காளர்கள்: 1,19,204 மற்றும் மூன்றாம் பாலினம்: 35 ஆவர். திமுக சார்பில் உதயநிதி ஸ்டாலின், பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கசாலி, நாம் தமிழர் கட்சி சார்பில் மு. ஜெயசிம்மராஜாவும், அமுக சார்பில் எல். இராஜேந்திரன் போட்டியிட்டனர்.[3]
தொகுதியில் அடங்கும் பகுதிகள்
[தொகு]சென்னை மாநகராட்சியின் வார்டு 79, 81 முதல் 93 வரை, 95 மற்றும் 111[4].
வெற்றி பெற்றவர்கள்
[தொகு]| ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
|---|---|---|---|---|---|---|---|---|
| 2011[5] | ஜெ. அன்பழகன் | திமுக | 64,191 | 49.44 | மொ. தமிமுன் அன்சாரி | மமக | 54,988 | 42.35 |
| 2016 | ஜெ. அன்பழகன் | திமுக | 67,982 | 48.50 | ஆ. நூர்ஜஹான் | அதிமுக | 53,818 | 38.39 |
| 2021[6] | உதயநிதி ஸ்டாலின் | திமுக | 93,285 | 67.89 | ஏ. வி. ஏ. கஸ்ஸாலி | பாமக | 23,930 | 17.42 |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2021
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| தி.மு.க. | உதயநிதி ஸ்டாலின் | 93,285 | 68.92 | +21.60 | |
| பாமக | கசாளி | 23,930 | 17.68 | புதியவர் | |
| நாதக | எசு. எம். செயராஜ் | 9,193 | 6.79 | +5.53 | |
| இஜக | கே. முகமது இத்ரிசு | 4,096 | 3.03 | புதியவர் | |
| நோட்டா | நோட்டா | 2,061 | 1.52 | -0.91 | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 69,355 | 51.24 | +41.38 | ||
| பதிவான வாக்குகள் | 135,344 | 57.82 | -4.47 | ||
| தி.மு.க. கைப்பற்றியது | மாற்றம் | +21.60 | |||
2016
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| தி.மு.க. | ஜெ. அன்பழகன் | 67,982 | 47.32 | -2.12 | |
| அ.இ.அ.தி.மு.க. | எ. நூர்ஜகான் | 53,818 | 37.46 | ||
| பா.ஜ.க | தாமரை கஜேந்திரன் | 6,281 | 4.37 | +0.23 | |
| தேமுதிக | வி. அப்துல்லா சேட் | 5,507 | 3.83 | ||
| நோட்டா | நோட்டா | 3,494 | 2.43 | ||
| வெற்றி வாக்கு வேறுபாடு | 14,164 | 9.86 | +2.77 | ||
| பதிவான வாக்குகள் | 1,43,665 | 62.30 | -7.02 | ||
| தி.மு.க. கைப்பற்றியது | மாற்றம் | -2.12 | |||
2011
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| தி.மு.க. | ஜெ. அன்பழகன் | 64,191 | 49.44 | ||
| மமக | தமீமுன் அன்சாரி | 54,988 | 42.35 | ||
| பா.ஜ.க | எசு. வெங்கட்ராமன் | 5,374 | 4.14 | ||
| வெற்றி வாக்கு வேறுபாடு | 9,203 | 7.09 | |||
| பதிவான வாக்குகள் | 187,305 | 69.32 | |||
| தி.மு.க. வெற்றி (புதிய தொகுதி) | |||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 22 Dec 2021. Retrieved 31 Dec 2021.
- ↑ உதயநிதி ஸ்டாலின் போட்டியிடும் சேப்பாக்கம் தொகுதி கண்ணோட்டம்
- ↑ சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்றத் தேர்தல் 2021
- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 17 சனவரி 2016.
- ↑ 2011 இந்திய தேர்தல் ஆணையம்
- ↑ சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்றத் தேர்தல் 2021, ஒன் இந்தியா,