கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விருகம்பாக்கம், சென்னை மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். இதன் தொகுதி எண் 22. இது, இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.
முன்பு வில்லிவாக்கம் தொகுதியில் இருந்த 65 மற்றும் 128 ஆகிய வார்டு எண்கள் கொண்ட பகுதிகள், ஆலந்தூர் தொகுதியில் தொகுதியில் இருந்த 129, 130, 131 ஆகிய வார்டு எண்கள் கொண்ட பகுதிகள் ஒன்றிணைக்கப்பட்டு விருகம்பாக்கம் தொகுதி உருவானது.