2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 27 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும், 9,934 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் மக்கள்தொகை 40,510 ஆகும். அதில் 20,139 ஆண்களும், 20,371 பெண்களும் உள்ளனர். இந்நகரத்தின் எழுத்தறிவு 87.8% மற்றும் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 1,012பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 4090 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 951 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 4,849 மற்றும் 73 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 65.67%, இசுலாமியர்கள் 11.3%, கிறித்தவர்கள் 22.95% மற்றும் பிறர் 0.08% ஆகவுள்ளனர்.[4]
மணப்பாறை திருச்சிக்கு திண்டுக்கல்லுக்கும் இடையில் தேசிய நெடுஞ்சாலை 83 (பழைய எண் - 45)-இல் அமைந்துள்ளது. மணப்பாறை நகரம், துவரங்குறிச்சி, புதுக்கோட்டை, குளித்தலை, கோவில்பட்டி[5] ஆகிய நகரங்களுடனும் சாலை மார்க்கமாக இணைக்கப்பட்டுள்ளது
மணப்பாறை நகரின் மையப்பகுதியில் ஒரு பேருந்து நிலையம் அமைந்துள்ளது . திருச்சி, திண்டுக்கல், பழனி, தேனி போன்ற நகரங்களுக்கு இங்கிருந்து அடிக்கடி பேருந்து சேவை உள்ளது.
மணப்பாறையிலிருந்து கீழ்காணும் நகரங்களுக்கும் பேருந்து சேவை உள்ளது.