சோழ நாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சோழநாடு

சோழமண்டலம்

—  region  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாவட்டம் அரியலூர் ,
காரைக்கால், புதுச்சேரி,
நாகப்பட்டினம்,
பெரம்பலூர், கடலூர்,
புதுக்கோட்டை, கரூர்
தஞ்சாவூர்,
திருச்சிராப்பள்ளி,
திருவாரூர்
மாவட்டங்கள் 11
மிகப்பெரிய நகரம் திருச்சி
மக்களவைத் தொகுதி சோழநாடு
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு


சோழ நாடு என்பது தற்போதைய இந்தியாவின் தென் பகுதியாகும் (தென்னிந்தியா). தென் இந்தியாவின் பெரும் பகுதி சோழ மன்னர்களால் மிகவும் சிறப்பாக ஆளப்பட்டது.சோழர்கள் ஆண்ட காலம் பொற்காலம் என வரலாறு கூறுகிறது. சோழ நாட்டில் பேசப்பட்ட மொழி தமிழ் மொழியாகும். சோழ மன்னர்கள் சைவ மதத்தை பின்பற்றினார்கள்.

இது திராவிடதேசத்திற்கு தெற்கிலும், பாண்டியதேசத்திற்கு வடக்கிலும், விசாலமான பூமியில் பரவி இருந்த தேசம்.[1]

இருப்பிடம்[தொகு]

இந்த தேசத்தில் பூமி கிடைமட்டமாகவும், மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி சரிந்தும், மேடும், பள்ளமும், காணப்படும். இந்த தேசம் கிழக்கு மேற்கில் நீண்டும்,தென்வடக்கில் குறுகியும் இருக்கும்.[2]

மலை, காடு, விலங்குகள்[தொகு]

இந்த தேசத்தின் நான்கு பக்கங்களிலும் மலைகளை காணமுடியாது. இவை பெரும்பாலும் செழிப்பான நல்ல பூமி அதிகமாகவும் இருக்கும்.

நதிகள்[தொகு]

இந்த கர்னாடகதேசத்தின் தெற்குபகுதியில் ஸஹயம் என்னும் குடகு மலையில் உற்பத்தியாகும் காவிரிநதி திருவரங்கம் அருகில் இரு நதியாகப் பிரிந்து வடபகுதி கொள்ளிடம் என்றும், தென்பகுதி காவிரி என்றும் சோழதேசத்தை செழிக்க வைக்கின்றது.[3]

வேளாண்மை[தொகு]

இந்த சோழதேசத்தில் நெல், வாழை, கரும்பு, போன்றவைகளும், துவரை, கடலை போன்ற புன்செய் பயிர்களும் விளைகின்றது.

சிறப்பு[தொகு]

இந்த சோழதேசம் சோநாடு சோறுடைத்து சிறப்பு வாய்ந்த தேசமாகும்.[3]

கருவி நூல்[தொகு]

சான்றடைவு[தொகு]

  1. "புராதன இந்தியா"-பி. வி. ஜகதீச அய்யர்-1918 - Published by- P. R. Rama Iyer & co-madaras
  2. புராதன இந்தியா என்னும் பழைய 56 தேசங்கள் - சந்தியா பதிப்பகம் - சென்னை-83- மூன்றாம் பதிப்பு-2009- பக்கம் - 269 -
  3. 3.0 3.1 புராதன இந்தியா என்னும் பழைய 56 தேசங்கள் - சந்தியா பதிப்பகம் - சென்னை-83- மூன்றாம் பதிப்பு-2009- பக்கம் - 270- பிழை காட்டு: Invalid <ref> tag; name "three" defined multiple times with different content
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோழ_நாடு&oldid=2741619" இருந்து மீள்விக்கப்பட்டது