இரண்டாம் இராஜராஜ சோழன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இரண்டாம் இராசராச சோழன்

{{{map}}}
{{{caption}}}
ஆட்சிக்காலம் பொ.ஊ. 1146-1163
title இராசகேசரி வர்மன்
தலைநகரம் கங்கைகொண்ட சோழபுரம்
அரசி
பிள்ளைகள்
முன்னவன் இரண்டாம் குலோத்துங்க சோழன்
பின்னவன் இரண்டாம் இராசாதிராச சோழன்
தந்தை இரண்டாம் குலோத்துங்க சோழன்
பிறப்பு கங்கை கொண்ட சோழபுரம்
இறப்பு கங்கை கொண்ட சோழபுரம்

இரண்டாம் இராஜராஜ சோழன் இரண்டாம் குலோத்துங்கனின் மகனாவார். இரண்டாம் குலோத்துங்கனின் கல்வெட்டுக்களில் காணப்படும் கடைசி ஆட்சி ஆண்டு 16 வது அல்லது 17 வது ஆண்டு. அவனுடைய ஆட்சி பொ.ஊ. 1150 அளவில் முடிவடைந்ததாக இதிலிருந்து தெரிகிறது. இந்தக் காலத்திற்கு நான்கு ஆண்டுகள் முன்பு அவர், தன் மகனான இரண்டாம் இராஜராஜனை நிர்வாகத்தில் நேரடியாகத் தொடர்புபடுத்தினான். பரகேசரி இராஜராஜனுடைய கல்வெட்டுகளில் அவருடைய ஆட்சி ஆண்டுகள் பொ.ஊ. 1146ல் ஏப்ரல் 6ம் தேதிக்குப் பிறகு ஒரு தேதியிலிருந்து கணக்கிடப்படுகின்றன.

ஆட்சி[தொகு]

இரண்டாம் இராஜராஜனின் ஆட்சியைப் பற்றி பல கல்வெட்டுகள் பாதுகாக்கப் பட்டிருக்கின்றன. அவற்றில் அடங்கியுள்ள பல மெய்க்கீர்த்திகள் அவனுடைய ஆட்சியின் நிலப்பரப்பையும் அவனுக்கு அடங்கிய ஏராளமான சிற்றரசர்களின் பெயர்களையும் நிலைமைகளையும் தெரிவிக்கின்றன. இந்தக் கல்வெட்டுகள் இராணுவ நடவடிக்கைகளைப் பற்றி ஒரு செய்தியும் இல்லாததால், இரண்டாம் குலோத்துங்கனின் ஆட்சியைப் போலவே, இரண்டாம் இராஜராஜனின் ஆட்சியும் பொதுவாக அமைதியாகவே இருந்தது.

பேரரசின் பரப்பு[தொகு]

இரண்டாம் இராஜராஜன் ஆட்சியில் பேரரசு எந்த அளவு, அல்லது எதுவரை பரவியிருந்தது என்பது அவன் கல்வெட்டுகளால் உறுதிப்படுகிறது. கெந்தட்டியிலுள்ள அவனுடைய 7ம் ஆண்டுக் கல்வெட்டு குவலாள நாட்டில் சூற்றூரில் ஒரு மலை மீது காடுவெட்டு என்ற சிற்றரசன் கோயில் கட்டிய விவரத்தையும், நிகரிலாச் சோழ மண்டலத்தின் ஒரு பகுதியான கங்க நாட்டில் தகடூர் நாட்டைப் பற்றி சேலம் மாவட்டத்தில் கிடைத்த அழிந்து போகக்கூடிய ஓர் ஆதாரத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதும் தகடூர்க்கிழவன் என்று தன்னைச் சொல்லிக் கொள்ளும் ஒருவன் கொடுத்த நன்கொடையைப் பற்றி பொ.ஊ. 1164ல் பெரும்பேர் கொங்குநாட்டிலும் கங்க நாட்டின் கீழ்ப்பகுதியிலும் இன்னும் ஓரளவு சோழரின் மேலதிகாரம் தொடர்ந்து அங்கீகரிக்கப்பட்டு வந்தது என்பதைக் காட்டுகின்றது.

சேரப் போர்[தொகு]

இரண்டாம் ராஜ ராஜ சோழனின் காலத்தில் சேரர்களுடன் வஞ்சி மாநகரில் பெரும் போர் நிகழ்ந்ததாக தக்கையாப் பரணி மூலம் அறியலாம். சேர தேசத்து மன்னனின் பெயர் அரிந்திலது. சோழர்களுக்கு செலுத்த வேண்டிய வரிதனை சேரன் கட்ட மறுத்ததால் சோழர்கள் சேரன் மீது படை எடுத்ததாக ராசா ராசா உலா கூறுகின்றது . இந்தப் போர் வஞ்சி மாநகரில் நிகழ்ந்ததாகவும் சோழர் படைதனை பல்லவராயன் பெருமான் நம்பி என்பவன் தலைமை தாங்கி சென்று, போரை வென்று ராசா ராசனுக்கு வாகை சுட்டினான்.

பாண்டியப் போர்[தொகு]

சேரர்களைப் போலவே பாண்டியர்களும் கப்பம் தனை கட்ட மறுத்து சுதந்திர வேட்கை கொண்டு புரட்சி செய்ய ஆரம்பிக்கும் காலத்தே பெருமான் நம்பி பல்லவராயன் தலைமை தாங்கிய சோழர் படை பாண்டிய தேசத்தை மையம் கொண்டு சென்றது. திரை செலுத்தி வந்து பாண்டியன், முரண்பட்டதை பற்றி அன்னோர் பால் திரை கொள்ள வேண்டி இப்போர்கள் நிகழ்ந்திருக்கலாம்.

பாண்டிய நாட்டில் சோழ அரசப் பிரதிநிதிகளை நியமிக்கும் வழக்கம் முதலாம் குலோத்துங்கனால் கைவிடப்பட்டது. மதுரையில் பொ.ஊ. 1131-1144 வரை ஆட்சி செலுத்திய 'சடையவர்மன் சீவல்லபன் மகன் மாறவர்மன் பராக்கிரம பாண்டியன். பராக்கிரம பாண்டியன் பொ.ஊ. 1144 இல் அரியணை ஏறினான். அப்போது தென் பாண்டி நாட்டில் 'சடையவர்மன் குலசேகரன்' திருநெல்வேலி மாவட்டம் கீழ்வேம்ப நாட்டிலுள்ள'முனையதரையன்' எனும் அரியணையில் ஆட்சி செய்தான். பராக்கிரம பாண்டியனிடமிருந்து மதுரையை கைப்பற்ற எண்ணி மதுரையை முற்றுகையிட்டான் சடையவர்மன் குலசேகரன். ஓராண்டாக முற்றுகைத் தொடர்ந்தது. இறுதியில் பொ.ஊ. 1166-இல் மனைவி மக்களுடன் பராகிரமப் பாண்டியன் கொல்லப்பட்டான். பராக்கிராமனின் மகன் வீர பாண்டியன் மட்டும் தப்பி பொதிகை மலைக் காடுகளில் ஒளிந்துகொண்டான். பின் இலங்கை அரசன் பராக்கிரமபாகு உதவியுடன் வீர பாண்டியன் மன்னனானான். வீர பாண்டியன் சிங்களர் உதவியுடன் குலசேகரன் மீது படை எடுத்தான். பொ.ஊ. 1171-இல் குலசேகரப் பாண்டியன் இரண்டாம் இராசாதிராசன் உதவி வேண்டினான். ராசாதிராசன் தனது படைத் தளபதியும் அமைச்சனுமான திருச்சிற்றம்பலமுடைய பெருமான் நம்பிப் பல்லவராயன் தலைமையில் பெரும்படை அனுப்பினான். கீழ் நிலையிலும் பின் பொன்னமராவதியிலும் நடைபெற்ற போரில் சோழ படைத் தளபதி பல்லவராயன் தோற்றான். வீரபாண்டியனுக்கு சிங்கள மன்னன் உதவினான்.உண்மையில் இப்போர் சோழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் நடைபெற்ற போரே. ஆதாரம்; மகாவம்சம்,தொண்டை நாட்டிலுள்ள நன்கு கல்வெட்டுகள். பின் நடைபெற்ற போர்களில் பல்லவராயன் சிங்களவர்களைப் புறங்காணச் செய்து,சிங்களப் படைத் தலைவர்களான இலங்காபுரித் தண்ட நாயகன்,ஜகத் விஜய தண்டநாயகன் ஆகிய இருவரின் தலைகளையும் மதுரை கோட்டை வாசலில் வைத்தான். ஆதாரம்;பல்லவராயன் பேட்டைக் கல்வெட்டு.

அவைக்களப் புலவர் ஒட்டக்கூத்தரின் பேரனான 'கவிப்பெருமாள் ஆனந்த வரதக் கூத்தன்'. அவர் 'சங்கர சோழன் உலா' இராசாதி ராசன் மீது பாடினார்.

காவிரி பிரச்சனை[தொகு]

"சுழியிட்ட காவிரிக்குச் சோணாடு வாழ
வழியிட்ட வாள் காண வாரீர்"
          -இராச ராசா சோழனுலா

காவிரிப் பிரச்சனை ஆரம்பமாகிய காலம் இவனது காலமாக தான் இருக்க வேண்டும். மேலே குறிப்பிட்டுள்ள வரிகளின் மூலம் நாம் காவிரிப் பிரச்சனிப் பற்றித் தெளிவாக தெரிந்துக் கொள்ளலாம். மேற்கு மலைத் தொடரில் ஆரம்பிக்கும் காவிரி நதிதனை (அடிக் காவிரி) சோழ நாடு செழிக்க விடாமல் இருக்கும் பொருட்டு அடைத்து விடுகின்றனர். இதனை அடுத்து சோழன் படை எடுத்து சென்று பகைமை வென்று காவிரி தனை சோழ நாட்டின் கண் திருப்பியவன் என்று பாடப் படுகின்றான். ஆனால் இவன் எந்த மன்னன் மீது படை எடுத்து சென்றான் என்று குறிப்பிடப்பட வில்லை.

வைஷ்ணவத் தொண்டு[தொகு]

தம் தந்தையை போல் சிவநேசன் ஆகிய ராஜ ராஜன் தன் தந்தைக் காலத்தே நிகழ்ந்த நிகழ்ச்சியால் வருத்தமுற்று இருந்த வைணவர்கள் மனக்கிலேசம் தீரும் பொருட்டு வைணவத் தளங்களுக்கு சேவைப் புரிந்தான். " விழுந்த அறி சமையத்தை மீளவேடுத்தனன்" -என்று இவனை இவன் மெய்க் கீர்த்தியில் பாடியுள்ளனர். இதன் மூலம் இவனைத் வைணவத் தொண்டினைப் பற்றி தெரிந்துக் கொள்ளலாம்.

ராஜ ராஜேஸ்வரம் :[தொகு]

தன் தந்தையை போல் சிவப் பக்தனாகிய இரண்டாம் ராஜ ராஜன், தன் பாட்டன் முதலாம் ராஜ ராஜனைப் போல் அழியாப் புகழ் அடைய விரும்பினான். போர்களின் மீது ஆர்வம் அற்று இருந்த இவன், தனது சிவப் பக்தியை வெளிப் படுத்தும் வண்ணம் ராஜ ராஜேஸ்வரம் என்னும் கோவில் தனிக் கட்டினான். தென்னகத்தின் சிறந்த கலைக் கோவில்களில் ராஜ ராஜேஸ்வரமும் ஒன்றாகும். தன் பாட்டனின் பெயரைப் பெற்றிருந்த இவன், அவரைப் போலவே தனது புகழையும் சரித்திரத்தில் நிலைப் படுத்தும் பொருட்டு இந்தக் கலைக் கோவில் தனை கட்டினான். கலைகளின் சொர்க்க புரியாக திகழ்ந்ததாக ஒட்டக்கூத்தர் தனது உலாவில் பாடி உள்ளார். அனைத்து நாயன்மார்களின் சரித்திரத்தையும் இக்கோவிலில் அவன் வரைவித்தான்.

எதிரிளிப் பெருமாள் (இரண்டாம் ராஜாதி ராஜ சோழன் )[தொகு]

இரண்டாம் ராஜாதி ராஜ சோழன் என்றப் பட்டப் பெயருடன் அரியணை ஏரியவன் அரசப் பீடத்தின் நேரடி வாரிசு கிடையாது. தனது இறுதி நாட்களில் தனக்கு அடுத்து அரசனை அடைவதற்கு தனது வாரிசுகள் சிறுவர்களாக இருந்ததால் தனது தாயத்தினருள் ஒருவனான எதிரிளிப் பெருமாள் என்பானுக்கு முடி சூட்டி விட்டு மரணம் அடைந்தான்.

பேரரசு பலகீனம் அடைதல்[தொகு]

முதலாம் குலோத்துங்கனின் ஆட்சியின் இறுதியிலிருந்து சோழப்பேரரசுக்கு தீமை நிறைந்த காலம் தொடர்ச்சியாக ஏற்பட்டது. போசளர், மேலைச் சாளுக்கியர் ஆகியோரின் வெற்றிகளால் அரசின் நிலப்பரப்பு மிகவும் குறுகியது. பேரரசுக்குள் ஏற்பட்ட மற்றொரு முக்கியமான மாறுதல், ஆங்காங்குள்ள குறுநில மன்னர்கள் அதிகாரத்திலும் செல்வாக்கிலும் விரிவடைந்து தலைதூக்கியது.

இதன் காரணங்களால், முதலாம் இராஜராஜனாலும் அவனுடைய பின்னோர்களாலும் பாடுபட்டு, திட்டமிட்டு, உறுதியுடன் அமைக்கப்பட்ட 'மைய அரசு' என்ற நிர்வாக கட்டுகோப்பு இருந்த இடம் தெரியாமல் சிதைந்துவிட்டது.

மேற்கோள்கள்[தொகு]