கொங்கு நாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
India Kongu Nadu locator map.svg

கொங்கு நாடு, தென்னிந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின், கேரளத்துடன் எல்லை கொண்ட வடகிழக்குப் பரப்பில் உள்ளப் பகுதியாகும்.

கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர் மற்றும் நாமக்கல் ஆகிய தொழில் நகரங்கள் உள்ளன. கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், நீலகிரி, ஆத்தூர் (சேலம்) வட்டம் தவிர்த்த சேலம் மாவட்டம், கரூர் மாவட்டத்தில் கரூர், அரவக்குறிச்சி ஆகிய பகுதிகளையும், கிருஷ்ணராயபுரம் பகுதியில் மாயனூர், மனவாசி உள்ளிட்ட நான்கு கிராமங்களையும், திண்டுக்கல் மாவட்டத்தில் பழனி, ஒட்டன்சத்திரம், வேடசந்தூர், கொடைக்கானல், ஆத்தூர் (திண்டுக்கல்) பகுதிகளையும், வேலூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், வாணியம்பாடி பகுதியையும், திருச்சி மாவட்டத்தில் தொட்டியம் பகுதியும், திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலைப்பகுதி, விழுப்புரம் மாவட்டம் கல்வராயன் மலைப்பகுதி ஆகியவற்றை உள்ளடக்கியது என கருதப்படுகின்றது. மேலும் கர்நாடக மாநில கொல்லேகல், பண்டிபுரம், கேரள மாநில அட்டப்பாடி, கொழிஞ்சாம்பாறை, சின்னார், மறையூர் பள்ளத்தாக்கு ஆகியவையும் இதனுள் அடங்கும் என்று கூறப்படுகின்றது.[சான்று தேவை]

பெயர்க்காரணம்[தொகு]

கொங்கு என்ற சொல்லுக்கு தேன், சாரல் என்று பொருள். மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரின் கிழக்குச் சரிவுப் பகுதியிலுள்ள வனப்பகுதியில் தேன் மிகுந்திருந்ததால் கொங்கு நாடு எனவும், குடநாட்டில் (கேரளாவின் வட பகுதி) மிகுதியாய் பெய்யும் மழையின் சாரல் மிகுந்து பெய்ததால், கொங்கு நாடு எனவும், கூறுவார் உண்டு. ஆனால் மிகச்சரியானது முடியுடை வேந்தர்களான சேர, சோழ, பாண்டிய நாட்டின் வடமேற்கு எல்லை கங்கில்(ஓரத்தில்) அமைந்ததால் கங்குநாடு, என்று இருந்து காலப்போக்கில் கொங்குநாடு என மருவியது.

உள்ளடக்க நாடுகள்[தொகு]

கொங்கு மண்டத்தில் 24 நாடுகளும் இணைநாடுகள் சிலவும் இருந்ததாகக் கொங்கு மண்டல சதகம் 3-ஆம் பாடல் தெரிவிக்கிறது. அவற்றை உரைநூல் ஒன்று [1] குறிப்பிடுகிறது. அவற்றின் அகரவரிசை வருமாறு. 24 நாடுகள்

 1. அண்ட நாடு
 2. அரையன் நாடு
 3. ஆறை நாடு
 4. ஆனைமலை நாடு
 5. இராசிபுர நாடு
 6. ஒருவங்க நாடு
 7. காங்கேய நாடு
 8. காஞ்சிக்கோயில் நாடு
 9. காவடிக்கன் நாடு
 10. கிழங்கு நாடு
 11. குறும்பு நாடு
 12. தட்டையன் நாடு
 13. தலையன் நாடு
 14. திருவாவினன்குடி நாடு
 15. தென்கரை நாடு
 16. நல்லுருக்கன் நாடு
 17. பூந்துறை நாடு
 18. பூவாணிய நாடு
 19. பொன்களூர் நாடு
 20. மணல் நாடு
 21. வடகரை நாடு
 22. வாரக்கன் நாடு
 23. வாழவந்தி நாடு
 24. வெங்கால நாடு

இணைநாடுகள்

 1. இடைப்பிச்சான் நாடு
 2. ஏழூர் நாடு
 3. சேல நாடு
 4. தூசூர் நாடு
 5. பருத்திப்பள்ளி நாடு
 6. விமலை நாடு

முதலானவை

வரலாறு[தொகு]

கொங்கு மண்டலத்தில் நடக்கும் திருமண நிச்சயதார்த்தத்தில் நடக்கும் சடங்குகள். கொங்கு மண்டலத்தின் 24 நாடுகளில் ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு வெற்றிலை பாக்கு வைக்கப்பட்டுள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலைகளின் பாலக்காட்டுக் கணவாயின் அருகில் அமைந்துள்ளதால் தென்னகத்தின் பல அரசுகள் இப்பகுதியைக் கைப்பற்றச் சண்டையிட்டன - கரூரின்(வஞ்சி) சேரர், பின்னர் சங்கம் மருவிய காலத்தில், கங்க வம்சத்து மேற்கு கங்கர்கள் ஆகியோரின் ஆளுமையின் கீழ் கங்கவாடி 96,000 என்ற பகுதி இருந்துள்ளது.[2] தஞ்சைச் சோழர்களான இராசராசன் மற்றும் இராசேந்திரன் ஆகியோர் ஆளுமைக்கீழும் இருந்துள்ளது. பின்னர், இப்பகுதி ஓய்சளர்களின் ஆட்சிக் கீழ்ச் சென்றது. அவர்கள் கீழ்நிலை ஆட்சிக்கு, இங்கிருந்து வந்த கவுண்டர் ஆட்சி அமைப்பினையே பயன்படுத்தினர். கில்ஜி மன்னர்களின் படையெடுப்பு முறியடிக்கப்பட்ட பிறகு, விசயநகரப் பேரரசின் கீழ் நாயக்கர்களின் ஆட்சிக்கு வந்தது.[3]கொங்கு நாடு, 17ஆம் நூற்றாண்டில், மதுரை நாயக்கர்களின் ஆளுமையின் கீழ் 1659 தொடங்கி 1672 முடிவடைந்தது.[3] தொடர்ந்து பாளையக்காரர்களின் கீழ் கொங்டு நாடு இருந்து வந்துள்ளது.[4]

சங்க நூல்களில் கொங்கர்[தொகு]

"கொங்கு புறம் பெற்ற கொற்ற வேந்தே"-புறநானூறு-பாடல்-373
"கொங்கர் குடகட லோட்டிய ஞான்றை"-புறநானூறு-பாடல்-160

'ஆ கெழு கொங்கர்' என்னும் பதிற்றுப்பத்து (22) பாடல் தொடர் ஆனிரைகளைப் பேணுவதில் கொங்கர்களுக்கு இருந்த ஈடுபாட்டைக் காட்டுகிறது.

சமய இலக்கியங்களில் கொங்கு[தொகு]

"விரவியவீங்கோய் மலைமுதலாக விமலர்தம் பதிபலவணங்கிக்
குரவலர் சோலையணிதிருப்பாண்டிக் கொடு முடியணைந்தனர் கொங்கில்"- பெரிய புராணம்(-ஏயர்கோன்-85)

"காரூரு மலைநாடு கடந்தருளிக் கற்சுரமும்
நீரூருங் கான்யாறு நெடுங்கானும் பலசுழியச்
சீரூரும் திருமுருகன் பூண்டிவழிச் செல்கின்றார்"-பெரிய புராணம்(-சேரமான்-164)

கயிறு குறு முகவை[தொகு]

கெட்டியான பாறைகளைக் கணிச்சியால் உடைத்து ஆழ்கிணறுகள் தோண்டுவார்கள். 'பத்தல்' என்னும் வாளியைக் கயிற்றில் கட்டி அக் கிணற்றில் நீர் இறைப்பார்கள். நீர் இறைக்கும்போது பாடிக்கொண்டே இறைப்பார்கள். தண்ணீரை முகந்து பாடுவதால் இப் பாட்டை 'முகவை' என்றனர்.

குளிர்ந்தநதி பன்னிரெண்டு[தொகு]

1. ஆன்பொருநை (ஆம்ராந்து, ஆம்பிராநதி, அமராவதி), 2. காஞ்சி (நொய்யல்), 3. வானி (வவ்வானி, பவானி), 4. பொன்னி (காவேரி), 5. சண்முகநதி, 6. குடவனாறு (கொடவனாறு), 7. நன்காஞ்சி (நங்காஞ்சி, நஞ்சங்கையாறு), 8. மணிமுத்தாறு (திருமணிமுத்தாறு) 9. மீன்கொல்லிநதி 10. சரபங்கநதி 11. உப்பாறு 12. பாலாறு

மூதுரை[தொகு]

கொங்கு நாடு குறித்த மூதுரை : [5]

கொங்கு மலிந்தால் எங்கும் மலியும்
கொங்கு செழித்தால் எங்கும் செழிக்கும்

கொங்குநாட்டில் உள்ள மாவட்டங்கள்[தொகு]

உதகமண்டலம் (நீலகிரி மாவட்டம்),கோயம்புத்தூர் மாவட்டம், திருப்பூர் மாவட்டம், ஈரோடு மாவட்டம், நாமக்கல் மாவட்டம், சேலம் மாவட்டத்தின் சில பகுதிகள், திண்டுக்கல் மாவட்டத்தின் சில பகுதிகள், கரூர் மாவட்டத்தின் சில பகுதிகள்

மதுரை நாயக்கர்களின் பாளையக்காரர்[தொகு]

கொங்கு நாட்டில் 17ஆம் நூற்றாண்டில் மதுரை நாயக்கர்களின் ஆளுமை 1659 இல் தொடங்கி 1672 இல் முடிவடைந்தது.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

குறிப்புகள்[தொகு]

 1. முனைவர் ந. ஆனந்தி, கார்மேகக் கவிஞர் இயற்றிய கொங்கு மண்டல சதகம் மூலமும் தெளிவுரையும், வெளியீடு சாரதா பதிப்பகம், சென்னை, 2008
 2. கொங்கு நாட்டு வரலாறு-பக்கம் -126 - ஆசிரியர்- கோ. ம. இராமச்சந்திரன் செட்டியார்- அண்ணாமலைப் பல்கலைக் கழக வெளியீடு-1954
 3. 3.0 3.1 http://princelystatesofindia.com/Polegars/polegars.html
 4. http://princelystatesofindia.com/Polegars/palani.html
 5. குமுதம் ஜோதிடம்; 6. திசம்பர் 2013; சித்தர்கள் தவமியற்றும் சிவன் மலை! கட்டுரை; பக்கம் 4,5,6;
 6. http://books.google.co.in/books?id=vERnljM1uiEC&pg=PA61&dq=namakkal+ramachandra&hl=ta&sa=X&ei=-HotT_v1DIPnrAf9l_nADA&ved=0CC0Q6AEwAA#v=onepage&q=namakkal%20ramachandra&f=false
 7. http://www.indianetzone.com/47/history_namakkal_district.htm

ஆதாரங்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கொங்கு_நாடு&oldid=2538718" இருந்து மீள்விக்கப்பட்டது