நாகப்பட்டினம் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நாகப்பட்டினம் மாவட்டம்
India Tamil Nadu districts Nagapattinam.svg
நாகப்பட்டினம் மாவட்டம்:அமைந்த இடம்
தலைநகரம் நாகப்பட்டினம்
மிகப்பெரிய நகரம் [[நாகப்பட்டினம் மாயவரம்]]
ஆட்சியர்
திரு பிரவீன் பி.நாயர் இ.ஆ.ப
காவல்துறைக்
கண்காணிப்பாளர்


ஆக்கப்பட்ட நாள் 18.10.1991
பரப்பளவு 2,569 சகிமீ கி.மீ² (வது)
மக்கள் தொகை
(2011
வருடம்
அடர்த்தி
1,616,450 (வது)
629/கி.மீ²
வட்டங்கள் {{{வட்டங்கள்}}}
ஊராட்சி ஒன்றியங்கள் {{{ஊராட்சி ஒன்றியங்கள்}}}
நகராட்சிகள் {{{நகராட்சிகள்}}}
பேரூராட்சிகள் {{{பேரூராட்சிகள்}}}
ஊராட்சிகள் {{{ஊராட்சிகள்}}}
வருவாய் கோட்டங்கள் {{{வருவாய் கோட்டங்கள்}}}
{{{பின்குறிப்புகள்}}}

நாகப்பட்டினம் மாவட்டம் தமிழத்தின் கிழக்குக் கடற்கரையில் அமைந்துள்ள ஒரு மாவட்டம். 1991-ஆம் ஆண்டு அக்டோபர் 18 ஆம் திகதி தஞ்சாவூர் மாவட்டத்தின் கிழக்குப் பகுதிகள் பிரிக்கப்பட்டு, இம்மாவட்டம் உருவாக்கப்பட்டது.

மக்கள்தொகை பரம்பல்[தொகு]

2,569 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் 2011 ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி மொத்த மக்கள்தொகை 1,616,450 ஆகும். அதில் ஆண்கள் 798,127 ஆகவும்; பெண்கள் 818,323 ஆகவும் உள்ளனர். கடந்த பத்தாண்டுகளில் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் 8.57% ஆக உயர்ந்துள்ளது. பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு, 1025 பெண்கள் வீதம் உள்ளனர். குழந்தைகள் பாலின விகிதம் ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு 959 பெண் குழுந்தைகள் வீதம் உள்ளனர். மக்கள்தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டரில் 629 நபர்கள் வீதம் வாழ்கின்றனர். மாவட்ட சராசரி எழுத்தறிவு 83.59% ஆகவுள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 165,245 ஆகவுள்ளனர்.[1]

இம்மாவட்ட மக்கள்தொகையில் இந்துக்கள் 1,435,072 (88.78%), கிறித்தவர்கள் 47,579 (2.94 %), இசுலாமியர் 128,617 (7.96%) ஆகவும் உள்ளனர்.

மாவட்ட வருவாய் நிர்வாகம்[தொகு]

இம்மாவட்டத்தில் நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை என இரண்டு வருவாய் கோட்டங்களும், எட்டு வருவாய் வட்டங்களும் உள்ளது.[2]

வருவாய்க் கோட்டங்கள்[தொகு]

வட்டங்கள் (தாலுக்காக்கள்)[தொகு]

நிர்வாக அடிப்படையில் இம்மாவட்டம் எட்டு வட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.[3]

உள்ளாட்சிச் துறை[தொகு]

இம்மாவட்டம் நான்கு நகராட்சிகளையும், எட்டு பேரூராட்சிகளையும் கொண்டுள்ளது.[4]

நகராட்சிகள்[தொகு]

பேரூராட்சிகள்[தொகு]

 1. திட்டச்சேரி
 2. தரங்கம்பாடி
 3. வேளாங்கண்ணி
 4. கீழ்வேளூர்
 5. குத்தாலம்
 6. மணல்மேடு
 7. தலைஞாயிறு
 8. வைத்தீசுவரன்கோவில்

ஊராட்சித் துறை[தொகு]

இம்மாவட்டம் 11 ஊராட்சி ஒன்றியங்களையும்[5], 434 ஊராட்சிகளையும் கொண்டது.[6]

அரசியல்[தொகு]

இம்மாவட்டத்தின் பகுதிகள் நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி மற்றும் மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் உள்ளது. மேலும் எட்டு சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது.[7]

ஆன்மிகம் மற்றும் சுற்றுலாத் தலங்கள்[தொகு]

தமிழ்நாட்டின் சமூக நல்லிணக்க மாவட்டம் என்றும் அழைக்கப்படுகிறது. இம்மாவட்டத்தில் வேளாங்கண்ணி ஆரோக்கியமாதா கோவிலும் உள்ளது. இஸ்லாமியர்களுடைய பிரசித்தி பெற்ற நாகூர் மற்றும் பாப்பாவூர் தர்காவும், பிரசித்தி பெற்ற சப்த விதாங்கர் கோயில், நீலாயதாட்சி சமேதா காயாரோகண சுவாமி கோயில், சிக்கல் சிங்காரவேலர் கோவிலும் இம்மாவட்டத்தில் தான் உள்ளது. இந்த புண்ணிய தலங்களுக்கு அதிகமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இம்மாவட்டத்தில் அமைந்துள்ள காவிரிப்பூம்பட்டிணம் என்று இலக்கியப் புகழ்பெற்ற பூம்புகார் சோழர்களின் துறைமுக நகரமாய் விளங்கியது.

2004 ஆழிப்பேரலை[தொகு]

நாகப்பட்டிணம், 2004 இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கமும், ஆழிப்பேரலையையும் தொடர்ந்து உருவான ஆழிப்பேரலையினால் மிகுந்த பாதிப்புக்குள்ளான பகுதிகளுள் ஒன்றாகும்.

மேற்கோள்கள்[தொகு]

 1. Nagapattinam District : Census 2011 data
 2. Revenue
 3. அரசுத்தளம்
 4. LOCAL BODIES
 5. நாகப்பட்டினம் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம்
 6. District Development Administration
 7. MP and MLAs

வெளி இணைப்புகள்[தொகு]