கங்கைகொண்ட சோழபுரம்
| கங்கைகொண்ட சோழபுரம் | |
|---|---|
| உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர் | |
| இடம் | அரியலூர் மாவட்டம் |
| வகை | பண்பாடு |
| ஒப்பளவு | ii, iii |
| உசாத்துணை | 250 |
| UNESCO region | உலக பாரம்பரியக் களங்களின் பட்டியல் - இந்தியா |
| பொறிப்பு வரலாறு | |
| பொறிப்பு | 1987 (11th தொடர்) |
| விரிவாக்கம் | 2004 |
]கங்கைகொண்ட சோழபுரம் (ஆங்கிலம்: Gangaikonda Cholapuram) என்ற சிற்றூர் தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டத்திலுள்ளது. இவ்வூரைச் சோழர்களின் பேரரசை நிறுவிய முதலாம் இராஜராஜ சோழனின் மகனான இராசேந்திர சோழன் உருவாக்கினார். இதனையடுத்த 250 ஆண்டுகளுக்கு இவ்வூர் பிற்கால சோழ பேரரசின் தலைநகரமாக விளங்கியது.[1] இங்கு இராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட கங்கைகொண்ட சோழீசுவரர் கோயில் உள்ளது.[2] அதனை ஐக்கிய நாடுகள் அமைப்பு உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்தது.[3]
அமைவிடம்
கங்கைகொண்ட சோழபுரம் அரியலூர் மாவட்டத்தில் 11°12′27″N 79°27′05″E / 11.2076°N 79.4514°E என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு அமைந்துள்ளது.
வேறு பெயர்கள்
கங்கை கொண்ட சோழபுரத்திற்கு எண்ணற்ற பெயர்கள் உள்ளன. பண்டையப் புலவர்கள் கங்காபுரி, கங்கைமாநகர் கங்காபுரம் போன்ற பெயர்களில் இவ்வூரை குறித்தனர்.[1]
சோழர்களின் புதிய தலைநகர்
இராஜேந்திர சோழன் மேலை, கீழைச் சாளுக்கிய தேசங்களிலும் ஈழம் பாண்டிய சேர தேசங்களையும் வெற்றி கண்ட பிறகு பொ.ஊ. 1019இல் கங்கை வரை படையெடுத்து சென்று வெற்றியும் கண்டார். அதனால் கங்கை கொண்ட சோழன் என்ற பட்டமும் பெற்றார். அதன் நினைவாக 1023இல் கங்கை கொண்ட சோழபுரம் எனும் புதிய தலைநகரை உருவாக்கினார். இங்கு சிவனுக்கு கங்கைகொண்ட சோழீசுவரர் கோயில் எனும் மாபெரும் கோவிலை அமைத்தார்
கங்கை வரை பெற்ற வெற்றியின் நினைவாக கங்கை கொண்ட சோழப் பேரேரி அமைக்கப்பட்டது. இதற்கு சோழகங்கம் என்றும் பெயர் உண்டு.[4]
இவற்றையும் பார்க்கவும்
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 "கங்கைகொண்ட சோழேச்சரம் (கங்கைகொண்ட சோழபுரம்)". www.kamakoti.org. Retrieved 2025-07-28.
- ↑ தினமலர். "மன்னர் அரியணை ஏறிய 1,000 ஆண்டு விழா கல்லூரி மாணவர்களின் தீபச்சுடர் ஓட்டம்". https://www.dinamalar.com. Retrieved 2025-07-28.
{{cite web}}: External link in(help)|website= - ↑ "சோழ மன்னன் நினைவாக தஞ்சையிலிருந்து தீப ஓட்டம் : கங்கைகொண்ட சோழபுரத்தில் 1,000 தீபம் ஏற்றினர்". Hindu Tamil Thisai. 2014-07-26. Retrieved 2025-07-28.
- ↑ பக் 49, ப.கோமதிநாயகம் (மார்ச், 2000). தமிழகப் பாசன வரலாறு. p. 87. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-87371-07-2.
{{cite book}}: Check date values in:|date=(help)
